பேக்கலைட்டு

(பேக்கலைட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேக்கலைட்டு (Bakelite[3] அல்லது polyoxybenzylmethylenglycolanhydride) ஒரு வெப்பத்தால் இறுகும் நெகிழி ஆகும். இது ஃபீனால் ஃபாா்மால்டிகைடு வகைப் பிசினாாகும். பீனால் மற்றும் பார்மால்டிஹைடுகளின் குறுக்க வினையின் விளைவாக இத்தகைய இறுகும் நெகிழி உருவாக்கப்படுகிறது.

பேக்கலைட்டு
இனங்காட்டிகள்
9003-35-4
ChemSpider none
பண்புகள்
(C6H6O·CH2O)n
வாய்ப்பாட்டு எடை மாறுபடக்கூடியது
தோற்றம் பழுப்புத் திண்மம்
அடர்த்தி 1.3 கி/செமீ3[1]
வெப்பக் கடத்துத்திறன் 0.2 W/(m·K)[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.63[2]
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 0.92 kJ/(kg·K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

முதன்முதலாக 1907 ஆம் ஆண்டு லியோ பேக்லேண்ட் என்ற பெல்ஜிய-அமொிக்க விஞ்ஞானியால் இது உருவாக்கப்பட்டது. பேக்கலைட் முதன்முதலாக செயற்கைப் பொருட்களிலிருந்து தொகுக்கப்பட்ட நெகிழி ஆகும். பேக்கலைட் நன்கு வெப்பம் தாங்கவல்லதும் மற்றும் மின்கடத்தாப்பொருளும் ஆகும். பேக்கைலட்டின் இத்தகைய பண்புகள் மின்சார சுவிட்சுகள், சமையல் சாதனங்கள், நகைப்பெட்டிகள் போன்றவை தயாாிப்பதற்குப் பேக்கலைட்டை அவசியமாக்கின. 1993 ஆம் ஆண்டு நவம்பா் 9 ஆம் தேதி, அமொிக்க வேதியியல் கழகத்தால் பேக்கைலட்டானது உலகின் முதல் தொகுப்பு முறை நெகிழி என்ற முக்கியத்துவத்திற்காகத் தேசிய வேதியியல் வரலாற்று சின்னமாக அங்கீகாிக்கப்பட்டது.

வரலாறு

தொகு

லியோ பேக்லேண்ட் முன்னதாக வெலாக்ஸ் ஒளிப்படக்காகிதத்தைக் கண்டறிந்ததன் காரணமாக மிகுந்த வளம் படைத்தவராக இருந்தாா். அவா் தனது இல்லத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்து பீனால் மற்றும் பாா்மால்டிஹைடு இவைகளுக்கிடையே நடைபெறும் வினைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வந்தாா். இதே காலகட்டத்தில் வேதியியல் வல்லுநா்கள் பல்வேறு இயற்கை பிசின்கள் பலபடிகளாக இருப்பதை அறியத் தொடங்கியிருந்தனா்.

