ஆசியப் பனை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரை இணைப்பு தொகு

இங்கு பனை மரம் (தமிழ் நாடு) என்னும் தலைப்பில் உள்ள கட்டுரையையும் பனை என்ற தலைப்பில் காணப்படும் கட்டுரையையும் இணைக்கும் படி ஒரு பதிவு இடப்பட்டுள்ளது. இக்கட்டுரை உருவாக்கும் போதே நான் இரு வேறு கட்டுரைகள் உலவுவது அறிந்துதான் இயற்றினேன். பனை என்ற தலைப்பில் எழுதப்பட்டக் கட்டுரை பொதுவானக் கட்டுரை. இதில் உலகத்தில் காணப்படும் அத்தனை பனைமரங்கள் அதன் சிறப்பு மற்றும் குறிப்புகள் இடம்பெறும். ஆனால், பனை மரம் (தமிழ் நாடு) என்ற தலைப்பில் உள்ள கட்டுரை தமிழகம் மற்றும் வட இலங்கைப் பகுதிகளிலும் காணப்படும் தனிவகை மரத்தை மட்டும் குறிக்கும். இது குறித்து விழிப்புணர்வு ஊட்டி கட்டுரையை மாற்றி அமைக்குமாறு பணிக்கிறேன். இரு கட்டுரையையும் இணைக்க வேண்டாம் என்பது என் கருத்து. நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:32, 24 ஆகத்து 2011 (UTC)Reply

விளக்கத்துக்கு நன்றி. தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பு அல்லது தமிழ்நாட்டு பனைமர வளம் போன்று அமையலாம் என்று நினைக்கிறேன். இவ்வாறு இலங்கை வடகிழக்குப் பனைமர வளம் என்றும் கட்டுரைகள் அமையலாம். பனை தமிழர் பொருளாதாரத்தில், வாழ்வியலில் முக்கியம் பெறுவதால் இக் கட்டுரைகள் பல வழிகளில் விரிபுபெறத் தக்கவை. --Natkeeran 19:05, 24 ஆகத்து 2011 (UTC)Reply

இங்கு வேறுபாட்டை உணர்த்த நினைத்தது பனை என்னும் தலைப்பில் உள்ள கட்டுரை Borassus என்னும் பேரினத்தையும் பனை மரம் (தமிழ் நாடு) என்பது Borassus flabellifer என்னும் பனை மரச்சிற்றினத்தையும் குறிக்கவே. இவ்வகைச் சிற்றினமே தமிழ் நாட்டில் பரவலாக காணப்படுவதும் நாம் அறிந்ததும் ஆகும். மேலும் பனை மரத்தில் எழுதுவதற்கு இன்னும் ஐந்து சிற்றினங்கள் உள்ளன. அவைகளும் தனித்தலைப்பில் இடம் பெறுமளவுக்குச் சிறப்பு வாய்ந்தது. --சிங்கமுகன் 08:14, 25 ஆகத்து 2011 (UTC)Reply

பனை என்ற கட்டுரை பொதுவான கட்டுரையாக அல்லாமல், Borassus flabellifer குறித்தே எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் அங்குள்ள தகவல்களை இங்கே இணைத்து விட்டு அந்தக் கட்டுரையை Borassus என்னும் பேரினம் பற்றிய கட்டுரையாக மாற்றி அமைத்தல் வேண்டும். அல்லாவிடில் இருவேறு தலைப்புக்களில் ஒரு கட்டுரையே எழுதப்பட்டு இருப்பதுபோல் தோன்றும். --கலை 14:12, 25 ஆகத்து 2011 (UTC)Reply

ஆம் ஒத்தக் கட்டுரையைப் போல் தோன்றின் அதை மாற்றலேச் சிறப்பு. --சிங்கமுகன் 04:54, 26 ஆகத்து 2011 (UTC)Reply

