பேச்சு:எட்டாம் தமிழ் இணைய மாநாடு

  • இக்கட்டுரையில் விமர்சனம் என்னும் உள்தலைப்பு தேவையா? அதனை நீக்குவது சரியாக இருக்கும் என நினைக்கின்றேன். என்ன கருத்தரங்கம், ஆய்வரங்கக் கருத்துப்பொருள்கள் என்னென்ன, எங்கு நடைபெற்றது, எத்தனை பேர் பொதுவாக பங்குகொள்கிறார்கள், எத்தனை கட்டுரைகள் படிக்கப்பட்டன போன்ற பொதுவான கருத்துகள் மட்டும் இருந்தால் போதும். கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தன என்னும் குறிப்பு இருப்பது தவறல்ல. --செல்வா 23:55, 21 பெப்ரவரி 2010 (UTC)
முற்றாக மாறுபடுகிறேன். எந்த ஒரு கருத்துநிலைக்கும், செயற்பாட்டுக்கும், அமைப்புக்கும் விமர்சனங்கள் இருக்கும். அதைப் பதிவு செய்வது தகுந்தது, நடுநிலைக்கு ஏற்ற செயற்பாடு. தகுந்த மேற்கோள்களுடன் விமர்சனம் தரப்பட்டுள்ளது. --Natkeeran 00:31, 22 பெப்ரவரி 2010 (UTC)
நற்கீரன், நடுநிலை என்பது இப்படியானது அல்ல என்பது நான் புரிந்துகொண்டது. முதலாவது அறிவியல் கருத்தரங்குகளில் இப்படியான தீர்மானங்கள் பொதுவாக நிறைவேற்றுவதும் இல்லை. இது ஆய்வரங்காக இல்லாமல் தலைப்பில் உள்ளவாறு ஒரு வகையான "மாநாடு", "கூட்டமாக" இருக்கலாம். இக் கட்டுரையில் விமர்சனமாக வைத்துள்ளது மாநாடு அமைப்பின் குழுவொன்றின் வருங்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஒருவரின் மாற்றுக் கருத்தாக இருக்கலாம். அதையெல்லாம் இங்கு கலைக்களஞ்சியக் கட்டுரையின் பொருளாக ஆக்குவது, தேர்வது சரியென்று தோன்றவில்லை. எடுத்துக்காட்டாக ஐஇஇஇ (IEEE) என்னும் நிறுவனம் ஆண்டுதோறும் 900 கருத்தரங்குகள் நடத்துகின்றனர் (பார்க்க ஐஇஇஇ IEEE sponsors more than 900 conferences and meetings and is involved in the technical program development of numerous events around the world.) அவற்றின் நிறுவனக் குழு முடிவுகள் இருக்கும், ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் கலைக்களஞ்சிய கட்டுரையில் கூறுவதோ, அம் முடிவுகளைப்பற்றி சிலர் கூறும் கருத்துகளைப் பதிய வேண்டும் என்பதோ பொருத்தமாகத் தெரியவில்லை. மாற்றுக்கருத்துகள், மாற்றுப் பார்வைகள் முதலியவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும், கட்டுரை நடுநிலைமையுடன் எழுத வேண்டும் என்பதுதான் நம் (விக்கியின்) கொள்கை. ஆனால் இவை இப்படியானவை அல்ல. எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 01:13, 22 பெப்ரவரி 2010 (UTC)
மாறுபடுகிறேன். கலைக்களஞ்சிய பொருள் அல்ல என்று கூறி விமர்சனங்களைத் தவிர்ப்பது முறையல்ல. உத்தமம் ஐஇஇஇ போல் தனியே ஒரு தொழில்நுட்ப அமைப்பு அல்ல. இது மொழிசார் சமூக நுட்ப அமைப்பு. ஒர் அமைப்பு முன்வைத்த "பரிந்துரைகள்" தொடர்பாக, தொழில்படும் முறை பற்றி முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் பதிவு செய்வது தகுந்த செயற்பாடே. ஒரு மதிக்கப்பெற்ற கட்டுரையாளரை, முக்கிய உத்தம உறுப்பினரை மேற்கோள் தந்தே விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. --Natkeeran 01:31, 22 பெப்ரவரி 2010 (UTC)
சரி நற்கீரன். நானும் உங்கள் கருத்துடன் மாறுபடுகின்றேன் (அதாவது கட்டுரையில் இப்படி இருக்கலாமா என்பது பற்றி). நீங்கள் தந்திருக்கும் விமர்சனத்தை, உத்தமம் பற்றிய உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்னும் பக்கத்தில் இப்படியான விமர்சனத்தை இந்த ஆண்டு மாநாட்டில் வைத்தார்கள் என்று சொல்லலாம். ஆனால் ஒரு கருத்தரங்கு அல்லது மாநாடு என்பது எதை பற்றியது, அதன் கருத்துப் பொருள் என்ன என்பது போன்று முன்னர் நான் கூறியவாறு கருத்துகள் இருப்பது நடுநிலையாகவும் பொறுப்பாகவும் தரும் தகவல்களாகும் என்னும் என் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். உத்தமத்தின் நடவடிக்கைகள், கொள்கைகள், அவற்றைச் செயல்படுத்துவது போன்றவற்றில் கசப்புணர்வு கொண்டவர்கள் பலர் உள்ளனர் என்பதனையும் நான் நன்கு அறிவேன், ஆனால் அவற்றின் சுருக்கமான பொறுப்பான வரைவு அந்த நிறுவனத்தைப் பற்றிய கட்டுரையில் இருப்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. மாற்றுவதும் மாற்றாததும் உங்கள் விருப்பாகவே விட்டுவிடுகின்றேன் (வருத்தப்பட்டுக் கூறவில்லை). உத்தமத்தைப் பற்றிப் பற்பல எதிர்க்கருத்துகள் தனிப்பட்ட முறையில் என்னிடமும் உண்டு ஆனால் அவற்றைப் பதிவு செய்யும் இடம் இதுவல்ல என்பதே என் கருத்து. --செல்வா 02:21, 22 பெப்ரவரி 2010 (UTC)


