ஆத்திரேலியா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கேள்வி தொகு

அகத்தியன் எல்லாவற்றையும் மாநிலங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இங்கே மண்டலங்கள், மாநிலங்கள் வித்தியாசம் தெரிகிறது. மேலும் Northern_Territory என்பதை வட ஆஸ்திரேலியா என மொழி பெயர்த்துள்ளார். இது சரியானதா? மண்டலம் என்பது பொருத்தமான சொல்லா? பிரதேசம் எனலாமா? அதாவது ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், ஆஸ்திரேலிய வட பிரதேசம் என்று மொழிபெயர்க்கலாம் என்று தோன்றுகிறது. பிரதேசத்தைவிட வேறொரு சொல்லை நற்கீரன் எங்கோ குறிப்பிட்டதாகவும் ஞாபகம். ஆனால் Territory என்ற ஆங்கிலச் சொல் குறிப்பது? கனக சிறீதரனின் பதிலையும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

Territory - ஆட்சி நிலப்பகுதி (செல்வா அவர்களின் சொல்). --Natkeeran 21:01, 13 நவம்பர் 2006 (UTC)Reply

territory என்பது மண்டலம் என்றும் பிரதேசம் என்றும் ஆஸ்திரேலியாவில் தமிழர்களால் பாவிக்கப்படுகிறது. ஆய்வாளர் ஆ. கந்தையா அவர்கள் தமது நூல்களில் மண்டலம் என்றே பரவலாகப் பாவித்து வருகிறார்.--Kanags 12:18, 14 நவம்பர் 2006 (UTC)Reply

பிரதேசம் பரவலாகப் பயன்படும் சொல்லாதலால் பயன்பட்டுக்கு இலகுவானது. என்பது என் அபிப்பிராயம். ஆட்சிநிலப்பகுதி என்பதைவிட ஆள்புலம் என்பது சுருக்கமாக இருக்கிறதே. --கோபி 13:03, 14 நவம்பர் 2006 (UTC)Reply

ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், ஆஸ்திரேலிய வட பிரதேசம் என்று பாவிப்பதில் சிறீதரனுக்கோ அகத்தியன் உட்பட ஏனையோருக்கோ ஆட்சேபனையுள்ளதா? --கோபி 13:05, 14 நவம்பர் 2006 (UTC)Reply

சில திருத்தங்கள் பரிந்துரைப்பு-1 தொகு

  • தலைப்பை ஆத்திரேலியா என மாற்றலாம்.
  • வில்லெம் ஜான்சூன் (Willem Janszoon) என்பதை வில்லெம் யான்சூன் என்று மாற்றுதல் தேவை. இடச்சு மொழியில் Ja என்னும் எழுத்துகள் யா என்று ஒலிக்கும். இடாய்ட்சு மொழியைப் போலவே இடச்சு மொழியிலும் Ja என்பது யகரமாக ஒலிக்க வேண்டும்.
  • பின் வரும் கட்டுரையின் கூற்றுக்கு சான்றுகோள் தேவை: ஆஸ்திரேலியா என்ற பெயர் Australis என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. தெற்கே என்பது இதன் கருத்து. ஆக்ஃசுபோர்டு அகரமுதலி Austrailian என்னும் சொல்லுக்குக் கீழ்க்காணும் விளக்கம் தருகின்றது (நன்றி OED):[ad. F. australien, f. L. austrlis, in Terra Australis ‘southern land,’ the title given, from 16th c., to the supposed continent and islands lying in the Great Southern Ocean, for which Australia was at length substituted (see Flinders, 1814, Voyage to Terra Australis, I. Introd. p. iii, foot-note.) With the gradual restriction of Terra Australis and ‘Australia’ to New Holland (see Penny Cycl. 1835 s.v.), Australian has been similarly restricted.]
  • இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. என்னும் கூற்றுக்குச் சான்றுகோள் இருந்தால் நல்லது.
  • "புதிய ஒல்லாந்து" இதனை ஆங்கிலத்தில் New Holland என்றனர். ஆனால் இடச்சு மக்கள் எப்படி அழைத்தனர்? பிறைக்குறிகளுக்குள் இலத்தீன் எழுத்துகளில் தருவது உதவியாக இருக்கும்.
  • உலகிலேயே பெரும் இனப்படுகொலை ஆத்திரேலியாவில் என்பர், அது பற்றி அவ்வளவாக ஏதும் குறிப்பிடவில்லை இதனைப் பார்க்கவும்; இதனையும் பாருங்கள்