பனை பற்றிய இரண்டு கட்டுரைகளுமே Borassus flabellifer பற்றியே எழுதப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வகைப் பனை தமிழ் நாட்டுக்கு மட்டுமே உரியதும் அல்ல. இரண்டு கட்டுரைகளிலுமே காணப்படுவது போன்று இது தமிழ் நாட்டுக்கு வெளியே பல இடங்களிலும் பெருமளவில் வளர்கிறது. வடக்கு இலங்கையில் அங்குள்ள தமிழ் மக்களின் பண்பாட்டுடன் நெருக்கமாக இணைந்துள்ள பனைச் சிற்றினமும் இதுவே. இதனால் "பனை மரம் (தமிழ் நாடு)" என்ற பெயர் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் Borassus குறித்து ஒரு கட்டுரையும், அதன் சிற்றினங்கள் குறித்து ஆறு கட்டுரைகளும் உள்ளன. ஆனால், வளரும் இடம் குறித்த வேறுபாடுகள் தவிர அவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்துத் தகவல்கள் எதுவும் இல்லை. எனவே "பனை" என்னும் கட்டுரையின் தலைப்பை Borassus flabellifer என்னும் சிற்றினத்தைக் குறிக்க "பனை (ஆசியா)" என்று மாற்றிவிட்டு இரண்டு கட்டுரைகளையும் இணைத்து விடலாம். இப்போதைக்கு, "Borassus" என்பது குறித்து "பனை (பேரினம்)" என்ற தலைப்பில் ஒரு தனியான கட்டுரை எழுதலாம். போதிய தகவல்கள் கிடைத்தால் பிற சிற்றினங்கள் பற்றியும் "பனை (வெப்பவலய ஆப்பிரிக்கா)", "பனை (மேற்கு ஆப்பிரிக்கா)", "பனை (நியூ கினியா)", "பனை (மடகாசுக்கர்)", "பனை (சாம்பிரானோ)" என்னும் தலைப்புக்களில் கட்டுரைகளை எழுதிக்கொள்ளலாம். --மயூரநாதன் 05:35, 26 ஆகத்து 2011 (UTC)Reply

மயூரநாதன் கூறியுள்ளபடி, இரு கட்டுரைகளுமே Borassus flabellifer ஐக் குறித்தே எழுதப்பட்டு இருப்பதனால், இரு கட்டுரைகளையும் இணைப்பதே சரி என்றே எனக்கும் தோன்றுகின்றது. அத்துடன் தலைப்பையும் அவ்வாறே "பனை (ஆசியா)" என்றோ அல்லது "ஆசியப்பனை" என்றோ மாற்றி விடலாம். ஆசியப்பனை என்று முன்னரே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் பார்க்கலாம். Borassus குறித்து வேறொரு புதிய கட்டுரையை ஆக்கலாம். அதன் தலைப்பு "பனை" அல்லது "பனை (பேரினம்)" என்று அமையலாம். முடிவைக் கூறினால் தகவல்களை சேர்த்து, வரலாற்றுடன் கட்டுரைகளை இணைத்து விடுகின்றேன்.--கலை 15:12, 26 ஆகத்து 2011 (UTC)Reply

கலை, தாங்கள் சொல்வது எனக்கும் சரியெனப்படுகிறது. இரு கட்டுரைகளையும் இணைத்து பனை (ஆசியா) எனும் தலைப்புக்கு மாற்றி ஒரே கட்டுரையாக்கி விடுங்கள். அப்படியே ஆசியப்பனையிலிருந்து ஒரு வழிமாற்றையும் ஏற்படுத்தி விடுங்கள். பனை குறித்துப் புதிய கட்டுரையையும் உருவாக்குங்கள். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:45, 27 ஆகத்து 2011 (UTC)Reply

இருக் கட்டுரைகளையும் பிரித்துக் காட்டும் வண்ணம் சிறு மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளேன். இதில் உள்ள தவறுகளைக் களையும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 12:01, 27 ஆகத்து 2011 (UTC)Reply

பனை ஒரு மரம் அல்ல. அது புல்லினத்தைச் சேர்ந்தது. பொது வழக்கில் இதை மரம் என்று குறிப்பிட்டாலும், அது சரியல்ல. எனவே கட்டுரையின் தலைப்பு ஆசியப் பனை என்றே இருப்பது நல்லது. கட்டுரையின் உள்ளேயும் பனை மரம் என்னும் பயன்பாட்டைத் தவிர்த்துப் பனை என்றே குறிப்பிடலாம். --- மயூரநாதன் 14:44, 27 ஆகத்து 2011 (UTC)Reply
சிங்கமுகன் ஏற்கனவே மாற்றங்களை செய்துள்ளதால், பனை கட்டுரையில் இருக்கும், இக்கட்டுரைக்குப் பொருத்தமான தகவல்களை மட்டும் இடம் மாற்றி விடுகின்றேன். --கலை 14:21, 30 ஆகத்து 2011 (UTC)Reply

தகவற்பெட்டி மேம்பாட்டுக்கான குறிப்பு தொகு

தகவற்பெட்டியில் வரிசை, குடும்பம், பேரினம் அனைத்தும் பனை என உள்ளது. ஏன்? உழவன் (உரை) 15:36, 6 சனவரி 2024 (UTC)Reply

 Y அரேகேல்சு உருவாக்கப்பட்டு தகவற்பெட்டியில் திருத்தம் செய்தேன். உழவன் (உரை) 01:54, 21 சனவரி 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆசியப்_பனை&oldid=3872395" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆசியப் பனை" page.