பேச்சு:இந்திரா காந்தி

இந்திரா காந்தி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்திரா காந்தி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


எத்தனையாவது பிரதமர்

தொகு

இவர் எத்தனையாவது பிரதமர் என்பதை சேர்த்தால் நன்றாக இருக்கும் --டெரன்ஸ் \பேச்சு 11:07, 15 நவம்பர் 2006 (UTC)Reply

பிரதம மந்திரி என்பதற்குப் பதில் தலைமை அமைச்சர் எனலாமா? பிரதம என்ற வட சொல் இந்தப் பயன்பாடு தவிர வேறெங்கும் தற்காலத் தமிழில் பெரிதாகப் புழக்கத்தில் இல்லை. பிரதான் மந்திரி என்பதன் தமிழ்த் தழுவலாகவே பிரதம மந்திரி என்ற பயன்பாடு இருக்கிறது. பல நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் ஊடகங்களிலும் இந்தச் சொல் எப்படியோ தங்கி விட்டது. பிரதம என்ற சொல்லோடு மந்திரியும் ஒட்டிக் கொண்டு வருவதால் அமைச்சர் என்ற சொல்லும் விடுபட்டுப் போகிறது. பிரதமர் என்ற ஒற்றைச் சொல்லுக்கு மாற்று தான் புலப்படவில்லை. முதல் அமைச்சர் முதல்வர் ஆவது போல் தலைமை அமைச்சர் தலைவராகலாம் :) --ரவி 22:18, 25 நவம்பர் 2007 (UTC)Reply

பதவி தமிழ்ச்சொல்ல? மாற்றுச் சொல் என்ன? பொறுப்பு எனலாமா? சாதாரணம் என்ற சொல்லுக்கு மாற்றுத் தமிழ்ச் சொல் என்ன?--ரவி 22:26, 25 நவம்பர் 2007 (UTC)Reply

ரவி, தலைமை அமைச்சர் என்பது சரியாக இருக்கும். இச்சொல்லை நான் 1970களில் இருந்து கேட்டிருக்கின்றேன். பெருஞ்சித்திரனார் போன்றோர் ஆள்வர். ஆனால் அமைச்சர் என்பதே தமிழ் இல்லை என்றும் சிலர் கூறுவர், அரசன் என்பதும் தமிழில்லை என்பர்! ஆனால் இவை எல்லாம் தமிழ்தான் - எதிலிருந்து எது பெற்றது என்பதற்குத் தீர்வு காண்பது அரிது. இதுபோல ஆயிரக்கணக்கில் உண்டு. பதவி என்பது தமிழ்தான். பதி (வினை)--> பதம், பதக்கம், பதவி, பாதை எல்லாம் நல்ல தமிழ்ச்சொற்கள். ஆனால் பாதை முதலானவை இந்திய-ஐரோப்பிய மொழியது என்பர் சிலர் (path என்பதையும் நோக்குக). தமிழென்று தேவநேயர் முறையாக நிறுவியுள்ளார். சாதாரணம் என்பது common பொது. (பொது-சிறப்பு). தமிழில் வழங்கும் சொற்களில், வாடிக்கை, சாதாரணம் போன்றவற்றை அப்படியே ஏற்கலாம். ஆனால் கூடவே "சர்வ சாதாரணம்" போன்ற வழக்குகளும் ஒட்டிக்கொண்டே வரும். வேறு சொல் தேவை எனில், புது-->புதுசு என்பதுபோல சாதாரணம் என்பதற்கு, பொது --> பொதுசு (புதியது என்பதுபோல் பொதியது எனலாம்). ஆனால் இவையெல்லாம் புதுச் சொல்லாட்சி என்று ஒதுக்கப்படலாம். சாதாரண வழக்கம் என்பதைப் பொது வழக்கம், பொதுவான வழக்கம் என்றே சொல்லலாம். அப்படித்தான் பலரும் சொல்லுவர். சாதாரண வழக்கம் என்று சொல்லும் தமிழர்கள் 10% க்கும் குறைவாகவே இருக்கும். பொதுகையான வழக்கம், பொதுமையான வழக்கம் என்றும் சொல்லலாம். சாதா தோசை என்பதை பொதுசு தோசை என்று சொல்லலாம். ஆனால் உணவகத்தான் என்ன தோசை தருவான் என்று சொல்ல முடியாது :) சிறப்பான வேறுபாடுகள், மாறுபாடுகள் இல்லாத பொதுத் தோசைதான் சாதா தோசை. இன்று உணவகங்களிலே சாதா தோசை என்கிறார்களா, அல்லது பிளைன் தோசையா சார் என்று கேட்கிறார்களா என்று தெரியாது. திருமணங்களிலே "வாட்டர் போடு", "ரைஸ் போடு" என்று ஓயாது ஆங்கிலம் பேசுவதாய் எண்ணி பொருள் சிதைக்கும் தமிழர்களின் போக்குகளில் இருந்து மீள்வது என்னாளோ?! --செல்வா 04:43, 26 நவம்பர் 2007 (UTC)Reply

