பேச்சு:இசுலாமிய அரசு

Levant என்பதை தமிழ்ப்பதமாக்கலாம். Levant என்பது கிழக்கு மத்தியதரை அல்லது கிழக்கு மத்தியதரையினர் என மொழி பெயர்க்கலாம். ஈராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் கிழக்கு மத்தியதரை? --AntonTalk 18:18, 12 சூன் 2014 (UTC)Reply

சிரியா என்றும் அழைக்கின்றனர். மேலும் இக்குழுவைப் பற்றி ஒவ்வொரு ஊடகவியலாளரும் ஒவ்வொரு மாதிரிக் குறிப்பிடுகின்றனர். இசிஸ் என்று கூடத் தலைப்பை வைக்கலாமா என நான் யோசித்ததுண்டு. பிபிஸி ஊடகம் இசிஸ் என்ற சொல்லையே பயன்படுத்துகிறது. இங்கே பாருங்கள். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 23:25, 12 சூன் 2014 (UTC)Reply
இசிஸ் என்பதை வழிமாற்றாக வைக்கலாம். ஈராக்கிலும் கிழக்கு மத்தியதரையிலும் இஸ்லாமிய நாடு என்றிருப்பது பொருத்தமாக இருக்கும். --AntonTalk 03:20, 13 சூன் 2014 (UTC)Reply
👍 விருப்பம் சிறுமாற்றம் ஈராக்கிலும் கிழக்கு மத்தியதரையிலும் இஸ்லாமிய நாடு என்பது ஈராக்கிலும் கிழக்கு மத்தியதரையிலும் இசுலாமிய நாடு என்றிருந்தால் நன்று.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 03:32, 13 சூன் 2014 (UTC)Reply
சிரியா, லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீன்ம், ஜோர்டான், சைப்ரஸ் மற்றும் ஹாதே ஆகியவற்றை உள்ளடக்கிய Levant பகுதிக்கு தமிழாக்கம் இருக்கிறதா? அல்லது மத்தியதரைப் பகுதி என்பது போதுமா?--ஆர்.பாலா (பேச்சு) 06:07, 13 சூன் 2014 (UTC)Reply
இது ஒரு இடத்தினுடைய பெயராகையால் தமிழில் லெவண்ட் அல்லது லெவண்டு என்றே மொழிபெயர்க்கலாம். Levant என்பதன் அர்த்தம் கிழக்கு மத்தியதரைப் பகுதி ஆகும். ஆனால்
  1. கிழக்கு மத்தியதரைப் பகுதி என்பது levant என்றும்
  2. கிழக்கு மத்தியதரைப் பகுதி என்பது கிரேக்கம், துருக்கி, எகிப்து ஆகியவற்றுடன் levant ஐயும் உள்ளடக்கிய பகுதி என்றும்

இருவேறு கருத்துக்கள் உள்ளன (காண்க:en:Eastern Mediterranean). ஆகவே லெவண்ட் அல்லது லெவண்டு என்று இருப்பதே பொருத்தமானது.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:21, 13 சூன் 2014 (UTC)Reply

Levant என்பது கிழக்கு மத்தியதரை என்றிருப்பதே பொருத்தம். Mediterranean என்பதை மெடிட்டேரியன் என்றல்லது, மத்தியதரை என்றே அழைக்கப்படுகிறது. இசிஸ் இயக்கத்தின் நோக்கமும் கிழக்கு மத்தியதரையில் இஸ்லாமிய நாடு உருவாக்குவதே என்பதும் குறிப்பிடத்தக்கது. --AntonTalk 08:46, 13 சூன் 2014 (UTC)Reply
லெவண்டு என இருப்பதே சிறந்தது. அவ்வாறே அழைக்கப்படுகிறது. ஆங்கிலக் கட்டுரையில் இது வேறுபடுத்தி விளக்கப்பட்டுள்ளது. லெவண்டு, கிழக்கு நடுநிலம் என இரு வேறு கட்டுரைகள் எழுதலாம்.--Kanags \உரையாடுக 12:18, 13 சூன் 2014 (UTC)Reply

லெவண்டு என்பது பொருந்தாது. தலைப்பு இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு என்றிருப்பதே சரியான, நேரடி மொழிபெயர்ப்பு. சாம் என்பது சிரியாவையும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் பலவற்றையும் சேர்த்த நிலப்பரப்பின் பெயர். இங்கே மூல மொழியின் பெயரை அப்படியே பன்படுத்துவதே சரி. ஈராக் என்று பயன்படுத்துவது சரியன்று. இராக் என்பதே சரியான சொல்.--பாஹிம் (பேச்சு) 07:39, 18 சூன் 2014 (UTC)Reply

👍 விருப்பம் --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 07:19, 19 சூன் 2014 (UTC)Reply
நியூயார்க் டைம்சில் இன்று வெளிவந்துள்ள கட்டுரை --மாகிர் (பேச்சு) 07:14, 19 சூன் 2014 (UTC)Reply
பாஹிம், Levant என்பதை ஏன் "சாம்" என அழைக்க வேண்டும்? அறிந்து கொள்ள சற்று விளக்குவீர்களா? இராக் என்பது சரியான சொல் என்பதில் மறுப்பு இல்லை. ஆனால் ஈராக் என்பது பயன்பாட்டில் உள்ளதையும் கவனியுங்கள். --AntonTalk 08:15, 19 சூன் 2014 (UTC)Reply

அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, அது அரபு இயக்கம். அரபு மொழியிலேயே பெயர் உள்ளது. அத்துடன் சாம் என்னும் சொல் பல நூற்றாண்டுகளாக இஸ்லாமியத் தமிழிலக்கியங்களிற் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சொல். தமிழுக்குப் புதியதன்று. மேலும், லெவாண்டு என்பதைவிட சாம் என்பதில் இலக்கண வழு ஏற்படுவதில்லை. சாம் என்ற மூலச் சொல்லைக் குறிக்கும் போது லெவாண்டு என்றால் இது, அது என்று வேறுபட்ட விளக்கங்கள் தேவைப்படுவதில்லை. மாறாக, அதில் அவ்வியக்கத்தினரின் கருத்து முற்றாக உள்வாங்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 13:40, 19 சூன் 2014 (UTC)Reply

இசுலாமிய அரசு: இராக் மற்றும் சிரியா(Islamic State of the Irag and Syria) (ISIS) (இசிஸ்)என்று பெயரிடலாம். கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 21:57, 20 சூன் 2014 (UTC)Reply

நீங்கள் சொல்வது பொருந்தவில்லை, கிருஷ்ணமூர்த்தி. மூல மொழியிலுள்ள சாம் என்னும் சொல்லில் சிரியாவும் உள்ளடங்கினாலும் சிரியா மட்டும் என்று பொருளேற்படவில்லை. மூல மொழியில் அவர்கள் வழங்கும் பொருளை அப்படியே உள் வாங்க வேண்டுமானால், மேலே நான் குறிப்பிட்டவாறு இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு என்று மூல மொழிப் பெயரை அப்படியே பயன்படுத்த வேண்டும். நீங்கள் இஸ்லாமியத் தமிழாக்கங்களில் ஷாம் என்ற சொல் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். சில காலத்துக்கு முன் இலங்கையில் புதூகுஷ்ஷாம் (ஷாம் வெற்றி) என்னும் நூல் தமிழிலக்கியப் பாடத்திட்டத்தில் உள்ளடங்கியிருந்தது. ஷாம் என்றால் சிரியாவல்ல. மாறாக, சிரியா என்பது ஷாம் என்பதன் ஓர் அங்கம்.--பாஹிம் (பேச்சு) 17:34, 20 சூன் 2014 (UTC)Reply

அரபு மொழியில் (الدولة الاسلامية في العراق والشام) இதன் ஒலிப்பெயர்ப்பு (மொழிமாற்றம் அல்ல) என்ன என்பதை யாராவது அறியத் தருகிறீர்களா? வேறு மொழி விக்கிகள் சிலவற்றில் "ஈராக் மற்றும் சாமின் இசுலாமிய அரசு" எனப் பெயரிட்டிருக்கிறார்கள். அவ்வாறே பெயரிடுவது நல்லது.--Kanags \உரையாடுக 22:32, 20 சூன் 2014 (UTC)Reply

அதன் ஒலிபெயர்ப்பு அத்தௌலத்துல் இஸ்லாமிய்யா பில்-இராக் வஷ்-ஷாம் என்பதாகும். நீங்கள் சொல்வது போற் குறிப்பதாயின், இராக் மற்றும் சாமின் என்பது தமிழ் முறைக்கு ஒவ்வாது. இராக்கினதும் சாமினதும் என்றோ இராக்கிலும் சாமிலும் என்றோ இருக்கலாம். இராக் மற்றும் சாமின் என்று குறிப்பதில் மற்றும் என்ற சொல் ஆங்கில முறையை ஒத்து வழங்கப்பட்டாலும் அது தமிழ் முறையல்ல. மற்றும் என்ற சொல்லைப் பலரும் பிழையாகப் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலத்தில் and என்ற சொல்லுக்குப் பகரமாக மற்றும் என்ற சொல் வந்தாக வேண்டுமெனும் பிழையான உளப்பாங்கு பலரிடம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, I, you, he and she played என்பதன் மொழிபெயர்ப்பான நானும் நீயும் அவனும் அவளும் விளையாடினோம் என்ற வசனம் தமிழ் முறையிலுள்ளது. நான், நீ, அவள் மற்றும் அவன் விளையாடினோம் என்பது போன்று மொழிபெயர்ப்புச் செய்வது முற்றிலும் பிழையானது. மற்றும் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது தமிழ் முறைக்கு ஏற்பவே பயன்படுத்தப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 02:32, 21 சூன் 2014 (UTC)Reply

எவ்வளவோ யோசனைகள் கூறப்பட்டுள்ளது பொதுவாக அங்கு தற்சமயம் நடந்துவரும் சண்டைகள் சம்பந்தமான கட்டுரையாகத்தானே உள்ளது ஆகையால் இராக் இன வேறுபாட்டுக்களம் என்று பெயரிடலாம்.--Muthuppandy pandian (பேச்சு) 08:07, 24 சூன் 2014 (UTC)Reply

பெயர் மாற்றம்

தொகு

இப்போது Islamic State இசுலாமிய அரசு என்று பெயர் மாற்றம் பெற்ற இவ்வமைப்பு புதிய பெயரில் தானே எல்லா ஊடகங்களாலும் நாடுகளாலும் அழைக்கப்படுகிறது? நாம் ஏன் பழைய பெயரை பயன்படுத்த வேண்டும்?--குறும்பன் (பேச்சு) 17:20, 21 மே 2015 (UTC)Reply

  விருப்பம்--AntanO 06:17, 23 மே 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இசுலாமிய_அரசு&oldid=1903220" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இசுலாமிய அரசு" page.