மற்ற கருத்துகளைப் பின்னர் எழுதுகிறேன்.--செல்வா 20:53, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

தலைப்பு மாற்றம் தொகு

Australia என்ற நாட்டின் பெயரை தமிழ்நாட்டில் பரவலாக ஆஸ்திரேலியா என்றே பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டு பாடநூல்கள், தமிழ் பத்திரிக்கைகள், தமிழ் புத்தகங்கள், தமிழ் இணையதளங்கள், தமிழ் வலைப்பதிவுகள், தமிழ் தொலைக்காட்சிகள், தமிழ் வானொலிகள் என எங்கும் ஆஸ்திரேலியா என்ற பெயரே அதிகம் புழக்கத்தில் இருக்கின்றது. பொதுப்புழக்கத்தில் இல்லாத சொல்லை பயன்படுத்துகின்ற போது,

  • ஆஸ்திரேலியா பற்றி மேலதிகமாக அறிந்து கொள்ளும் ஆவலுடன் கூகிளில் தேடுவோருக்கு குழப்பங்களே மிஞ்சுகின்றன.
  • பாடத்திட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்படாத சொல் பல மாணவர்களுக்குச் சென்றடைவதால் அதை தேர்வுகளில் பயன்படுத்தி மதிப்பெண் இழப்புகள் நிகழும் அபாயமும் எழுகின்றது. இதனால் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.
  • இதனால் தமிழ் விக்கிபீடியாவை பயன்படுத்தும் பொதுமக்களின் ஆர்வமும், எண்ணிக்கையும் குறையக்கூடும்.
  • இக்கட்டுரை தொடங்கப்பட்ட போது ஆஸ்திரேலியா என்று தான் தொடங்கப்பட்டுள்ளது. கட்டுரையின் பல இடங்களிலும், சம்பந்தப்பட்ட பல இதர கட்டுரைகளிலும் ஆஸ்திரேலியா என்ற சொல்லே பயன்பாட்டில் இருப்பதையும் கவனிக்க முடிகின்றது.

ஆகையால் பொதுப் புழக்கத்தில் உள்ள ஆஸ்திரேலியா என்ற சொல்லையே தலைப்பாக வைக்க விண்ணப்பிக்கின்றேன். அடைப்புக்குறிக்குள் ஆத்திரேலியா, அவுஸ்ட்ரேலியா போன்ற குறுகிய வட்டாரத்துக்குள் பயன்படும் சொற்களை இடலாம் என்பது எனது கருத்து. --Winnan Tirunallur (பேச்சு) 05:33, 25 ஆகத்து 2015 (UTC)Reply

ஆஸ்திரேலியா தொகு

விக்கிப் பக்கங்களின் பல்வேறு தலைப்புகளில் கிரந்த எழுத்துக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆஸ்திரியா, ஆஸ்பிரின் போன்று ஆஸ்திரேலியா என்று இருப்பதில் என்ன தவறு?. பிறமொழிப் பெயர்களைக் குறிக்க கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஜனநாயகம், விஞ்ஞானம் போன்ற பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதே தவறு. கங்காதர் (பேச்சு) 06:50, 23 செப்டம்பர் 2019 (UTC)

