பேச்சு:ஊசல் (இயற்பியல்)
இக்கட்டுரைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுத் தற்போது தரப்பட்டுள்ள ஊசல் விதி எனும் பெயர் பொருத்தமற்றதாக உள்ளது. ஏனெனில் 'ஊசலின் விதிகள்' இக்கட்டுரையின் கீழ் வரக்கூடிய ஒரு துணைத் தலைப்பு மட்டுமே ஆகும்(கட்டுரையில் உள்ள இறுதிப் பகுதியைக் காணவும்). இவ்வாறிருக்கையில் அதனையே இக்கட்டுரையின் தலைப்பாகக் கொள்ளல் சிறந்ததன்று. இக்கட்டுரையில் 'ஊசல்' பற்றிய பொதுவான கருத்துக்கள், அதன் கண்டுபிடிப்பு, பயன்பாடு, விசையியல் விளக்கம், விதிகள் ஆகியவை தரப்பட்டுள்ளன. 'Simple pendulum' என்பதன் தமிழ்ச் சொல்லாக எளிய ஊசல் அல்லது தனி ஊசல் என்பவையே பொருந்தும். இவற்றுள் ஏதேனும் ஒன்றினைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்தல் சாலச் சிறந்தது. --Praveenskpillai (பேச்சு) 23 சூன் 2013 (UTC)
- ஊசல் என்றாலே போதும். அல்லது ஊசல் இயக்கம் எனலாம். இதுபற்றி ஓர் ஒப்பியக்கச் செய்முறைச்சாலையை தமிழில் பெயர்த்து இருந்தேன். பார்க்கவும்.ஊசல் செய்முறைச்சாலை. இது போல தமிழில் எல்லா ஒப்பியக்கங்களையும் எளிதாகச் செய்யலாம். இதனை நான் முதன் முதல் மலேசியாவில் (2011 இல்) காட்டினேன்.--செல்வா (பேச்சு) 18:59, 23 சூன் 2013 (UTC)
தாங்கள் இக்கட்டுரையில் சேர்த்துள்ள ஒப்பியக்கச் செய்முறைச்சாலை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இக்கட்டுரைக்கு இது மேலும் வலு சேர்க்கின்றது. --Praveenskpillai (பேச்சு) 24 சூன் 2013 (UTC)
- ஊசல் விதி தலைப்பு இக்கட்டுரைக்குப் பொருந்தவில்லை. ஊசல் அல்லது தனி ஊசல் அல்லது எளிய ஊசல் என்றே இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:06, 23 சூன் 2013 (UTC)
- எளிய/தனி என்னும் முன்னுட்டு ஏதும் இன்றி, ஊசல் என்றே பெயரிடலாம். பிற ஊஞ்சல் போன்றவற்றுக்கு குழப்பம்நீக்குப் பக்கத்துக்குத் தொடுப்பு கொடுக்கலாம். எளிய ஊசல் என்பது சரியே, ஆனால் தேடும்பொழுது எளிய ஊசல் என்று இடுவதைவிட ஊசல் என்றே தேடுவார்கள் என்று நினைக்கின்றேன். அல்லது எளிய ஊசல் என்று தலைப்பு இட்டு, ஊசல் என்பதற்கும் வழிமாற்று வைக்கலாம்.--செல்வா (பேச்சு) 21:38, 23 சூன் 2013 (UTC)
- ஊசல் விதி தலைப்பு இக்கட்டுரைக்குப் பொருந்தவில்லை. ஊசல் அல்லது தனி ஊசல் அல்லது எளிய ஊசல் என்றே இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:06, 23 சூன் 2013 (UTC)
முன்னொட்டு ஏதும் இன்றி 'ஊசல்' என்று கூறினால் அது பொதுவாக 'pendulum' ஐக் குறிக்கும். ஆனால் இங்கு 'simple pendulum' பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது. கூட்டு ஊசல்(Compound pendulum) பற்றியோ ஃபூகோ ஊசலி(Foucault pendulum) பற்றியோ கூறப்படவில்லை . எனவே 'தனி ஊசல்' என்பது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஒருவேளை பின்னாளில் கூட்டு ஊசல், ஃபூகோ ஊசலி போன்றவற்றைப் பற்றி தகவல்கள் சேர்க்கும்போது 'ஊசல்' என்று மாற்றம் செய்யலாம்.--Praveenskpillai (பேச்சு) 24 சூன் 2013 (UTC)
- பொருத்தமான தலைப்பு. --Sengai Podhuvan (பேச்சு) 00:55, 25 சூன் 2013 (UTC)
- இப்போதுள்ள ஊசல் (இயற்பியல்) என்ற தலைப்பே பொருத்தமானது. அது simple pendulum, pendulum இரண்டுக்கும் பொருந்தும். ஆங்கில விக்கிக் கட்டுரையிலும் அவ்வாறே தலைப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையின் முதல் வரிகளில் அதற்கேற்ப மாற்றம் செய்திருக்கிறேன். ஊசல் என்ற தலைப்புக்கு பக்கவழிமாற்றம் ஏற்படுத்தியுள்ளேன்.--Kanags \உரையாடுக 10:25, 25 சூன் 2013 (UTC)