பேச்சு:அபுதாபி (அமீரகம்)

இதன் தலைப்பு அபுதாபி அமீரகம் என்றிருக்கலாமே. அடைப்புக்குறிகள் இங்கு தேவை தானா?-Kanags \பேச்சு 19:51, 7 பெப்ரவரி 2008 (UTC)

நீங்கள் சொல்வது சரிதான். மாற்றிவிடலாம். மயூரநாதன் 04:13, 8 பெப்ரவரி 2008 (UTC)

இடத்தைக் குறிக்கும் புள்ளி சரி செய்யப்பட்டுள்ளது. சில இற்றைப் படுத்தல்களைச் செய்தேன் இதந் மூலம் வேறு குறைகள் தோன்றியதா என பார்க்கவும்.--Terrance \பேச்சு 04:59, 8 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி டெரன்ஸ். மயூரநாதன் 07:48, 8 பெப்ரவரி 2008 (UTC)

தலைப்பு தொகு

அபுதாபி என்பது பிழை. அரபு மொழியை ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டும் போது Abu Dhabi என்று எழுதியிருப்பதால் dh என்பது தமிழில் த என்பதாக வந்தாக வேண்டுமென்னும் ஆங்கிலமைய வாதம் தவறானது. அரபு மொழிப் பெயரிலுள்ள ظ என்ற எழுத்து தமிழில் ழ என்பதாகத்தான் அரபு மொழிபெயர்ப்பிலும் எழுத்துப் பெயர்ப்பிலும் பன்னெடுங்காலமாக வழங்கப்படுகிறது. அரபு மொழி தெரியாதவர்கள் எழுதும் போது ஏற்படும் தவறுகளிலொன்றுதான் அபுதாபி என்று எழுதியிருப்பது. நான் மேலே சுட்டிக் காட்டிய எழுத்துக்கூட்டல் முறையை அரபு - தமிழ் நேரடி மொழிபெயர்ப்பு நூல்களிற் காணலாம். உதாரணமாக, சென்னையைச் சேர்ந்த றஹ்மத் அறக்கட்டளையினர் வெளியிட்ட ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதீ, முஸ்னத் அஹ்மத் போன்ற நூல்களில் மேற்படி முறையைக் காணலாம்.--பாஹிம் (பேச்சு) 07:26, 10 நவம்பர் 2014 (UTC)Reply

தலைப்பு மாற்ற எனக்கு உடன்பாடு இல்லை. அபுதாபி என்பது தமிழில் வழக்கில் உள்ள சொல். அபுதாபியில் உள்ள தமிழர்கள் அபுதாபி என்றே தமிழில் கூறுகிறார்கள். அரபு மொழியில் இதன் ஒலிப்பெயர்ப்பை கட்டுரையில் முதல் வரிகளில் தாருங்கள். எவ்வாறு அரபியில் அழைக்கிறார்கள் என்று கூறினால் வழிமாற்று ஏற்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 07:37, 10 நவம்பர் 2014 (UTC)Reply

வழக்கிலுள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். Abū Ẓabī, Emirati pronunciation [ɐbuˈðˤɑbi] என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்காமலே மாற்றியுமுள்ளீர்கள். தமிழக முஸ்லிம்கள் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாகத் "தமிழில்" எழுத்துக்கூட்டும் முறையைப் பார்க்காமல், புதிதாக ஆங்கில வழியில் மொழிவதைத்தான் வழக்கிலுள்ளதாகக் கருதிக் கொள்வது முற்றிலும் தவறு.--பாஹிம் (பேச்சு) 07:52, 10 நவம்பர் 2014 (UTC)Reply

