பேச்சு:இயற்பெயர்

@Sengai Podhuvan: புனைபெயர் என்பது வினைத்தொகை தானே. ஒற்று மிகாமல் வரவேண்டும். வேதாச்சலம்-மறைமலை அடிகள் என்பதைப் புனைபெயருக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாமா? --மதனாகரன் (பேச்சு) 07:50, 19 அக்டோபர் 2015 (UTC)Reply

  • கனகசீர் நீக்கப் பகுதியில் விளக்கம் உள்ளது. மறைமலை அடிகள் தாமே புனைந்துகொண்ட பெயர்.
  • புனைபெயர் - சரி - வினைத்தொகையே - ஒற்று மிக்கு எளியேன் எழுதியிருப்பின் அது என் பொச்சாப்புப் பிழை. --Sengai Podhuvan (பேச்சு) 06:20, 20 அக்டோபர் 2015 (UTC)Reply

இணைக்கலாமா

தொகு
  • சூடிய பெயர் - இயற்பெயரோடு இணைக்கப்படுவது என அந்தக் கட்டுரை விளக்குகிறது.
  • எனவே, சூட்டிய பெயர் புனைபெயர் அன்று
  • ஆகவே இணைப்பது பொருத்தமாகாது. --Sengai Podhuvan (பேச்சு) 06:29, 20 அக்டோபர் 2015 (UTC)Reply
இயற்பெயரும் புனைபெயரும் வெவ்வேறு. ஆனால் இயற்பெயரும் (birth name) சூட்டிய பெயரும் (given name) ஒன்றே. எனவே இரண்டு கட்டுரைகளையும் இணைக்க வேண்டினேன். இயற்பெயரை முதன்மையாக வைத்து, சூட்டிய பெயரை வழிமாற்றாக வைத்திருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:48, 20 அக்டோபர் 2015 (UTC)Reply
  • சூட்டிய பெயர் கட்டுரை உலகம் தழுவிய பொது முறைமையினைக் குறிப்பிடுகிறது. தனியே இருப்பது நலம்.
  • இன்றியமையாக் கட்டுரைகளை மட்டும் இணைப்போம்.
  • பிறவற்றைத் தொடுப்புக் காட்டி வேறு கட்டுரையாகவே நிறுத்துவோம். --Sengai Podhuvan (பேச்சு) 07:14, 20 அக்டோபர் 2015 (UTC)Reply
//சூட்டிய பெயர் கட்டுரை உலகம் தழுவிய பொது முறைமையினைக் குறிப்பிடுகிறது.// அதனால் தான் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இணைக்கக் கோருகிறேன். சூட்டிய பெயர் என்பதும் இயற்பெயர் என்பதும் ஒன்று. நாம் ஆங்கிலேயர்களின் சூட்டிய பெயர்களை நாம் தமிழில் இயற்பெயர் என்று தான் கூறுகிறோம். இதனால் இணைப்பதே நல்லது. நீங்கள் எழுதிய தகவல்கள் எதுவும் அழிக்கப்படாமல் கட்டுரைகள் இரண்டையும் இணைக்கலாம். அதனால் நீங்கள் பயப்படத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 07:51, 20 அக்டோபர் 2015 (UTC)Reply

அனபுள்ள கனகசீர்
அழிக்கப்படாமல் என்னும் சொல் என்னை வருத்துகிறது
தமிழ் நம்முடையது
யாரும் எதையும் செயய்யலாம்
பலரும் பல கூறுவர்.
ஆளுநர் கை ஓங்கும்
அடிபணிகிறேன்
தங்களின் தொய்விலாத் தொண்டினை வாழ்த்தி மகிழ்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 01:43, 21 அக்டோபர் 2015 (UTC)Reply

சூட்டிய பெயர்

தொகு

இந்த பெயரிடல் மரபு தமிழர்களின் பெயரிடல் மரபுடன் முழுமையாகப் பொருந்தவில்லை. தமிழர்கள் தத்தைபெயர்+சூட்டிய பெயர் முறையைப் பொதுவாகக் கொண்டுள்ளனர்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 00:17, 4 அக்டோபர் 2014 (UTC)

@Sengai Podhuvan: மன்னிக்கவும் ஐயா. நான் பேச்சு பக்கத்தினைப் பார்த்து நீங்களும் சம்மதித்தீர்கள் என எண்ணிக் கட்டுரைகளை இணைத்துவிட்டேன். உங்கள் உணர்வுகளைக் காயப் படுத்தி இருந்தால் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.

@Kanags: @Ravidreams: @AntanO: இணைத்தக் கட்டுரைகளை மீண்டும் தனிதனியாக்குவதற்கு உதவவும். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 06:50, 31 அக்டோபர் 2015 (UTC)Reply

இணைத்த கட்டுரைகளை மீண்டும் பிரிக்க முடியாது. அதற்கேற்ற தொழிநுட்பம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும், இணைந்திருப்பதே நல்லது என்பது எனது விருப்பம். ஏனையவர்கள் (@Mayooranathan:) கருத்தறிந்து, தனித்தனிக் கட்டுரை வேண்டுமானால் புதிய கட்டுரை ஒன்றைத் தொடங்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:58, 31 அக்டோபர் 2015 (UTC)Reply
ஆம், பிரிக்க முடியாது. வெட்டி ஒட்டியே தனிக்கட்டுரைகளாக்கலாம். இயற்பெயர் (இலக்கணம்) என்று தனிக் கட்டுரையை உருவாக்கலாம் என்பது என் பரிந்துரை. --AntanO 07:10, 31 அக்டோபர் 2015 (UTC)Reply

செம்மை

தொகு

தலைப்பு

தொகு

இக்கட்டுரைக்கு இயற்பெயர் (இலக்கணம்) என்று தலைப்பிட வேண்டும். ஆ.வி கட்டுரையான Given name என்பது பொதுவான இயற்பெயர் / சூட்டிய பெயர் பற்றியது. இருகட்டுரைகள் உருவாக்கலாம்.

  • இயற்பெயர் (இலக்கணம்) - இயற்பெயர்
  • இயற்பெயர் - சூட்டிய பெயர்

--AntanO (பேச்சு) 02:17, 26 சூன் 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயற்பெயர்&oldid=3179461" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயற்பெயர்" page.