பேச்சு:இசுக்கொட்லாந்து

Add discussion
Active discussions

ஸ்காட்லாந்து ? இசுக்கொட்லாந்து?தொகு

@Winnan Tirunallur: ஸ் தமிழ் எழுத்து என்பதற்குச் சான்று உண்டா? இந்நெறிக்கு உட்பட்டு மீண்டும் முன்னிலையாக்கவில்லை. --மதனாகரன் (பேச்சு) 13:22, 8 செப்டம்பர் 2015 (UTC)

அதே நெறி தமக்கும் பொருந்தும் சோதரரே. நன்றிகள். விக்கிபீடியா நியதி " Article titles should be recognizable, concise, natural, precise, and consistent. " கட்டுரையின் தலைப்பு பொதுவில் அறியத்தக்கதாய் இருக்க வேண்டும், "Use commonly recognizable names" Wikipedia is not a crystal ball. We do not know what terms will be used in the future, but only what is and has been in use, and is therefore familiar to our readers. When there is no single obvious term that is obviously the most frequently used for the topic, as used by a significant majority of reliable English language sources. விதிமீறல் செய்து கொண்டிருப்பது தாங்கள் தான். பொதுவில் பயன்படுத்தப்படும், அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் தலைப்பையே பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் என்ன தலைப்பு உருவாகும் என்ற யூகத்தில் சோதனைக் களமாக விக்கிபீடியாவை பயன்படுத்தலாகாது. நன்றிகள். --விண்ணன் (பேச்சு) 13:30, 8 செப்டம்பர் 2015 (UTC)
கி.பி. 926ஆம் ஆண்டு, முதல் பராந்தக சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் திருவிசலூர்ச் சிவபெருமானுக்கு, கிளிநல்லூர் உடையான் பாகன் சர்வதேவன் என்பவன் 96 ஆடுகள் கொடுத்து ஒரு நந்தா விளக்கு வைத்தான். இதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு, பின்வருமாறு உரைநடையில் கூறுகிறது :
ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட
கோப்பரகேசரி வன்மர்க்கு
யாண்டு 22 ஆவது வட
கரைத் தேவதான பிரமதேய
ம் அவநிநாராயணச்ச
துர்வேதிமங்கலத்துத் தி
ருவிசலூ ர்ப் பெருமானடி
களுக்குக் கிழார்க் கூற்றத்துக் கிளிநல்
லூ ர்க் கிளிநல்லூர்க் கிழவன் பாக
ன் சர்வதேவன் தொண்ணூற்றா றாட்டா
ல் வந்த நெய்கொண்டு சந்திராதித்த
வல் எரிவதற்கு வைத்த நொந்தா விளக்கு
ஒன்று இது ஊர்ப் பெருங்குறி
பெருமக்கள் ரக்ஷை உ
ஏறத்தாழ ஆயிரமாண்டுகளாக தமிழ் சமூகம் தேவைப்படும் இடங்களில் கூடுதல் எழுத்துக்களை பயன்படுத்தியே வந்திருக்கின்றது. இதற்கு மேலும் முரண்டு பிடித்தால், தமிழ் விக்கிபீடியா நிர்வாகிகள் ஒரு நிரந்தரமான தீர்க்கமான வழிகாட்டலை ஏற்படுத்துதல் அவசியம். அப்படியில்லாமல், நிர்வாகிகள் சிலரும் அதே நிலைப்பாடு கொண்டால், பிரச்சனையை விக்கிபீடியா தலைமையகத்திற்கு கொண்டு போவதைத் தவிர வேறு வழியில்லை. நன்றிகள் ! --விண்ணன் (பேச்சு) 13:37, 8 செப்டம்பர் 2015 (UTC)

தன்னாட்சி நடையா? பொதுநடையா? என்னும் போது, அக் கட்டுரை எப்படி தொடங்கப்பட்டதோ அதையே தொடர்வது என தமிழ் விக்கிபீடியா நிர்வாகிகள் அறிவுறுத்தியிருந்த போதும், தன்னாட்சி ஆர்வலர்கள் சிலர் குழு அமைத்து கட்டுரைகளை பொது வழக்கிலில்லாத தலைப்பிற்கு தன்னிச்சையாக மாற்றி வருவதும், அத்தகைய சமயங்களில் நிர்வாகிகள் சிலர் மௌனம் காப்பதும், அந்த நடையில் திருத்தம் கொண்டு வரும் போது, எவ்வித பேச்சுக்கு இடம் கொடாமல் தொடர் திருத்தங்களைச் செய்துவிடுவதும், தக்க சமயத்தில் பக்கச்சார்பான நபரது திருத்ததினை மறைமுகமாக ஆதரிப்பதாக செயல்படுவதும் தமிழ் விக்கிபீடியாவிற்கு நல்லதல்ல. --விண்ணன் (பேச்சு) 14:02, 8 செப்டம்பர் 2015 (UTC)

