பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:44, 14 மே 2007 (UTC)Reply

தலைப்பு மாற்றம் தொகு

அகரம்+ஆதி=அகராதி+இயல்=அகராதியியல் என்ற பொருளில் இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் சிறந்த அறிஞருள் ஒருவரான பாவாணர், 'ஆதி' என்ற அயல் மொழிச்சொல்லுக்கு மாற்றாக 'முதலி' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அதனால் 'அகரமுதலியியல்' என்றும் கூறுவர். பெயர் எப்படி இருப்பினும், இத்துறையில் நோக்கம் யாதெனில், ஒரு சொல்லின் வரலாறு, பல்வேறு காலக்கட்டத்தில் அதன் மாறுதல், வளர்ச்சி, எடுத்துக்காட்டுகள் என பல்வேறு கூறுகளைக் கொண்டு, அச்சொல்லின் பொருளை ஆயும் துறையே ஆகும். இன்றைய உலகில் இது கணினி மற்றும் மொழியியல் கூறுகளைக் கொண்டு, ஒவ்வொரு சொல்லும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அந்த ஆய்வில் பிறமொழியில் இருக்கும் பொருத்தமான சொல்லோடும் ஒப்பிடப்படுகிறது. எனவே, இந்த புதிய அறிவியில் துறையானது, சொற்களை எளிதாகக் காணும் வகையில் முன்பு அமைக்கப்படும் அகர எழுத்தை அடிப்படையாகக் கொண்டதாக இல்லை. மாறாக சொல்லொன்றின் பொருளை முதன்மையாகக் கொண்டு, இத்துறைய வளர்ந்து வருகிறது. நமது விக்கித்தரவிலும் இது குறித்த முழுமையான புதிய பிரிவு[1], இன்னும் 4,5மாதங்களில் வர உள்ளது. எனவே, இதற்கு பொருத்தமான தலைப்புக்கு இது மாற்றப்பட வேண்டும். நம் தமிழ் விக்கிப்பீடியருள் ஒருவரான உலோ. செந்தமிழ் கோதை அய்யா அவர்களுடனும், இன்னும் சில மொழியில் பேராசிரியர்களுடன் உரையாடிய பொழுது, இத்தலைப்பை, சொற்பொருளியல் என்று மாற்றப்படுவதே பொருத்தமானது என அறியப்படுகிறது. தங்களின் மேலான எண்ணங்களைத் தெரிவிக்கவும். விக்கித்தரவில் இதற்குரிய புதிய பிரிவு வேகமாக வளர்ச்சிப்பெற இருப்பதால், இது குறித்த பல கட்டுரைகள் மேம்படுத்த வேண்டியுள்ளது. [2]மேலும், புதிய பல அடிப்படை கட்டுரைகள் உருவாக்கப்பட உள்ளன. எனவே, அருள்கூர்ந்து தங்களது எண்ணங்களைத்தெரிவிக்கவும். தமிழ் விக்சனரியின் எதிர்காலம் இங்கே தொடங்கப்பட வேண்டும் என்பதால் இதனை முன்மொழிகிறேன்.--உழவன் (உரை) 09:22, 14 ஏப்ரல் 2019 (UTC)