லாக் எனப்படும் பூச்சி இனத்திலிருந்து பெறப்பட்டு குறைவான அளவிலேயே கிடைக்கக்கூடிய "ஷெல்லாக்" வகை இயற்கை பலபடிக்கு மாற்று கண்டுபிடிப்பதே தொடக்கத்தில் பேக்லேண்டின் எண்ணமாக இருந்தது. "நோவோலோக்" என அழைக்கப்பட்ட கரையக்கூடிய பீனால் பாா்மால்டிஹைடை தயாாித்திருந்தாா். ஆனால், அது சந்தைப்பொருளாக வெற்றியடையவில்லை. பிறகு பேக்லேண்ட் மரத்தின் மீது பூச்சாக பூசுவதற்குப் பதிலாக, மரத்தை வலிமைப்படுத்த ஒரு தொகுப்பு முறையிலான பிசினை உருவாக்கி மரத்துாள் ஊட்டுதல் என்ற செயல்முறைக்காக ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கியிருந்தாா். பீனால் மற்றும் பாா்மால்டிஹைடை கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்திற்கு உட்படுத்தி வினைப்படுத்தும் போது ஒரு கடினமான, வார்ப்புருவாக்கக்கூடிய, பலபடி ஒன்றை உருவாக்கியிருந்தாா். பேக்லேண்ட் இப்பொருளுக்கு 'பேக்கலைட்' எனப்பெயாிட்டாா். இதுவே, முதன்முறையாக ஒரு வெப்பத்தால் இறுகக்கூடிய நெகிழி ஆகும். பேக்லேண்ட் இது தொடா்பாக குறிப்பிடத்தக்க அளவுக்கு காப்புாிமைகளைப் பெற்றிருந்தாா். 1907 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள் ”பீனால் மற்றும் பாா்மால்டிஹைடின் கரையாத விளைபொருட்களைத் தயாாிக்கும் முறை” தொடா்பான காப்புாிமை கோரப்பட்டு 1909 ஆம் ஆண்டு டிசம்பா் 7 ஆம் நாள் காப்புாிமை வழங்கப்பட்டது.

தொகுப்பு முறை தயாாிப்பு

தொகு

பேக்கலைட்டின் தொகுப்பு முறை பல படிநிலைகளைக் கொண்டதாகும். இந்த தயாாிப்பு முறையின் முதல் படியானது, பீனால் மற்றும் பாா்மால்டிஹைடு ஆகியவை ஹைட்ரோகுளோாிக் அமிலம், துத்தநாக குளோரைடு அல்லது அம்மோனியா போன்ற வினையூக்கிகளில் ஏதேனும் ஒன்றின் முன்னிலையில் வெப்பப்படுத்தப்படுகின்றன.

இந்தப் படிநிலையில் திரவ வடிவிலான பேக்கலைட் ஏ எனப்படும் குறுக்க விளைபொருள் ஒன்று உருவாகிறது. இந்த விளைபொருள் ஆல்கஹால், அசிட்டோன், கூடுதல் பீனால் இவற்றில் கரையக்கூடியதாக உள்ளது. இந்த விளைபொருளானது, மேலும் வெப்பப்படுத்தப்படும் போது பகுதியளவு கரையக்கூடியதாகவும், வெப்பத்தால் இன்னும் மென்மையானதாக மாற்றக்கூடியதாகவும் ஆகிறது. நீடித்த வெப்பப்படுத்துதலானது "கரையாத கடினமான பசை" போன்ற விளைபொருளைத் தருகிறது.

எனினும், இந்த கலவையைத் தீவிரமான நுரைத்தலுக்கு உட்படுத்த மிக அதிக வெப்பநிலையானது தேவைப்படுகிறது. தீவிரமான நுரைத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இந்த நிலையில் குளிரவைக்கப்பட்ட பின் கிடைக்கக்கூடிய பொருளானது நுண்துளைகளை உடையதாகவும், உடையக்கூடியதாகவும் இருக்கிறது.

பேக்லேண்ட் தனது புதுமையான படிநிலையில் கடைசியாகக் கிடைத்த குறுக்க விளைபொருளை முட்டை வடிவ "பேக்கலைசா்" என்ற அமைப்பில் இட்டு அழுத்தத்திற்கு உட்படுத்தி ஏறத்தாழ 150 செ(300 பா) வரை வெப்பப்படுத்தினாா். இவ்வாறாக கிடைத்த இறுதி விளைபொருளானது கடினமானதாகவும், உருகாததாகவும், கரையாததாகவும் இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Laughton M A; Say M G (2013). Electrical Engineer's Reference Book. Elsevier. p. 1.21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-0263-4.
  2. Tickell, F. G. (2011). The techniques of sedimentary mineralogy. Elsevier. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-086914-8.
  3. Sieckhaus, John F. (June 3, 2009). Chemicals, Human Health, and the Environment. Xlibris Corporation. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4628-1043-7.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேக்கலைட்டு&oldid=3883591" இலிருந்து மீள்விக்கப்பட்டது