பேச்சு:அபிவிருத்தி உளவியல்

வளர்ச்சி உளவியல்.--Kanags \உரையாடுக 22:24, 26 திசம்பர் 2014 (UTC)Reply

இலங்கை வழக்கு அபிவிருத்தி உளவியல். வேண்டுமானால் வளர்ச்சி உளவியல் வழிமாற்று உருவாக்கலாம்.--AntonTalk 03:51, 27 திசம்பர் 2014 (UTC)Reply
அபிவிருத்தி தமிழ்ச்சொல் மூலமல்ல. வளர்ச்சி உளவியல் என்பதையே முன்னிலைப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 04:58, 27 திசம்பர் 2014 (UTC)Reply
இலங்கை வழக்குக்கு ஏற்பவே தலைப்பிட்டேன். இவ்விடயத்தில் தமிழக-இலங்கை தலைப்பிடல் கொள்கையின்படி செயற்படுதல் வேண்டும். மேலும் இங்கு தமிழ்ச்சொல் மூலமற்ற பல தலைப்புக்கள் உள்ளன. ஏன் தமிழ் இலக்கணத்தை அடியோடு மறந்த சொற்கள் பல உள்ளனவே. --AntonTalk 05:22, 27 திசம்பர் 2014 (UTC)Reply
தமிழ் இலக்கண மீறல்களை இங்கு இழுக்காதீர்கள். அது வேறு விடயம். ஆனால், தூய தமிழ்ச் சொல் ஒன்று அதிக பயன்பாட்டில் இருக்கும் போது வேறு சொல்லை முதன்மைப் படுத்துவது முறையல்ல என்பதையே சொல்ல வந்தேன்.--Kanags \உரையாடுக 05:27, 27 திசம்பர் 2014 (UTC)Reply
வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பதை "வீதி வளர்ச்சி அதிகார சபை" என்றால் இலங்கையில் road growth authority என்றே விளங்கிக் கொள்வர். தூய தமிழ் இருக்க வேண்டும் என்பதில் உடன்பாடே. ஆனால் முற்றிலும் விளங்கிக் கொள்ளதவாறு அல்லது வேறு அர்த்தத்தில் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அபிவிருத்தி என்பது இலங்கையில் அதிக பயன்பாட்டில் உள்ளது. மேலும் தமிழ் இலக்கண மீறல்கள் தூய தமிழ் அல்லவே. --AntonTalk 05:40, 27 திசம்பர் 2014 (UTC)Reply
உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள்.என்பதே சரியான தலைப்பாக இருக்கலாம். பார்க்க எரிக்சனின் சமூக உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள்--Krishnamoorthy1952 \உரையாடுக 12:24, 31 திசம்பர் 2014 (UTC)Reply
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 22:20, 30 திசம்பர் 2014 (UTC)Reply
எரிக்சனின் சமூக உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள் என்று தலைப்பிட்டதே நான்தான். உளவியலில் உள்ள முக்கிய தலைப்பு பொருள் விளங்காது இருத்தலாகாது. மேலும் இவ்விரண்டும் வெவ்வேறு கருத்துருக்கள் கொண்டவை. எரிக்சனின் வளர்ச்சிப் படிநிலைகள் என்பதன் கருத்து அபிவிருத்தி உளவியல் என்பதில் ஒர் அங்கமே. --AntonTalk 21:29, 30 திசம்பர் 2014 (UTC)Reply

@Kanags:வளர்ச்சிசார் உளவியல் என்பதே சரியாக இருக்கும். கல்வி உளவியல் பாட நூல்களில் இந்த வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.--TNSE Mahalingam VNR (பேச்சு) 09:11, 3 சனவரி 2020 (UTC)Reply

[அபிவிருத்தி உளவியல்] - The term is common in SL. --AntanO (பேச்சு) 17:50, 4 சனவரி 2020 (UTC)Reply

விரிவாக்கக் குறிப்புகள்

தொகு

en:Category:Developmental psychologists, en:List of developmental psychologists என்பனவற்றைக் காண்க--உழவன் (உரை) 00:52, 14 சனவரி 2020 (UTC)Reply

வளர்ச்சி உளவியலாளர்கள்

தொகு

இத்துறை அறிஞர்கள் குறித்தவைகளை விரிவாக்க, மேற்கண்ட குறிப்புகள் உதவும். கையாள மீட்டு வைத்துள்ளேன்.--உழவன் (உரை) 00:46, 14 சனவரி 2020 (UTC)Reply

  1. Iskandar, Albert (2006). "Al-Rāzī". Encyclopaedia of the history of science, technology, and medicine in non-western cultures (2nd). Springer. 155–156. 
  2. Vernet 1996, ப. 788 Sabra 2008, Kalin, Ayduz & Dagli 2009 Dallal 1999
  3. Thorndike, Edward L. (1925). National Academy of Sciences Biographical Memoir of Granville Stanley Hall (PDF). National Academy of Sciences.
  4. "Erik Erikson, 91, Psychoanalyst Who Reshaped Views of Human Growth, Dies". The New York Times. 13 March 1994. https://www.nytimes.com/1994/05/13/obituaries/erik-erikson-91-psychoanalyst-who-reshaped-views-of-human-growth-dies.html?pagewanted=all. 
Return to "அபிவிருத்தி உளவியல்" page.