பேச்சு:இலங்கைத் திரைப்படத்துறை
இக்கட்டுரையை சிங்களத் திரைப்படத்துறை, இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை என இரண்டாகப் பிரித்து எழுதலாம். ஏற்கனவே உள்ள சிங்களத் திரைப்படத்துறை கட்டுரையுடன் இக்கட்டுரையில் உள்ள சில தகவல்களை சேர்த்துவிட்டு இக்கட்டுரையை "இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை" என்ற தலைப்புக்கு மாற்றி அதற்கேற்ப மேம்படுத்தலாம் என்பது எனது ஆலோசனை.--Kanags \பேச்சு 11:28, 24 செப்டெம்பர் 2008 (UTC)
நல்லது. அப்படியே செய்யலாம்.
--Chandravathanaa 08:44, 25 செப்டெம்பர் 2008 (UTC)
இப்படங்களில் இடம் பெற்ற சிங்களத்துச் சின்னக்குயிலே, சுராங்கனிட்ட மாலு கெனாவா போன்ற சினிமாப் பாடல்கள் பட்டி தொட்டிகள் தோறும் முழங்கின.
சினிமாப்படம் தயாரிக்கும் ஆர்வம் யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும் தொற்றிக் கொண்டதன் விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் Hamlet என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட படம். இனி இந்த மாதிரி படங்களை எடுக்கக்கூடாது என்பதற்கு பலருக்கும் பாடமாக அமைந்தது இப்படம்.
யாழ்ப்பாணத்தில் தயாரான மற்றொரு படம் பாச நிலா. 1965-ல் பட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வளவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ஒரே சிறப்பு இது லண்டனில் திரையிடப்பட்ட முதல் இலங்கைத் தமிழ்ப்படம் என்பதுதான்.
இலங்கையின் குறிப்பிடத்தக்க ஒலிப்பதிவாளர்களில் ஒருவர் சுண்டிக்குளி சோம சேகரம். 50-க்கு மேற்பட்ட சிங்களப்படங்களில் ஒலிப்பதிவாளர் இவர். சென்னை வாகினி ஸ்டுடியோவில் 1955-ல் துணை ஒலிப்பதிவாளராகச் சேர்ந்து படிப்படியாக முன்னேறியவர். இவரும் இவரது மனைவி மாலினிதேவியும் கலைத் தம்பதியர் எனப்புகழப்பட்டவர்கள். இவர்களுக்கும் தமிழ்ப் படம் தயாரிக்க ஆசை வந்துவிட்டது. அதன் பலனே டாக்ஸி டிரைவர். அதன் பிறகு படம் தயாரிக்க அவர்களுக்கு ஆசையும் இல்லை. வாய்ப்பும் அமையவில்லை. எம்.ஜி.ஆரின் உதவியால் சென்னையில் சினிமாத்துறையில் படத் தொகுப்புத் துறையில் ஈடுபட்டிருந்த அருமை நாயகம் என்ற இளைஞருக்கு இலங்கைத் தமிழ்ப்படம் ஒன்றின் இயக்குனராக சேருமாறு அழைப்புவர, கொழும்புக்கு வந்த அவர் இயக்கிய படமே நிர்மலா. இந்தப் படத்துக்குச் சிறப்புச் சேர்த்த அம்சங்களில் ஒன்று யாழ்ப்பாணம் வைரமுத்துவின் அரிச்சந்திர மயான காண்டம் நாடகம். யாழ்ப்பாணத்தில் ஆயிரம் தடவைக்குமேல் மேடை ஏறிய நாடகம் இது. இப்படம் 18 தினங்களில் தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்தது மற்றொரு சிறப்பம்சம்.
இலங்கையில் எத்தனையோ மேடைநாடக, சினிமா நட்சத்திரங்கள் பிரபலமாக விளங்கினர். அவர்களில் இன்றும் நிலைத்து நிற்பவர் நடிகை ஹெலன் குமாரி. எஸ்தர் என்ற ஆறுவயதுச் சிறுமியாக சிங்களத் திரைப்படம் ஒன்றில் நடனமாடிய அவர் ஒக்கொமஹரி (எல்லாம் சரி) என்ற சிங்களப்படத்தில் நடிகையானார். இவர் கதாநாயகியாக நடித்த மஞ்சள் குங்குமம் நாடகத்தை அதன் தயாரிப்பாளரான பிரபல புகைப்படக்கலைஞர் கிங்ஸ்லி எஸ். செல்லையா திரைப்படமாக்கினார். கதாநாயகன் ஸ்ரீ சங்கர். இவர் சென்னைக்கு வந்து ராஜ ராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராக நடித்தவர். மஞ்சள் குங்குமம் படத்தை இயக்கிய எம்.வி.பாலன் இலங்கையின் எம்.ஜி.ஆர். என அழைக்கப்படும் காமினி பொன்சேகாவின் ஒப நெத்தி நம் (நீ இன்றேல்) என்ற சிங்களப்படம் உள்பட பல சிங்களப் படங்களை இயக்கியவர்.