மதுரை மாவட்டத்தில் பதவிசான, பதவிசு போன்ற சொற்கள் prestigious,luxurious என்று பொருள்படப் பயன்படுத்தப்படக் கேட்டதுண்டு. ஒரு சொல் எம்மொழியிலிருந்து எங்கு சென்றது என்பதை அறிவதற்கு சில குறிகளை மொழியியலாளர்கள் பயன்படுத்துவர்: மூலச் சொல்லின் எத்தனை கிளைச்சொற்கள் எம்மொழியில் கூடுதல் எண்ணிக்கையில் உள்ளன, மூலச் சொல்லின் கிளைச் சொற்கள் எம்மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் மிகுதியானவற்றில் உள்ளன என்பனப் போல. இவற்றைக் கொண்டு நோக்குகையில் பதவி தமிழென்றே தோன்றுகிறது. அதுபோல் அச்சொற்களுக்கு மாற்றுச்சொல் ஒருமொழியில் மிகுதியாக இருப்பின் அம்மொழிச்சொல்லாக இருக்க வாய்ப்புக் குறைவு. இவ்வடிப்படையில் மீன் மற்றும் நீர் (தமிழில் மட்டுமல்லாது பல பழங்குடி திராவிடரின் மொழிகளிலும் மிகுதியாகப் பயன்படுபவை) வடமொழியல்ல தமிழ் சொற்கள்தான் என்று அண்மைய மொழியியலில் தெளிவாக நிறுவப்பட்டும் பலர் இவற்றைக் கொண்டு தமிழ் வடமொழியிலிருந்து தோன்றியது என்ற பகடித்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். -- Sundar \பேச்சு 14:48, 26 நவம்பர் 2007 (UTC)Reply

சுந்தர், செல்வா - உங்கள் இருவர் விளக்கங்களுக்கும் நன்றி. செல்வா, சாதாரணம் = பொது = common என்ற பொருளில் விளக்கி இருக்கிறீர்கள். ஆனால், சாதாரணம் என்பதின் துல்லியமான பொருள் = ordinary என்று நினைக்கிறேன். ordinary என்பதே பொதுவாக இருக்கத் தேவை இல்லை தானே? அசாதாரண என்பதும் unusual என்ற பொருளில் அதிகம் பயன்படுகிறது. common, extraordinary, unusual, ordinary - இவற்றுக்குத் துல்லியமான தனித்தனிச் சொற்கள் இருந்தால் நலம்.--ரவி 16:28, 27 நவம்பர் 2007 (UTC)Reply

