உறுகுணை இராச்சியத்தின் காலப்பகுதி

தொகு

http://encyclopedia2.thefreedictionary.com/Ruhuna என்ற இணைப்பில் The Great Soviet Encyclopedia (1979) என்ற கலைக்களஞ்சியத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ள பகுதி In the late 16th century, Ruhuna became part of the Kandyan kingdom என்று கூறுகிறது. அஃதாவது, உறுகுணை இராச்சியம் பொ.மு. 290 முதல் பொ. கா. 16 ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்துள்ளது. இந்நிலையில் இவ்வரசின் காலப்பகுதியை மிகக் குறுகியதாகக் கூறுவது சரியாகாது.--பாஹிம் (பேச்சு) 14:01, 29 சூலை 2013 (UTC)Reply

உறுகுணை இராச்சியம் இலங்கை வரலாற்றின் இடைக்காலப் பகுதியில் தோன்றிய இராச்சியமென்று கூறுவது தவறு. இது இலங்கை வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்து இடைக்காலம் வரையில் நிலவிய அரசு என்பதே சரியானதாகும். ஏனெனில் இது 1500 ஆண்டுகளுக்கு மேல் நிலவியுள்ளது.--பாஹிம் (பேச்சு) 14:17, 29 சூலை 2013 (UTC)Reply

இடைஞ்சலுக்கு வருந்துகிறேன். அதில் குறிப்பிடப்பட்டது தவறு போல் உள்ளது. தயவு செய்து கட்டுரை எழுதி முடித்த பின் இதை பாக்கவும். ஆதாரங்களையும் இணைக்கிறேன். நன்றி. -- நி ♣ ஆதவன் ♦   (உரையாட படத்தை சொடுக்கவும்) 14:23, 29 சூலை 2013 (UTC)Reply

பாகிம் கூறுவது 75% சதவீதம் சரி. ஆனால் இலங்கை வரலாறு என்று நோக்குகையில் உடனே நமக்கு நினைவு வருவது மகாவம்சம், தீபவம்சம் என்ற இரண்டு பௌத்தத்தை மட்டும் சார்ந்த நூல்கள் மட்டுமே. உருகுணையை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு பிற்பகுதி முதல் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு பிற்பகுதி வரையும் கூட உருகுணை இராச்சியம் பௌத்தத்தை மட்டும் சார்ந்து இருக்காத மன்னர் குலத்தால் ஆளப்பட்டு வந்தது. ஈழத்தின் பிராகிருதக் கல்வெட்டுகளில் முதன் முதலில் கூறப்படும் நீளமான வம்சமும் சரி, இலங்கையில் முதலில் காசுகளை வெளியிட்ட வம்சமும் சரி இவ்வம்சத்தை சேர்ந்தவர்கள் தான். வியப்பு என்ன எனில் இவர்கள் தமிழர்கள். அதனால் உருகுணை இராச்சியம் சிங்களருடையது என்பது பொருந்தாது.

மேலும் இத்தமிழ் மன்னர்கள் பற்றி தனி நூல்கள் எழுதப்படாவிட்டாலும் மயிலை சீனி. வேங்கடசாமி தன் நூலில் இது பற்றி பத்து பக்கங்களுக்கு கூறியிருக்கிறார். அதனால் ஆங்கில விக்கியில் இருப்பதை அப்படியே எழுதுவதை தவிர்க்கலாம். மேலும் இது சிங்கள இராச்சியம் என்று கூறுவதையும் தவிர்க்கலாம். இக்கட்டுரையின் தலைப்பு மகாநாக இராச்சியம் என்று இருப்பதே சரி. ஏனெனில் அவனே தென்னீழத் தமிழரை கொன்று ஆட்சியை உருகுணையில் அமைத்தவன்.

அவன் ஆட்சியில் உருகுணை எப்படி இருந்தது என்பதற்கு ஆதவன் சேர்த்த உருகுணையின் நிலவியல் தரவுகளை நகர்த்த வேண்டும். நான் இரணடு நாட்களில் செய்கிறேன். அதுவரை மற்றவர்கள் கருத்துகள் வரட்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:52, 29 சூலை 2013 (UTC)Reply

http://en.wikipedia.org/wiki/Mahanaga_of_Ruhuna

மேலுள்ள இணைப்பை பாருங்கள். மகாநாகன் தன் அண்ணிக்கு அஞ்சி வட இலங்கையை விட்டு ஓடிவந்து தென்னீழத் தமிழரிடம் தஞ்சம் அடைந்தான். பிற்பாடு அத்தமிழர்களை கொன்று ஆட்சியை பிடித்தவன் தான் இவன். இவன் இங்கு தஞ்சமடையும் முன்னர் மூன்று தலைமுறைக்கு முன்னரே தமிழர் உருகுணையை ஆட்சி புரிந்துள்ளனர். அதனால் மயிலையாரின் நூலை மேற்கோள் காட்டி உருகுணை சிங்கள இராச்சியம் என்பதை நான் மறுக்கிறேன். ஏற்கனவே இருந்த உருகுணை தமிழராட்சிக்கு துரோகம் செய்து அதை பிடித்தால் அப்பகுதியின் பெயரில் உள்ள உருகுணை இராச்சியம் எப்படி சிங்கள இராச்சியமாகும். அதனால் இதை மகாநாகன் இராச்சியம் அல்லது மகாநாக மரபு என்றே கூறலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:30, 29 சூலை 2013 (UTC)Reply

இறுதிக்கருத்தின்படி நான் இக்கட்டுரையை விரிவாக்குகிறேன். மற்றும் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களையும் நீக்கியுள்ளேன். அதை நீங்கள் தாய்த் தமிழ் மொழிக்கேற்ப எழுதிவிடலாம்.-- நி ♣ ஆதவன் ♦   (உரையாட படத்தை சொடுக்கவும்) 13:44, 31 சூலை 2013 (UTC)Reply
Return to "உருகுணை இராச்சியம்" page.