பேச்சு:அரசின்மை
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Sundar
இந்த சொல் அதன் கருத்துக்கு அவ்வளவு பொருந்தி வரவில்லை. --Natkeeran 20:25, 28 செப்டெம்பர் 2008 (UTC)
- இது ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரையில் உள்ளதுதான். சொல் பொருளுக்குப் பொருத்தமாக இருப்பதுபோல் தான் தெரிகிறது. அ + ராஜகம் (அரசு இன்மை). ஆனால், வழக்கமாக நாங்கள் இச் சொல்லுக்குக் கருதும் பொருள்தான் வரவில்லை. அத்தகைய ஒரு பொருள் ஆங்கில விக்கிக் கட்டுரையில் எவ்விடத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை வழக்கில் பொருள் திரிபடைந்து விட்டதோ தெரியவில்லை. மேலும் ஆராய்ந்து பார்க்கலாம். இதற்கு அராஜகவாதம் என்று தலைப்பிடலாமோ?மயூரநாதன் 02:39, 29 செப்டெம்பர் 2008 (UTC)
- வழக்கில் அராசகம் என்பது அட்டூழியம் என்ற பொருளில் படன்படுகிறது. இங்கு அரசின்மை என்கின்றனர். வேபிரியசு அகரமுதலியில் தன்னரசு என்று தந்துள்ளனர். -- சுந்தர் \பேச்சு 03:11, 29 செப்டெம்பர் 2008 (UTC)
- அரசின்மை என்பதே அந்தக் கோட்பாட்டின் பொருளை உணர்த்தி நிற்கிறது. தன்னரசு என்பதும் அதன் ஒரு உட்பிரிவே. --Natkeeran 00:50, 10 ஜூலை 2010 (UTC)
குறிப்புகள்
தொகுகுறிப்பிட்ட சில அராஜகவாதிகளைப் பொறுத்தவரை அராஜகத்துக்கு மேலும் சில கூடுதலான விதிகள் இருக்கக்கூடும். ஆனாலும் அவர்களுக்கு உள்ளேயே இதுகுறித்துக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. கட்டாயமான அரசு என்பதை மறுதலிப்பதைத் தவிர இதனை வரையறுக்கும் பொது நிலைப்பாடு எதுவும் அராஜகவாதிகள் மத்தியில் கிடையாது.
--Natkeeran 13:38, 10 ஜூலை 2010 (UTC)