Ordinary என்பதும் common என்பதும் சற்றேறக்குறைய ஒரே பொருளுடையதே. common-uncommon, ordinary-extraordinary, usual-unusual என்பன மிக நெருக்கமான சொல்-எதிர்சொல் இணைகள். பொது-பொதுவல்லா, சாதாரண-அசாதாரண (மலிது-அரிது), வழக்கமான-அரிவழக்கான எனலாம். சாதாரண என்பது மிகப்பல இடங்களில் வழக்கமான, பொதுவான என்னும் பொருளில் ஆளப்பெறும். மேலும் ஆங்கிலத்தில் general என்றும் ஒரு சொல் உள்ளது. அதற்கும் நாம் பொது, பொதுமையான போன்ற சொற்களே பயன்படுத்துகிறோம். மலிந்த என்னும் சொல் மல் (மல்கு = பெருகு) என்னும் வேர்ச் சொல்லில் இருந்து எழுந்தது. மலிவு என்றால் விலை குறைவாக உள்ளது என்னும் பொருள், நிறைய (மலிந்து) கிடைப்பதால் விலை குறைந்துள்ளது என்பதைக் குறிப்பதாகும். Supply-demand-price theory of economics is buried in this word மலிவு. மலிஞ்சு கிடக்கு என்பது எங்கும் பரவலாகக் கிடைப்பது --> மலிது = ordinary. அரிதாகக் கிடைப்பது extra-ordinary (= rare) அரிது. [மல்லிப்பூ என்பது பல இதழ்கள் இருப்பதால் மல்லி (மணம் மிகுந்து தருவதாலும் மல்லி). வலிமை மிகுந்து இருப்பதால் மல்லர் (மல்லுகட்டுதல், மல்லாட முடியவில்லை முதலிய பேச்சு வழக்குகளையும் நோக்குங்கள்).]--செல்வா 17:32, 27 நவம்பர் 2007 (UTC)Reply

செல்வா, பொருட்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் பொதுவாகக் கிடைப்பதாலே ஒன்று சாதாரணமானதாகி விடுகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஒரு எடுத்துக்காட்டுக்கு, ஒரு கேள்வி தோன்றுகிறது. ஒரு முன்னணி திரைப்படக்கல்லூரி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கு மாணவர்கள் எடுக்கும் படங்கள் எல்லாமே extra-ordinary தான். இந்தக் கல்லூரியைப் பொருத்த வரை அதிஉயர் தரம் தான் பொது நிலை. an usual film from this institute என்று சொல்லும் இந்த இடத்தில் வழக்கம் போல் தரமான படம் என்றே பொருள் படும். ஆனால், அதில் ஒரு மாணவர் மட்டும் ordinaryயாய் ஒரு படம் எடுத்து விடுகிறார். அப்ப ordinary film from this institute என்பதை இந்தக் கல்லூரியில் இருந்து வெளிவரும் வழக்கமான படம் என்றோ பொதுவாக இந்தக் கல்லூரியில் இருந்து வரும் பொதுவான படம் என்றோ மொழி பெயர்க்க இயலாதே? வழக்கத்துக்கு மாறாக, இந்தக் கல்லூரியில் இருந்து வந்திருக்கும் சாதாரண படம் என்று தான் சொல்ல முடியும்..இந்த இடத்தில் வரும் சாதாரணம் என்ற சொல்லை எப்படி வேறு சொல் கொண்டு எழுதுவது? context அடிப்படையில் பார்த்தால் சாதாரணம் = பொது என்கிற பொருள் இங்கு அடிபடுவது எனக்கு ஒரு குழப்பம். ஆங்கிலச் சொற்களை அப்படியே அடி பிசகாமல் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கத் தேவையில்லை, தமிழாக்க இயலாது என்பது உணர்வேன். ஆனால், தமிழாக்கமாக அல்லாமல் தமிழ்ச் சிந்தனையிலேயே இதை எப்படிச் சொல்வது? மட்டமான படம் என்றும் இதைத் தமிழாக்க முடியாது :) --ரவி 17:53, 27 நவம்பர் 2007 (UTC)Reply

வழக்கத்துக்கு மாறாக, இந்தக் கல்லூரியில் இருந்து வந்திருக்கும் மலிதான ஒரு படம் என சொல்லலாம் என நினைக்கிறேன்.--செல்வா 18:07, 27 நவம்பர் 2007 (UTC)Reply
அரிதாக வரும் மலிதான படம் :) --செல்வா 18:10, 27 நவம்பர் 2007 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்திரா_காந்தி&oldid=4061148" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இந்திரா காந்தி" page.