குழுவாத மனப்பான்மைதொகு

@AntanO: Please Refer: Wikipedi Rule - Editors have learned that formation into "gangs" is the most effective way of imposing their views on opposite-minded contributors. It makes a travesty of the revert-rule when one individual can simply send an e-mail alert to friends requesting a timely "revert favour" once he has reached the limit of his daily reverts. This may apply to deletion debates as well, where a group of editors may be organised so as to always vote en masse in favour of keeping an article written by one of the gang, or related to the gang's main field of interest; or to push through deletion if their interest is a deletionism. Gangs sometimes do serious damage to Wikipedia's policies and guidelines also; by ganging up they can be written to say almost anything.

இரு பங்களிப்பாளருக்கு இந்த கட்டுரையில் கருத்து வேறுபாடு எழுந்த சமயம், எவ்வித உரையாடலுக்கும் வழி கொடாது, தன்னிச்சையாக ஒருவருக்கு சார்பாக திருத்தங்களைச் செய்வது குழுவமைத்து செயல்படுவதைப் போன்றதாகும்? தங்களுக்கு தெரியாத நியதியுமில்லை, நியாயமுமில்லை, ஆன போதும், விக்கியின் நியமங்களுக்கு உட்பட்டு செயல்படுவது நல்லது நண்பரே. நன்றிகள். --விண்ணன் (பேச்சு) 13:47, 8 செப்டம்பர் 2015 (UTC)

விண்ணன் வேண்டிய கட்டுரை. பொதுவழக்கில், விக்கிநெறிமுறைகளுக்குட்பட்டு (?) அமைந்த கட்டுரை இதோ: நடுவுல கொஞ்சம் DISTURB பண்ணுவோம் --மதனாகரன் (பேச்சு) 13:51, 8 செப்டம்பர் 2015 (UTC) --மதனாகரன் (பேச்சு) 14:02, 8 செப்டம்பர் 2015 (UTC)
Wikipedia:No personal attacks - Do not make personal attacks anywhere in Wikipedia. Comment on content, not on the contributor. Personal attacks harm the Wikipedia community, and the collegial atmosphere needed to create a good encyclopedia. Derogatory comments about other editors may be removed by any editor. Repeated or egregious personal attacks may lead to sanctions including blocks. தம்பி மதனாஹரன் கொஞ்சம் இதை வாசித்துப் பார்ப்பது நல்லது. நன்றிகள். --விண்ணன் (பேச்சு) 13:59, 8 செப்டம்பர் 2015 (UTC)
கட்டுரையில் தொகுத்தற் போர் இடம்பெற்றால், அதனை முன்னைய நிலைக்கு கொண்டு வரலாம். அதையே செய்தேன். பேச்சுப் பக்கத்தில் முடிவு காணும் வரை தொகுத்தற்போரைத் தடுக்க ஒவ்வொரு பயனருக்கும் இடமுண்டு. இதை குழுவாத மனப்பான்மை என்றால் என்ன செய்வது? குறிப்பு: ஒருவிடயத்தை பல இடங்களில் உரையாடாது, குறித்த இடத்தில் பேசுவது சிறப்பாக இருக்கும். --AntanO 13:56, 8 செப்டம்பர் 2015 (UTC)
தங்களின் பெருந்தன்மையான பதிலுக்கு நன்றிகள். .எவ்வித விளக்கமும் தராமல் தடை செய்த ஒரு. நிர்வாகியிடம் இருந்து இந்த பதில் வரும் என எனக்குத் தெரியும். நன்றிகள் --விண்ணன் (பேச்சு) 13:59, 8 செப்டம்பர் 2015 (UTC)
விண்ணன் நடைபெறும் உரையாடலுடன் சம்பந்தப்பட்ட வகையில் மட்டும் உரையாடுங்கள். தேவையற்ற தனிநபர் தாக்குதல்களைத் தவிர்ப்பது நல்லது.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:04, 8 செப்டம்பர் 2015 (UTC)
வாங்க நண்பரே மொத்த குழுவும் களத்தில் இறங்கியாச்சா? மேற்கண்ட பதிலை மதனாஹரன் அவர்களுக்கும் கொடுத்தால் மிக நல்லது. --விண்ணன் (பேச்சு) 14:08, 8 செப்டம்பர் 2015 (UTC)