இங்கு தீர்வு எட்டப்படும் முன்பே ஒரு நிர்வாகி தலைப்பு மாற்ற வார்ப்புருவை நீக்கியுள்ளார். இது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றதாகும். கிரந்த எழுத்துக்கள் இன்றும் தமிழ் மக்களிடம் பரவலாக பயன்பாட்டில் உள்ளன. அவை தமிழக அரசுப் பாடநூல்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே அவற்றை தவிர்ப்பது நடைமுறையில் இயலாத காரியம் ஆகும். தனித்தமிழை நான் ஆதரிக்கிறேன். ஆனால் பிறமொழிப் பெயர்களை உச்சரிக்கக் கிரந்த எழுத்துக்கள் அவசியம். ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற சொற்களிலும் கிரந்த எழுத்து உள்ளதே? அதை ஏன் மாற்றவில்லை? அவை பரவலாக அறியப்படும் பெயர்கள் என்பதால் மாற்றவில்லையா? அதுபோல் தானே ஆஸ்திரேலியா என்ற பெயரும்? கங்காதர் (பேச்சு) 11:15, 23 செப்டம்பர் 2019 (UTC)

முடிந்தவரை கிரந்தம் நீக்கி எழுதுவதே தமிழ் விக்கிப்பீடியாவில் நடைமுறை. ஒருவர் கிரந்தம் நீக்கி கட்டுரை எழுதினால் அதனை வரவேற்பதே நடைமுறை. ஆத்திரேலியா என்பது இங்கு தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஆஸ்திரேலியா, அவுஸ்திரேலியா என்று இரு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். பாலஸ்தீனம் பரவலாக இருந்தாலும் பலத்தீன் என எழுதப்படுகிறது. பாகிஸ்தான் - பாக்கித்தான். இவ்வாறு பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற (உயிருடன் உள்ள) நபர்களின் பெயர்களில் மாற்றங்கள் மேற்கொள்வது பெரிதாக விரும்பப்படவில்லை. ஆனாலும் பல இடங்களில் ரசினிகாந்து என்றே எழுதப்படுகிறது. ஆனாலும் மேலேயுள்ள அனைத்துச் சொற்களுக்கும் வழிமாற்றுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.--Kanags \உரையாடுக 11:27, 23 செப்டம்பர் 2019 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா நடைமுறையை யார் உருவாக்கியது? எதற்காகக் கிரந்த நீக்கலை வரவேற்க வேண்டும்? ஆத்திரேலியா என்ற பெயரை தமிழ் விக்கிப்பீடியாவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லையே? அனைவரும் என்றால் நிர்வாகிகள் மட்டுமதானா? கங்காதர் (பேச்சு) 12:51, 23 செப்டம்பர் 2019 (UTC)

குறிக்கோள்களைப் பின்பற்ற வேண்டும் தொகு

தலைப்பு குறித்த குறிக்கோள்கள்:

  • Recognizability – அனைவரும் அறியக்கூடிய சொல்லாக இருக்க வேண்டும்.
  • Naturalness – தொகுப்பாளர்கள் இயற்கையாகப் பயன்படுத்தும் சொல்லாக இருக்க வேண்டும்.
  • Precision – தலைப்பு சந்தேகத்திற்கு இடமின்றி கட்டுரையின் பொருளை மற்ற கட்டுரைப் பொருட்களில் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
  • Conciseness – கட்டுரையின் பொருளைத் துல்லியமாகக் குறிக்கும் தலைப்பாக இருக்க வேண்டும்.
  • Consistency – ஒத்தக் கட்டுரைகளின் தலைப்புகளுடன் ஒத்திருக்க வேண்டும்.

மேற்கண்ட முதல் இரு குறிக்கோள்களின் படி ஆஸ்திரேலியா என்ற தலைப்பே அனைவரும் அறியக்கூடியதாகவும் மற்ற தொகுப்பாளர்கள் இயற்கையாய்ப் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. ஆத்திரேலியா என்பது தமிழ் பேசும் மக்கள் பலருக்கும் பரிச்சயமற்ற சொல்லாகும். மேலும் பல்வேறு பயனர்கள் விக்கிப்பீடியாவில் தொகுக்கும் போது ஆஸ்திரேலியா என்ற சொல்லையே அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா நாள், தெற்கு ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா நாட்டுப்பண், ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் போன்ற பல்வேறு ஒத்தக் கட்டுரைகளின் தலைப்புகளும் ஆஸ்திரேலியா என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளன. GangadharGan26 (பேச்சு) 03:51, 25 செப்டம்பர் 2019 (UTC)

