பேச்சு:ஆனந்த விகடன்
புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் ஆகிய பகுதிகளுக்காகத் தற்போது என் விகடன் என்னும் புதிய இணைப்பும் வெளிவருகிறது.என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மண்டலத்திற்கென தேனி, மதுரை, திண்டுக்கல் என தென் மாவட்டப் பகுதிகளுக்கும் தனியாக என் விகடன் இணைப்பு வருகிறது. என் விகடன் இணைப்பு குறிப்பிட்ட மாவட்டச் செய்திகளை மண்டலங்களாகப் பிரித்து மண்டலவாரியாக அளிக்கப்படுகிறது என நினைக்கிறேன். எனவே இக்கட்டுரையில் “மண்டலவாரியாக இணைப்பு இதழாக என் விகடன் தரப்படுகிறது” என்கிற செய்தி போதுமானது. விரிவாக்க வேண்டுமானால் விகடன் அலுவலகத்தில் கேட்டு என் விகடன் எந்தப் பகுதிகளுக்கு எப்படி அளிக்கப்படுகிறது என்கிற முழுமையான செய்தியை அளிக்க வேண்டும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:15, 12 செப்டெம்பர் 2011 (UTC)
விகடன்
தொகுவிகடன் என்னும் சொல் விகடம் செய்பவரைக் குறிக்கும். மிகவும் புத்திசாலித்தனத்தோடும் யாவரும் ரசித்துப் பாராட்டும்படியும் செய்யப்படும் செய்கைக்கு விகடம் என்று பெயர். தெனாலிராமனை விகடகவி என்று அழைப்பது வழக்கம். இது மிகவும் வேடிக்கையாக அமையும் சொல்லும் கூட. விகடகவி என்பதைத் திருப்பி எழுதினால் அதே அமைப்பில் இருப்பது அதன் சிறப்பு. குறும்புத்தனம் மிகுந்த ஒரு சித்திரமும் விகடனின் தனித்த முத்திரையாக விளங்குகிறது.
விகடன் குழுமத்தில் இணைக்கப்படவேண்டிய செய்தி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:53, 27 அக்டோபர் 2012 (UTC)
ஐயம்
தொகு' 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன் ' என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கினார்.' பூதலூரார் ஆனந்த விகடன் என்று வைத்திருந்தாரா எனத்தெரியவில்லை. ஆனந்த விகடன் என்று வைத்திருந்து இருந்தால் வாசன் தான் ஆனந்த ல விகடனை தொடங்கினார் என்பது சரியா? நிறுவனர் என்பதும் சரியா?--குறும்பன் (பேச்சு) 21:04, 23 மார்ச் 2021 (UTC)