ஸ்காட்லாந்துதொகு

இந்த சொல்லையே இக்கட்டுரையில் பயன்படுத்த வேண்டும். காரணங்கள்:

* பொதுவழக்கில் ஸ்காட்லாந்து என்பதைத் தான் பரவலாக பலரும் பயன்படுத்தி வருகின்றனர், அதுவே அறியத்தக்கதாய் இருக்கின்றது, புரிவதாகவும் இருக்கின்றது.
* இசுக்கொட்லாந்து என்பது வழக்கில் பயன்படாத சொல், இதற்கான சான்றுகளும் வழங்கப்படவில்லை.
* இக்கட்டுரை தொடங்கிய சமயம், ஸ்காட்லாந்து என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது.
* தன்னாட்சி தனித்தமிழ் ஆர்வலர்கள் எவ்வித விவாதமும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக தலைப்பை மாற்றியிருக்கின்றனர். அச் சமயம் நிர்வாகிகளும் அதை ஆமோதிக்கும் வண்ணம் மௌனம் காத்துள்ளனர்.
* கூடுதல் எழுத்துக்களை தமிழ் விக்கியில் பயன்படுத்தக் கூடாது என்ற எந்தவொரு நியதியும், விதியும் வகுக்கப்படவில்லை. --விண்ணன் (பேச்சு) 14:07, 8 செப்டம்பர் 2015 (UTC)

கவனிக்க - விக்கிபீடியா நியதி " Article titles should be recognizable, concise, natural, precise, and consistent. " கட்டுரையின் தலைப்பு பொதுவில் அறியத்தக்கதாய் இருக்க வேண்டும், "Use commonly recognizable names" Wikipedia is not a crystal ball. We do not know what terms will be used in the future, but only what is and has been in use, and is therefore familiar to our readers. When there is no single obvious term that is obviously the most frequently used for the topic, as used by a significant majority of reliable... language sources. --விண்ணன் (பேச்சு) 14:13, 8 செப்டம்பர் 2015 (UTC)

பிறமொழிப் பெயர்களைக் குறிக்க கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதே சரியான நடைமுறையாக இருக்கும். விக்கிப்பீடியா அனைவருக்கும் பொதுவான அறிவுக்களஞ்சியம் ஆகும். எனவே அனைவருக்கும் தெரிந்த பெயரைப் பயன்படுத்துவதே சிறந்தது. GangadharGan26 (பேச்சு) 02:56, 25 செப்டம்பர் 2019 (UTC)

தலைப்பு குறித்த [விதிகள்]:

  • Recognizability – அனைவரும் அறியக்கூடிய சொல்லாக இருக்க வேண்டும்.
  • Naturalness – தொகுப்பாளர்கள் இயற்கையாகப் பயன்படுத்தும் சொல்லாக இருக்க வேண்டும்.
  • Precision – தலைப்பு சந்தேகத்திற்கு இடமின்றி கட்டுரையின் பொருளை மற்ற கட்டுரைப் பொருட்களில் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
  • Conciseness – கட்டுரையின் பொருளைத் துல்லியமாகக் குறிக்கும் தலைப்பாக இருக்க வேண்டும்.
  • Consistency – ஒத்தக் கட்டுரைகளின் தலைப்புகளுடன் ஒத்திருக்க வேண்டும்.

மேற்கண்ட முதல் இரு விதிகளின் படி ஸ்காட்லாந்து அனைவரும் அறியக்கூடியதாகவும் மற்ற தொகுப்பாளர்கள் இயற்கையாய்ப் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. இசுக்கொட்லாந்து என்பது தமிழ் பேசும் மக்கள் பலருக்கும் பரிச்சயமற்ற சொல்லாகும். எனவே அது வேறொரு நாடாகப் புரிந்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. இது மேற்கண்ட 4வது விதிக்கு எதிரானதாகும். மேலும் பல்வேறு பயனர்கள் விக்கிப்பீடியாவில் தொகுக்கும் போது ஸ்காட்லாந்து என்ற சொல்லையே அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர். GangadharGan26 (பேச்சு) 03:32, 25 செப்டம்பர் 2019 (UTC)

Return to "இசுக்கொட்லாந்து" page.