இலங்கைத் தமிழ் மக்களின் தனித்துவமிக்க பேச்சுவழக்கு, பழக்கங்கள், வாழ்க்கைமுறை, சம்பிரதாயங்களை பிரதிபலிக்கும் வகையில் படம் எடுக்க விருப்பினார் கட்டிடக்கலைஞர் வி.எஸ். துரைராஜா. அப்படம்தான் குத்துவிளக்கு. இப்படத்தை அப்போது இலங்கைக்கு வந்திருந்த பாலு மகேந்திரா இயக்க வேண்டும் என்பது இவரது ஆசை. அது நிறைவேறவில்லை. இப்படத்துக்கு பாடல் எழுதிய கவிஞர் ஈழத்து ரத்தினம். அவர் தமிழ்நாட்டின் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற படத்தில் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவர்.
தமிழ் சினிமாப் படம் எடுக்க வேண்டும் என்று இலங்கையில் ஆசைப்பட்டவர்கள் கையைக் சுட்டிக் கொண்டதும் அடுத்த படம் பற்றி யோசிப்பதே இல்லை. இதற்கு விதிவிலக்கானவர் வி.பி. கணேசன். இவர் இந்திய வம்சாவழித் தமிழ்த் தொழிலாளர்களின் பழம் பெரும் தொழிற்சங்கத்தின் நீண்டகாலப் பொதுச்செயலாளர். அவர் மலகய மக்களின் பிரச்னைகளை மையமாக வைத்து படம் எடுக்க விரும்பினார். புதிய காற்று என்ற பெயரில் அந்த விருப்பம் நிறைவேறியது.
புதிய காற்று ஒரு திருப்பம் ஏற்படுத்திய படம். அதற்குக் காரணம் அதன் கதை, வசனம், பாடல்கள், நடிகர்கள். தமிழகப்படங்களின் சாயலை ஒட்டியே எடுக்கப்பட்டதால் இது ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. கதை வசனம் நாடறிந்த எழுத்தாளர் தௌ¤வத்தை எஸ்.ஜோசப். வி.பி. கணேசன் கதாநாயகன். சிங்களத் திரைப்பட நடிகை பரினாலை கதாநாயகி.
இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நான் உங்கள் தோழன் என்ற படத்தை கணேசன் அடுத்து தயாரித்தார். அவரே கதாநாயகன், சுபாஷினி கதாநாயகி, மற்றும் பல முன்னணி நடிகர்கள் பங்கேற்ற இப்படத்தினை நெறிப்படுத்தியவர் எஸ்.வி. சந்திரன். இதுவும் ஒரு வெற்றிப்படமே. நான் உங்கள் தோழனைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் (1978-ல்) அடுத்தடுத்து ஆறு தமிழ் படங்கள் வெளியாகின. அதன்பிறகு 'நாடு போற்ற வாழ்க' என்ற தமது மூன்றாவது படத்தையும் கணேசன் தயாரித்தார். இது அஞ்சனா என்ற சிங்களப் படத்தின் தமிழ் மொழியாக்கப் படம். இதிலும் கணேசனே கதாநாயகன். இவருடன் சிங்களத் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளான கீதா குமார் சிங்கவும் ஸ்வர்ணா மல்லவராச்சியும் நடித்தனர்.
பின்னர் தயாரான தமிழ்ப்படங்களில் பேர் சொல்லும் படியானவை என்று வாடைக்காற்று, தெய்வம் தந்த வீடு, ஏமாளிகள், எங்களில் ஒருவன், மாமியார் வீடு, இரத்தத்தின் இரத்தமே, அவள் ஒரு ஜீவ நதி எனச் சில படங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் 100 நாள் ஓடிய படம் இரத்தத்தின் இரத்தமே. இது ஒரு கூட்டுத் தயாரிப்பு. முக்கிய பாத்திரங்களில் ஜெய்சங்கர், ஜெயச்சந்திரன், அசோகன், நாகேஷ், ராதிகா என்று தமிழக நட்சத்திங்கள் நடித்தனர்.