  1. சொற்பொருளியல் என்ற சொல் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ளதே. அகராதி என்பது வடமொழி மருவல். வட மொழிகளில் அகாராதி என்று பயன்படுத்தப்படுகிறது. இங்கே ஆதி என்றால் 'முதலானவை, போன்றவை' என்று பொருள். இங்கே தமிழில் அகரம் முதலானவை என்று பொருள் வருவது உண்மையிலேயே சிக்கலானது. இது எழுத்துக்களைப் பற்றிப் பேசுவதன்று. மாறாக சொற்களைப் பற்றியே பேசுகிறது. எனவே, சொற்பொருளியல் என்பது சாலச் சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 01:47, 16 ஏப்ரல் 2019 (UTC)
    1. //சொற்பொருளியல் என்ற சொல் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ளதே. // எங்குள்ளது? நான் தேடிய பொழுது கிடைக்காமையால் இவ்வினா.--உழவன் (உரை) 07:06, 16 ஏப்ரல் 2019 (UTC)
    2. இதோ. 1. 2. 3. 4. 5. 6. 7. சொல்லுக்குப் பொருள் கூறும் கலை என்ற பொருளில் வந்திருக்கிறது. எனவே, இவற்றுடன் முரண்படாதிருக்க சொற்பொருட்கோவை என்று கூறலாமா?--பாஹிம் (பேச்சு) 01:27, 17 ஏப்ரல் 2019 (UTC)
    3. பல சொற்களை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறேன். 'பல கோவைகள் அடங்கியதுதானே, இயல்' எனவே, 'இயல்' என்பதையே, பல 'இயல்களைப்போல', இவ்விடத்தில் கையாள எண்ணுகிறேன். புதியவர்களுக்கு எளிதாக தொடர்பு படுத்திக் கொள்ள, இங்ஙனம் முடிவெடுத்தேன்.உழவன் (உரை) 02:55, 17 ஏப்ரல் 2019 (UTC)
  1. semantics என்ற சொல்லுக்கே சொற்பொருளியல் என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது சரியென்றே எனக்குப்படுகிறது. lexicography என்ற சொல்லுக்கான //இத்துறையில் நோக்கம் யாதெனில், ஒரு சொல்லின் வரலாறு, பல்வேறு காலக்கட்டத்தில் அதன் மாறுதல், வளர்ச்சி, எடுத்துக்காட்டுகள் என பல்வேறு கூறுகளைக் கொண்டு, அச்சொல்லின் பொருளை ஆயும் துறையே ஆகும்.// இந்த வரைவிலக்கணத்தை எங்கிருந்து பெற்றீர்கள்? lexicography is the art or craft of compiling, writing and editing dictionaries. இது அகராதியியல் என்ற சொல்லுக்கே மிகவும் பொருந்துகிறது.--Kanags (பேச்சு) 08:23, 17 ஏப்ரல் 2019 (UTC)
    1. தொடக்கத்திலேயே எனது எண்ணங்களைத் தெரிவித்துள்ளேன். இது பெற்றதல்ல. எண்ணங்கள். இப்பேச்சுப்பக்கத்தில் எனது எண்ணங்குவியலாகத் தந்துள்ளேன். மொழியியல் பற்றிய பதங்கள் ஏறத்தாழ ஆயிரம் உள்ளன. அவற்றைக்குறித்து கற்க வேண்டும் என்று எண்ணத்தைத் தூண்டியுள்ளீர்கள். இதுபோல தமிழில் உருவாக்கிய பின்பு, தெளிவுரையைத் தெரிவிக்கிறேன். விக்கித்தரவு என்பது பலவிதத் தானியக்கப்பணிக்கான விக்கித்தரவுகளைக் கோர்க்கும் கோப்பகம். அங்கு ஒரு சொல்லின், பல்வேறு பொருள்கள், அதன் பொருண்மைகளோடு ஒப்பிடப்பட்டு, மற்றொரு மொழியின் சொல்லோடு, இணைக்கப்பட உள்ளது. தமிழ் சொல்லுக்கு பலவித பொருள்கள் இருப்பதால், அப்பணிச் சிக்கலாகவே இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், தொடக்கநிலையில் நாமும் நம் மொழிக்காக ஈடுபட வேண்டியுள்ளது. தலைப்பை மாற்றுவது மட்டும் எனது நோக்கமல்ல. அது இன்னும் தெளிவாக இருப்பது அடிப்படை அவசியமென நான் எண்ணுகிறேன். lexicology, lexicography, dictionary(compiled), undocumented (uncompiled), semantic(words relations with in a sentence) போன்ற மொழியியல் சொற்களில் எனக்கு இன்னும் மயக்கநிலையே உள்ளது. இந்நிலையில் விக்கித்தரவுக்குரிய விக்சனரி வளத்தை, எந்த தரவு வடிவில் அமைக்க வேண்டும் என்றமுனைப்புகளே (தமிழ் 'லெக்சிம்கள்' )மேலோங்கியுள்ளன. எனவே, உங்களைப் போன்று பிறரும் பேசினால் எனக்குத் தெளிவு பிறக்கும் என்றே எண்ணுகிறேன். விக்சனரியில் இதற்கான திட்டப்பக்கத்தினை உருவாக்க உள்ளேன். அதில் இணையக் கோருகிறேன்.--உழவன் (உரை) 15:16, 18 ஏப்ரல் 2019 (UTC)
  1. https://blog.wikimedia.de/2019/03/25/lexicographical-data-on-wikidata-words-words-words/
  2. https://www.wikidata.org/wiki/Wikidata:Wiktionary/History
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகராதியியல்&oldid=2694897" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அகராதியியல்" page.