பேச்சு:அயலூர் பச்சைநாயகியம்மன் கோயில்

அயலூர் பச்சைநாயகியம்மன் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@Neechalkaran:;

தகவல் பெட்டியில் கோவில் என்ற சொல் இல்லை.--நந்தகுமார் (பேச்சு) 07:43, 6 மார்ச் 2017 (UTC)
  • \\இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நிர்வகிக்கப்படுகிறது.\\ என்பதில்

”நிர்வகிக்கப்படுகிறது” என்பது மட்டும் ஒரு வாக்கியமாகத் தரப்பட்டுள்ளது சரியான வாக்கிய அமைப்பில்லை. ’இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.’ என மாற்றலாம்.

  • \\இக்கோயிலில் பச்சைநாயகி அம்மன் சன்னதி உள்ளது.\\- பச்சைநாயகியம்மன் கோயில் கட்டுரையில் பச்சைநாயகி அம்மன் சன்னிதி உள்ளது என எழுதுவது கட்டுரையின் உள்ளடக்கத்தை அதிகப்படுத்த வலிந்து சேர்க்கப்பட்ட வாக்கியம் போன்றுள்ளது.
  • \\இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நிர்வகிக்கப்படுகிறது\\. இச்செய்தி ’கோயில் அமைப்பு’ என்ற துணைத்தலைப்பில் பொருந்தவில்லை. ’கோயில் நிர்வாகம்’ என்ற துணைத் தலைப்பில் இதனைத் தரலாம்.
  • ’ஒருவேளை’ என்பதுபோல், ’ஒரு காலப் பூசை’ என்பதை ’ஒருகாலப் பூசை’ எனலாம் என நினைக்கிறேன். ஆனால் இலக்கணப்படி அது சரியானதா என்று எனக்குத் தெரிவில்லை. இவை எனது பணிவான பரிந்துரைகள்.--Booradleyp1 (பேச்சு) 13:20, 6 மார்ச் 2017 (UTC)
  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:24, 6 மார்ச் 2017 (UTC)
தகவற்பெட்டியில் சட்டமன்றத்தொகுதி சிவப்பிணைப்பாக வருவதையும் சரிசெய்ய வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 13:32, 6 மார்ச் 2017 (UTC)
ஒருகாலப் பூசை என்றிருப்பதே சரி. --Kanags \உரையாடுக 09:12, 18 மார்ச் 2017 (UTC)
  அயலூர் பச்சைநாயகியம்மன் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "அயலூர் பச்சைநாயகியம்மன் கோயில்" page.