பேச்சு:ஊர்த் தேன்சிட்டு

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Info-farmer

இதன் தலைப்பு ஊதாப்பிட்ட தேன்சிட்டு என்று இருக்க வேண்டுமல்லவா? --சிவக்குமார் \பேச்சு 18:27, 10 ஏப்ரல் 2012 (UTC)

இதன் சரியான தமிழ்ப் பெயர் எதுவெனத் தெரியவில்லை. ஊதாப்பிட்டு தேன்சிட்டு http://tawp.in/r/y5w எனவும் ஊதாப்பிட்ட தேன்சிட்டு எனவும் இருப்பதாக அறிகிறேன். எப்படி தமிழ்ப் பெயரை உறுதிப்படுத்துவது? நன்றி! --Anton (பேச்சு) 01:52, 11 ஏப்ரல் 2012 (UTC)
பிட்டம் என்றால் பின்புறம், மலம் கழிக்கும் பின்புறம். எனவே பிட்டம் என்று இருக்கலாம். ஆனால் இது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு தேன்சிட்டு. இதற்கு வேறு சரியான பெயர் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை.--செல்வா (பேச்சு) 14:36, 16 சனவரி 2013 (UTC)Reply
நன்றி தமிழில் பறவைப் பெயர்கள் எனும் நூல் ஊதாப்பிட்டத் தேன்சிட்டு எனக் குறிப்பிடுகின்றது. --Anton (பேச்சு) 13:19, 19 சனவரி 2013 (UTC)Reply
AntanO தாங்கள் என் பேச்சுப் பக்கத்தில் இந்தக் கட்டுரையின் பெயரை நகர்த்தியது குறித்து எழுப்பிய வினா குறித்து இங்கேயே உரையாடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கேயே உரையை இட்டுள்ளேன். இந்தப் பறவையின் தமிழ்ப் பெயரை நான் பார்த்த தமிழகப் பறவைகள் (தமிழகத்தில் உள்ள 138 பொதுப்பறவைகளின் குறுங்கையேடு) என்னும் கையேடானது பறவை நோக்கர்கள் பயன்படுத்தும் கையேடுதான். இதன் பெயருக்கு இதை மட்டுமே நம்பாமல் வேறொரு மேற்கோளையும் இட்டுள்ளேன். பேச்சுப்பக்கத்தில் தாங்கள் கொடுத்துள்ள தமிழில் பறவைப் பெயர்கள் என்னும் வெளி இணைப்பு திறக்கவில்லை. நான் கூறியதில் தங்களுக்கு ஏற்பு இல்லையெனில் பழையபடியே பறவையின் பெயரை ஊதாப்பிட்டத் தேன்சிட்டு என்றே மாற்றிவிடலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 09:05, 21 சனவரி 2023 (UTC)Reply
@Arularasan. G: பொதுவாக பழக்கத்தில் இல்லாத பறவைகளின் பெயர்களில் ஆளாளுக்கு பெயரிடும் வழக்கம் உள்ளன. எனவே, அது தொடர்பில் நாம் சற்று கவனிப்பது நன்று. @Info-farmer: முன்னர் நீங்கள் எனக்கு ஒரு பறவைகள் பற்றி மின்நூல் அனுப்பியிருந்தீர்கள். ஆனால் தற்போது அதனை என்னால் அணுக முடியவில்லை. உங்களிடம் இருந்தால், அருளரசனுக்கு அனுப்ப முடியுமா? --AntanO (பேச்சு) 04:27, 6 மே 2023 (UTC)Reply
எந்த நூலை அனுப்பினேன் என மறந்துவிட்டது. அந்நூலின் பெயரை அறியத் தாருங்கள். எனினும், பறவைப் பெயர்களின் நூலினை அவருக்கு தேடி அளிப்பேன். உழவன் (உரை) 00:28, 7 மே 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஊர்த்_தேன்சிட்டு&oldid=3707902" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஊர்த் தேன்சிட்டு" page.