பேச்சு:இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இந்த கட்டுரை ஆங்கில விக்கியில் உள்ள en:Anti-Hindi agitations of Tamil Nadu என்ற கட்டுரையின் தமிழாக்கம். இதனைச் சிறந்த முறையில் அங்கு பதித்துள்ள பயனர் en:User:Sodabottle அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.--மணியன் 09:03, 29 ஜனவரி 2010 (UTC)

மிகச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்துள்ளீர்கள் மணியன். நானே செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். என்னால் கண்டிப்பாக இவ்வளவு நன்றாக செய்ய முடிந்திருக்காது. ஆங்கிலக் கட்டுரை தற்போதுள்ள வடிவம் பெற பயனர் en:User:carTick க்கின் பங்களிப்பும் மிக முக்கியமானது என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன். --Sodabottle 10:41, 29 ஜனவரி 2010 (UTC)

ஆங்கில மேற்கோள்கள்

தொகு

ஆங்கில மேற்கோள்களை தமிழில் மொழி பெயர்த்துவிடலாமா. நேரடி மேற்கோள்களாக இருந்தாலும் பழங்கால இங்கிலீஷாகையால் நன்றாக இல்லை. தமிழில் மொழி பெயர்த்து விட்டால் அர்த்தம் நன்றாக விளங்கும்.--சோடாபாட்டில் 18:13, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply

Block quote இல் இருப்பதைத் தானே..செய்துவிடலாம்.--மணியன் 18:32, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply
அட்டகாசமான மொழிபெயர்ப்பு மணியன். நாடாளுமன்ற விவாதங்களையும் officialspeak கையும் அப்படியே குணம் மாறாமல் மாற்றியிள்ளீர்கள். சற்றே பொறாமையாகவும் உள்ளது (நேற்று இரண்டை மற்றும் மொழி பெயர்த்து என் கணினியில் வைத்திருந்தேன். இன்று வந்து பார்த்தால், உங்கள் வெர்ஷன்களோடு ஒப்பிடிடுகையில் என்னது சுத்த வேஸ்ட் ;-)). --சோடாபாட்டில் 09:11, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பின்னூட்டம்

தொகு

இக்கட்டுரை சிறப்பாக பன்முகத்தன்மையுடம் தொகுக்கப்பெற்றுள்ளது. மகிழ்ச்சி. இக்கட்டுரையின் தலைப்பினை இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதைவிடவும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என மாற்றலாமா?--Thamizhpparithi Maari (பேச்சு) 07:45, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

இது போன்ற நிகழ்வுகள் பற்றிய கட்டுரைத் தலைப்புகள் புற ஊடகங்களால் பரவலாக பயன்படுத்தப்பட்ட பெயர்களையே (மொழி/இலக்கணச் சிக்கல் எழாத போது) பயன்படுத்துகின்றன. “இந்தி எதிர்ப்புப் போராட்டம்” / "Anti-Hindi Agitation" என்பதே ஆங்கில / தமிழ் ஊடகங்கள், வரலாற்று நூல்கள் போன்றவை பயன்படுத்தி வரும் பெயர் என்பதால் இதைப் பயன்படுத்தியிருக்கிறோம். இப்படியே இருப்பது தான் உகந்தது என்பது என் கருத்து.--சோடாபாட்டில்உரையாடுக 11:43, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

[1] இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற தலௌப்பும் பரவலாகவே பயன்படுகிறது. மேலும் இதுபோல் தவறான வழிமாற்றைக் கூட ஆங்கில விக்கியில் சில விவாதங்களை நடத்தி நீக்கி இருக்கிறேன். என்ன எல்லாமோ விதிகளைக் காட்டி கடைசியில் ஒரு வழியாக வழிமாற்றை நீக்கிவிட்டார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:59, 8 செப்டம்பர் 2014 (UTC)

தலைப்பை இந்தி-திணிப்பு எதிர்ப்பு என்று மாற்றுதல்

தொகு

இது இந்தி எதிர்ப்பு போராட்டமல்ல. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம். எனவே தலைப்பை மாற்றுவது குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும். Rajavel 2k12 (பேச்சு) 05:13, 20 சூன் 2014 (UTC)Reply

  விருப்பம்.--Kanags \உரையாடுக 08:00, 20 சூன் 2014 (UTC)Reply
பரிந்துரைக்கு நன்றி. தலைப்பை மாற்றியுள்ளேன்.--இரவி (பேச்சு) 13:05, 21 சூன் 2014 (UTC)Reply

இந்த மாதிரி விடயத்தில் வழிமாற்றை கூட விட்டு வைக்கக்கூடாது. எ.கா. இணைப்பைப் பாருங்கள். [2] --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:02, 8 செப்டம்பர் 2014 (UTC)

உள்ளடக்கம் ஏற்றவாறு தலைப்பை மாற்ற வேண்டும்

தொகு

இதிலுள்ள உள்ளடக்கம் தமிழ்நாடு பற்றியது, இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டமானது கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற இடங்களிலும் நடந்திருப்பதால் இதை 'தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்' என்று மாற்ற வேண்டும். குறிப்பு: ஆங்கில விக்கிப்பீடியாவில் 'Anti-Hindi agitations of Tamil Nadu' என்றுள்ளது. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 11:22, 6 சூன் 2024 (UTC)Reply

Return to "இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" page.