பேச்சு:ஊகான்

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Gowtham Sampath

இக்கட்டுரையின் தலைப்பை உகான் என்பதற்கு நகர்த்தலாமே.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:46, 7 நவம்பர் 2018 (UTC)Reply

ஆங்கில விக்கிப்பீடியாவில் தரப்பட்டுள்ள ஒலிப்பு [ù.xân] முறைக்கேற்ப தலைப்பு வூகான் என மாற்றப்பட்டது.--பாஹிம் (பேச்சு) 04:36, 2 பெப்ரவரி 2020 (UTC)

@Kanags: தமிழ் இலக்கணப்படி வூ வரிசையில் ஒரு பெயர் ஆரம்பிக்குமா?? இதற்கு முன்னர் வூ வரிசையில் ஏதேனும் பெயர் இருந்ததுண்டா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:08, 4 பெப்ரவரி 2020 (UTC)

@Gowtham Sampath: வூகான் ஓரளவு சரியான ஒலிப்பே. ஊகான் என்றும் கூறலாம். உருசியம் போன்ற ஒரு சில மொழிகளில் ஊகான் என்றே எழுதியிருக்கிறார்கள். வூ இல் தமிழில் சொற்கள் தொடங்காது. ஆனால் பிறமொழிச் சொற்களுக்கு விலக்கு உண்டா தெரியவில்லை. @Fahimrazick:.--Kanags \உரையாடுக 11:20, 5 பெப்ரவரி 2020 (UTC)

ஆம். வூ இல் தொடங்கும் சொற்கள் தமிழில் இல்லை. இலக்கணமும் அப்படித் தொடங்காது என்கிறது. ஊகான் என்றெழுதுவது தமிழ் முறையே. அப்படியே போனால் ஏராளமான வேற்றுமொழிச் சொற்களை எழுத வேறு வழியும் இல்லை. தெளிவின்மை ஏற்படலாம். அதனைத் தவிர்ப்பதே முறை.--பாஹிம் (பேச்சு) 01:49, 6 பெப்ரவரி 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஊகான்&oldid=2911040" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஊகான்" page.