ஆஸ்திரேலியா என்ற தலைப்பே அனைவரும் அறியக்கூடியதாகவும் மற்ற தொகுப்பாளர்கள் இயற்கையாய்ப் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது என்பதே எனது கருத்து. பல காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல பெயர்கள் மாற்றப்பட்டுளன. Aruppillai (பேச்சு) 07:21, 16 செப்டம்பர் 2023 (UTC)
முஸ்லிம்என்பது முசுலிம் சில இடங்களில் முசுலிம் ஆக மாற்றப்பட்டுள்ளது. Aruppillai (பேச்சு) 07:27, 16 செப்டம்பர் 2023 (UTC)
ஆசுத்திரேலியா என்பது ஏற்கக்கூடிய ஒலிப்பே. ஆனால் "சாஸ்த்திரம்" என்பதை சாத்திரம் என்று பாரதியார்கூடப் பயன்படுத்தியுள்ளார். முதலிலோ இடையிலே ககர தகர பகர ஒலிகளுக்கு முன்னே வரும் காற்றொலி சகரத்தை ("ஸ்") விட்டுவிட்டுச் சொல்லுதல் தமிழில் பெருமரபு. "ஸ்தலம்" > தலம், :ஸ்தூண்" > தூண் , "ஸ்தாபனம்" > தாபனம், "ஸ்கந்தன்" > கந்தன், "ஸ்படிகம்" > படிகம் (இவற்றுள் சில் எதிர்த்திசையில் சென்றதாகவும் இருக்கக்கூடும் ஆனால் அக்கருத்து பற்றிய உரையாடல் இங்கு வேண்டாம். எளிய ஒலிப்பைத் தருகின்றது. எனவே ஆத்திரேலியா, ஆத்திரியா (Austria). போன்று எழுதிதல் நல்லது. செல்வா (பேச்சு) 09:23, 8 அக்டோபர் 2023 (UTC)Reply

ஆசுத்திரேலியா தொகு

ஆஸ்திரேலியா அல்லது ஆசுத்திரேலியா என்பதே சரியான உச்சரிப்பு. [1] ElangoE2 (பேச்சு) 04:17, 8 அக்டோபர் 2023 (UTC)Reply

மேலேயுள்ள உரையாடல்களைப் படியுங்கள்.--Kanags \உரையாடுக 07:25, 8 அக்டோபர் 2023 (UTC)Reply
ஆசுத்திரேலியா என்பது ஏற்கக்கூடிய ஒலிப்பே. ஆனால் "சாஸ்த்திரம்" என்பதை சாத்திரம் என்று பாரதியார்கூடப் பயன்படுத்தியுள்ளார். முதலிலோ இடையிலே ககர தகர பகர ஒலிகளுக்கு முன்னே வரும் காற்றொலி சகரத்தை ("ஸ்") விட்டுவிட்டுச் சொல்லுதல் தமிழில் பெருமரபு. "ஸ்தலம்" > தலம், :ஸ்தூண்" > தூண் , "ஸ்தாபனம்" > தாபனம், "ஸ்கந்தன்" > கந்தன், "ஸ்படிகம்" > படிகம் (இவற்றுள் சில் எதிர்த்திசையில் சென்றதாகவும் இருக்கக்கூடும் ஆனால் அக்கருத்து பற்றிய உரையாடல் இங்கு வேண்டாம்). அது எளிய ஒலிப்பைத் தருகின்றது. எனவே ஆத்திரேலியா, ஆத்திரியா (Austria). போன்று எழுதிதல் நல்லது. செல்வா (பேச்சு) 09:19, 8 அக்டோபர் 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆத்திரேலியா&oldid=3805017" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆத்திரேலியா" page.