பேச்சு:உவர் நிலம்

உவர் என்பது பெயர்ச் சொல்லா? உவர்ப்பு எனும் பெயர்ச் சொல் உள்ளது. ஆனால் அது சுவை பற்றியது. கட்டுரையின்படி உவர் நிலம் எனலாம். ஆங்கில விக்கியில் en:Soil salinity--Anton (பேச்சு) 02:13, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நீங்கள் சொல்வது சரி, அன்ரன். உவர்ப்பு என்று கூற வேண்டியதைக் கட்டுரையாளர் உவர் என்கிறார். உவர் என்பது பெயர்ச் சொல்லோ வினைச் சொல்லோ அன்று.--பாஹிம் (பேச்சு) 02:52, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply

உவர் என்பது உப்பையுங்குறிக்கும் (ஆதாரம்). ஆனாலுங்கட்டுரைக்கு இத்தலைப்புப் பொருத்தமானதன்று. --மதனாகரன் (பேச்சு) 04:02, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply

உவர் நிலம் அல்லது உவர்ப்பு நிலம் என்று கட்டுரைத் தலைப்பை மாற்றலாம். --Natkeeran (பேச்சு) 04:05, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply

உவர் நிலம் என்றே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 04:12, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply

கட்டுரையின் தலைப்பை உவர் நிலம் என்று மாத்துவதுதான் சரியானது, உவர் நிலம், உவர் நீர் எண்பத்து உப்புத் தன்மையை உடையது என்று அர்த்தம். --Sivam29 (பேச்சு) 13:46, 3 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இக்கட்டுரைக்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் en:Dryland salinity அல்லது en:Soil salinity எக்கட்டுரையுடன் இணைக்கலாம்?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:56, 8 செப்டெம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உவர்_நிலம்&oldid=1206852" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உவர் நிலம்" page.