விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் இயற்பியல்
விக்கித்திட்டம் இயற்பியல் உங்களை வரவேற்கிறது
நோக்கம்
தொகுஇயற்பியல் (இலங்கை வழக்கம்: பெளதீகவியல்) என்பது உலகின் இயல்பை, இயற்கையை ஆயும் அறிவியல் துறை ஆகும். குறிப்பாக இவ் அண்டம் ஆக்கப்பட்ட பொருட்கள், பொருட்களின் இயக்கம், மற்றும் அவற்றுடன் தொடர்புடையை ஆற்றல், விசை போன்றவற்றை ஆயும் துறை ஆகும். மின்சாரம், தானுந்து, கணினி என தற்கால உலகின் பல தொழில்நுட்பங்கள் இயற்பியலின் வளர்ச்சியால் உருவாகியவை ஆகும். ஆகையால் இயற்பியல் இன்றைய உலகை வடிவமைக்கும் மிக முக்கிய துறைகளில் ஒன்று.
விக்கித்திட்டம் இயற்பியல் இத் துறை தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இயற்பியல் துறைசார் வல்லுனர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் இத் திட்டத்தில் சேர அழைககப்படுகின்றனர். உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும். இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இங்குள்ள 'பயனர்கள்' பகுதியில் தங்கள் பெயரை சேர்க்கவும்.
துணைத் துறைகள்
தொகு- மரபார்ந்த இயந்திரவியல் - Classical Mechanics
- இயக்கவியல் - Dynamics
- இயக்க விசையியல் - Kinetics
- ஒழுங்கின்மை கோட்பாடு
- நிலையியல் - Statics
- திண்ம இயற்பியல் - Solid Mechanics
- பாய்ம இயக்கவியல் - Fluid Mechanics
- மின்காந்தவியல் - Electromagnetism
- நிலைமின்னியல் - Electrostatics
- மின்னியக்கவியல் - Electrodynamics
- மின்னோட்டவியல் - Current Electricity
- காந்தவியல் - Magnetism
- ஒளியியல் - Optics
- வடிவ ஒளியியல் - Geometrical Optics
- இயற்பியல் ஒளியியல் - Physical Optics
- ஒலியியல் - Acoustics
- சார்புக் கோட்பாடு - Relativity
- சிறப்புச் சார்புக் கோட்பாடு - Special Relativity
- பொதுச் சார்புக் கோட்பாடு - General Relativity
- வெப்பஇயக்கவியல் - Thermodynamics
- புள்ளியியல் இயக்கவியல் - Statistical Mechanics
- அணு இயற்பியல் - Atomic/Particle Physics
- அணுக்கரு இயற்பியல் - Nuclear Physics
- மட்டுவ இயற்பியல்/குவாண்டம் இயற்பியல்- Quantum Physics
- வானியற்பியல் - Astrophysics
- புவி இயற்பியல் - Geophysics
பயனர்கள்
தொகு- விஜய நரசிம்மன்
- செல்வா (தனிமங்கள் திட்டம் நிறைவேறும் வரை சிறு பங்களிப்புகள்)
- பரிதிமதி
- தினகரன்
- ஸ்ரீஹீரன்
- முஹம்மது அம்மார்\உரையாடுக
- பாலாஜி (பேசலாம் வாங்க!)
பணிகள்
தொகுஇயற்பியலுக்கான இந்த விக்கித் திட்டம் புதியது என்பதை மனதில் கொண்டு முதலில் இத்திட்டத்தை சீராக்க வேண்டும்.
- இயற்பியல் தொடர்பான கட்டுரைகளை கண்காணிக்க வேண்டும்.
- இப்பக்கத்தில் உள்ள இயற்பியல் துணைதுறைகள் பட்டியலை நுண்மையும் பரப்பும் கொண்டதாய், வளர்ந்து வரும் இயற்பியல் துறையின் வளர்ச்சிக்கு தக்கதாய் ஆக்க வேண்டும்.
- முதலில் அடிப்படை விதிகள், கோட்பாடுகள், கொள்கைகள் ஆகியவற்றை பற்றிய கட்டுரைகளை உருவாக்க வேண்டும்.