  • மேலும் ஒவ்வொரு ஆண்டுக் கருத்தரங்கிற்கும் தனி ஒரு கட்டுரை இருக்க வேண்டுமா? அல்லது தமிழ் இணைய மாநாடு என்னும் ஓரே தலைப்பின் கீழ் ஆண்டுதோறும் நடக்கும் அரங்குகளைப் பற்றி மட்டும் குறித்தால் போதுமா? --செல்வா 23:58, 21 பெப்ரவரி 2010 (UTC)
ஒவ்வொரு ஆண்டுக்கும் தனிக் கட்டுரை நன்று. மாநாட்டின் உள்ளடக்கம், தீர்மானங்கள், செயற்பாடுகள் பற்றி மேலும் விரிவாக எழுதலாம். --Natkeeran 00:32, 22 பெப்ரவரி 2010 (UTC)
மேலே பார்க்கவும்
  • இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள விமர்சனங்கள் எனும் தலைப்பிலான கருத்துக்களை மட்டும் நீக்கி விடலாமே...--Theni.M.Subramani 01:54, 22 பெப்ரவரி 2010 (UTC)

இது போன்ற மாநாடுகளின் விமர்சனங்களை விக்கியில் சேர்க்கலாமா என்று தெளிவில்லை. ஆனால், விமர்சனமாக சுட்டப்படும் மேற்கோள் விமர்சகரின் நேரடித் தளத்தில் இருப்பது நன்று. TinyPaste ஏற்புடையது அல்ல. தவிர, மாலன் தமது இந்தக் கருத்தைத் திரும்பப் பெற்று அவரது தளத்தில் இருந்து அழித்து விட்டார். அவர் அழித்த பிறகும் இதை மேற்கோளாகப் பயன்படுத்துவது அறம் அல்ல என்றும் உத்தமம் மடலாடற்குழுக்களில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த மேற்கோளை நீக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 08:33, 22 பெப்ரவரி 2010 (UTC)

தனியொருவரின் விமரிசனங்களைத் தருவது நல்லதல்ல. மேலும், மாலன் தனது கருத்தை மீளப் பெற்றிருப்பாரானால், அது இனியும் இங்கு இடம்பெறத் தேவையில்லை. மேலும், இப்படியான விமரிசனங்களை copy/paste பண்ணாமல், சிறு குறிப்பாக விக்கி நடைக்கேற்ப மாற்றி எழுதவேண்டும். அல்லது வெளி இணைப்பாக மட்டும் தரலாம்.--Kanags \உரையாடு 09:18, 22 பெப்ரவரி 2010 (UTC)
அரசியல் கட்சிகள், அல்லது அமைப்புகள் கூட்டாக அறிக்கை விடுவது மட்டும் விமர்சனம் என்று மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்து நல்லதல்ல. பெரும்பாலான விமர்சனங்கள் துறைசார் வல்லுனர்களால், ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுவதுதான். நடை மாற்றி எழுதப் பட வேண்டும் என்பது சரியான கோரிக்கையே. --Natkeeran 03:25, 23 பெப்ரவரி 2010 (UTC)
விமர்சனங்களைக் கட்டாயம் ஆவணப்படுத்தலாம், நற்கீரன். ஆனால், இந்த இடத்தில் மாலன் தனது விமர்சனத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளார். தவிர, அந்த செய்தி வெளியீடு, தீர்மானம் போன்சசறவை எல்லாம் உத்தமம் அமைப்பு தொடர்பானவை, பொதுமன்றம் கூடுவதற்கு வாய்ப்பாக அமைந்ததால் மட்டுமே மாநாட்டின் போது நிகழ்த்தினர். உத்தமம் கட்டுரையில் இவற்றைக் குறிக்கலாம். -- சுந்தர் \பேச்சு 05:28, 23 பெப்ரவரி 2010 (UTC)

Start a discussion about எட்டாம் தமிழ் இணைய மாநாடு

Start a discussion
Return to "எட்டாம் தமிழ் இணைய மாநாடு" page.