ஆங்கிலத்தில் பார்த்தேன். அபுதாபி நகரக் கட்டுரையில் எழுதியிருக்கிறே. இதற்கு இன்னும் எழுதவில்லை. நீங்களே எழுதியிருக்கலாம். நீங்கள் கூறுவதன்படி பார்த்தால், உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்களையும் உள்ளூர் ஒலிப்பெயர்ப்புக்கு (இங்கிலாந்து உட்பட) மாற்ற வேண்டி இருக்கும். அனைத்து நாடுகளுக்கும் மாற்ற ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். வாக்கெடுப்புக்கு விட்டுத் தீர்மானிக்கலாம்.--Kanags \உரையாடுக 08:19, 10 நவம்பர் 2014 (UTC)Reply

ஏற்கனவே தமிழில் உள்ளூர்ப் பெயருக்குச் சரியான ஒரு பெயரும் பிழையான ஒன்றும் என இரு வழக்குகள் இருந்தால், உள்ளூர்ப் பெயருக்கு ஏற்றவாறு சரியானதையே எழுத வேண்டும். இதைத்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். கியூபா என்று பரவலான புழக்கத்திலிருந்தாலும் உண்ணாட்டுப் பெயருக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளமையையும் கவனிக்க.--பாஹிம் (பேச்சு) 10:55, 10 நவம்பர் 2014 (UTC)Reply

தலைப்பு மாற்ற அபுதாபியில் பல ஆண்டுகள் வசித்த எனக்கு உடன்பாடு இல்லை. அபுதாபி என்பது தமிழில் வழக்கில் உள்ள சொல். அபுதாபியில் உள்ள தமிழர்கள் அபுதாபி என்றே தமிழில் கூறுகிறார்கள். அபுதாபி என்பதே சரியானது.--ஹிபாயத்துல்லா (பேச்சு) 16:47, 10 நவம்பர் 2014 (UTC)Reply
அபுதாபி என்னும் பெயர் நீண்ட காலமாகவே தமிழில் புழக்கத்தில் உள்ள சொல். இந்தியா, இலங்கை போன்ற தமிழ் வழங்கும் நாடுகளில் மட்டும் அல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளிலும் அபுதாபி என்ற வழக்கே புழக்கத்தில் உள்ளது. இது எவ்வித வேறுபாடுகளும் இன்றி நிலைத்துவிட்ட சொல். வழக்கில் உள்ள இடப்பெயர்களை எல்லாம் மாற்றி அந்தந்த உள்ளூர் மொழிப் பெயர்களையே பயன்படுத்த வேண்டும் என்பது சரியான அணுகுமுறையாகத் தெரியவில்லை. இது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும். பெயரை மாற்றுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. --மயூரநாதன் (பேச்சு) 03:23, 11 நவம்பர் 2014 (UTC)Reply

அப்படியானால் கியூபா என்று அதிகமாகப் புழக்கத்திலுள்ளது எதற்காக மாற்றப்பட்டது? கூபா என்ற பெயரைப் பார்த்ததும் இராக்கிலுள்ள கூபா நகரைத்தான் குறிக்கிறது என்று எண்ணி விட்டேன். அடுத்தது, வழக்கிலுள்ளது என்றால் மூல மொழிக்கு இசைவாக முதலிலிருந்து வழக்கிலுள்ளதை எடுப்பதா அல்லது மூல மொழியைத் திரித்துப் பிற்காலத்தில் பரவலாகி விட்டதை எடுப்பதா?--பாஹிம் (பேச்சு) 03:32, 11 நவம்பர் 2014 (UTC)Reply

கியூபா என்பது கூபாவாக மாற்றப்பட்டதை நான் கவனிக்கவில்லை. அந்த மாற்றமும் சரியல்ல என்பதே எனது கருத்து. வேறு பிரச்சினைகள் ஏதாவது இருந்தாலேயொழிய வழக்கிலுள்ள பெயர்களை உள்ளூர் மொழி உச்சரிப்புக்கு மாற்றுவது கூடாது. -- மயூரநாதன் (பேச்சு) 04:01, 11 நவம்பர் 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அபுதாபி_(அமீரகம்)&oldid=1753210" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அபுதாபி (அமீரகம்)" page.