பேச்சு:அகமுடையார்
இக்கட்டுரைகளில் உள்ள கருத்துகளுக்கு சான்றுகோள்கள் தருவது தேவை. --செல்வா 13:47, 17 மே 2008 (UTC)
கட்டுரையின் பெரும் பகுதி தேவர் இனம் குறித்ததாகவே உள்ளது. கள்ளர், மறவர், அகமுடையர் கட்டுரைகளைத் தேவர் கட்டுரைக்கே வழிப்படுத்தி அங்கு உட்பகுதிகளில் இப்பிரிவுகள் குறித்துச் சொல்லலாம். --ரவி 16:37, 17 மே 2008 (UTC)
- தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் தேவர் எனும் சாதிப் பெயர் இல்லை. எனவே தனித்தனிக் கட்டுரைகளாக இருப்பதுதான் நல்லது. மேலும் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள பல தகவல்கள் ஆதாரமின்றி உள்ளது. தகுந்த ஆதாரங்களைச் சேர்த்தால் சிறப்பாக இருக்கும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:08, 25 சூன் 2011 (UTC)
நபர்கள் *இது போன்ற சாதிகள் தொடர்பான கட்டுரைகளில் இவ்வளவு நபர்கள் தேவைதானா?*
தொகுஇது போன்ற சாதிகள் தொடர்பான கட்டுரைகளில் இவ்வளவு நபர்கள் தேவைதானா? சாதியைப் பற்றிய உள்ளடக்கத்தை விட பெயர்கள்தான் அதிகம் உள்ளன. மேலும் அதற்கு தொகுப்புப் போர்கள் வேறு நடைபெறுகிறது. இது போன்ற சாதி கட்டுரைகளில் ஆதாரமில்லாமல் (அல்லது blog ஆதாரங்களைக் கொண்டு) உள்ள பெயர்களை உடனே நீக்கலாமா? (இக்கட்டுரையில் இருந்து தற்போது நீக்கப்பட்டது: தா.கிருட்டிணன் (மு.க.அழகிரியால் கொலை செய்யப்பட்டவர்), அகமுடைய தேவரின் அரசமர நண்பர்கள் (உள்ளிக்கோட்டை,மன்னார்குடி) )--சண்முகம்ப7 (பேச்சு) 15:26, 30 சூலை 2012 (UTC)
- தகுந்த ஆதாரமின்றி இருக்கும் பெயர்களை உடனடியாக நீக்க என்னுடைய முழு ஆதரவு. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:25, 31 சூலை 2012 (UTC)