பேச்சு:அவியல்

எனக்கு புரியவில்லை எந்த மாதிரியான மேற்கோள் வேண்டுமென்று. எந்த மாதிரியான மேற்கோள் வேண்டுமென்று தெரிந்தவர்கள் கூறுங்கள்?--நிர்மல் (பேச்சு) 02:30, 22 ஏப்ரல் 2015 (UTC)

வலைப்பூக்களை மேற்கோளாக விக்கி கருதுவதில்லை. ஏதேனும் உணவு தயாரிப்பு வழிகாட்டிப் புத்தகத்தை மேற்கோளாகக் காட்டினாலும் நன்றே. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:27, 22 ஏப்ரல் 2015 (UTC)
ஒரு மேற்கோளினை சேர்த்துள்ளேன், பாருங்கள். (அவியல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:33, 22 ஏப்ரல் 2015 (UTC)

@Arunnirml: அவியலுக்குப் புளி சேர்ப்பார்களா என்ன? இது புதிதாக உள்ளது. புளிப்பிற்காக மாங்காய் சேர்க்கப்படும். சிலர் கெட்டித் தயிரும் சேர்ப்பர். மேற்கோளில் உள்ள செய்முறையிலும் புளி இல்லை. இதேபோல அவியலுக்கு எனக்குத் தெரிந்தவரை பூண்டும் சேர்ப்பதில்லை.--Booradleyp1 (பேச்சு) 15:34, 23 ஏப்ரல் 2015 (UTC)

எங்கள் மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் புளிதான் சேர்ப்பார்கள். மாங்காய் சேர்த்தால் புளி சேர்க்க மாட்டார்கள். மேலும் மாங்காய் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே கிடைக்கும். அதாவது ஆண்டு முழுவதிற்கும் கிடைக்காது. குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது பெரும்பாலான வீடுகளில் அவியல் வைக்கும் பழக்கம் உண்டு. மேலும் பூண்டு சிறிதளவு சேர்ப்பார்கள். எனக்கு தெரிந்து எங்கள் மாவட்டத்தில் தயிர் சேர்த்துப் பார்த்தில்லை. --நிர்மல் (பேச்சு) 15:53, 23 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அவியல்&oldid=1849878" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அவியல்" page.