பேச்சு:எஸ்கிமோ

//எஸ்கிமோக்களிடம் ஒரு விசித்திர பழக்கம் இருந்து வருகிறது. அதிகப்படியாகக் குழந்தை பிறந்தால் அதை அவர்கள் கொன்று விடுவார்களாம். அதிலும் பெண் குழந்தை பிறந்தால் உடனடியாக கொலை தான். பிறந்த குழந்தையை பனிக்கட்டியில் வைத்து விடுவார்களாம். குழந்தை பனியில் விறைத்து இறந்து விடுமாம். அதிகப்படியான குழந்தைகளை தங்கள் கடவுள் விரும்புவதில்லை என்பது இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.//

மேற்குறிப்பிட்ட பகுதியை ஆதாரம் இல்லாததால் நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:39, 9 அக்டோபர் 2012 (UTC)Reply
என்ன தலைப்பிற்கு மாற்ற வேண்டும், ஏன் என குறிப்பிடவில்லையே? தினேஷ்--சண்முகம்ப7 (பேச்சு) 16:01, 9 அக்டோபர் 2012 (UTC)Reply
'ஸ்' என்பது தமிழ் எழுத்தள்ளவே; அதனால், எசுகிமோ என்று மாற்றலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:15, 10 அக்டோபர் 2012 (UTC)Reply
ஓ, கிரந்த நீக்கலா, நான் வரலப்பா :P.. சரி என்றால் மாற்றுங்கள் தினேஷ் :)--சண்முகம்ப7 (பேச்சு) 03:13, 10 அக்டோபர் 2012 (UTC)Reply
எசுக்கிமோ என்னும் சொல்லே அவர்களைப் பழிப்பது போன்றது! அவர்களுக்கு என்று பெயர்கள் உண்டு. எசுக்கிமோ என்பது இனவாத, வசைமொழிப் பெயர், இழிவாகக் கருத்தப்படுவது. ஆங்கில விக்கியிலும் இதனைக் கூற வேண்டும். எனவே இனுவிட்டு-யூப்பிக்கு மக்கள், வடமுனை முதற்குடி மக்கள் என்பது போன்ற பெயர்கள் பொருத்தமானவை. தமிழ் விக்கிப்பீடியாவில் இனுவிட்டு-யூப்பிக்கு என்று இட்டு அழைக்கலாமா? எசுக்கிமோ என்பது வேண்டாம் என்பது என் பரிந்துரை. "எசுக்கிமோ", "எஸ்கிமோ" ஆகியவற்றுக்கு வழிமாற்றுகள் தரலாம். கட்டுரையிலும் எசுக்கிமோ என்பது வசைமொழி என்று கருதப்படுவதாகக் குறிக்கப்பெறல் வேண்டும்.--செல்வா (பேச்சு) 04:30, 10 அக்டோபர் 2012 (UTC)Reply
ஓ, இது எனக்குப் புதிய செய்தி செல்வா. கனடாவில் இருப்பதால் இவ்வின மக்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இன்னும் கூடுதல். இச்செய்திக்கான சான்று ஏதாவது இருந்தால் சுட்டுங்களேன். -- சுந்தர் \பேச்சு 06:33, 10 அக்டோபர் 2012 (UTC)Reply
சுந்தர், இது பரவலாகக் கனடாவில் அறியப்படும் ஒன்று. ஆங்கில விக்கியின் பேச்சுப்பக்கத்தில் இருப்பதையும் பாருங்கள் நூற்சான்று அல்லது தக்க கூர்நோக்கு அலசல்கள் ஏதும் இருந்தால் தருகின்றேன். --செல்வா (பேச்சு) 21:11, 10 அக்டோபர் 2012 (UTC) இப்போதைக்கு: இனவேற்றுமை இழிவுச்சொற்கள்.--செல்வா (பேச்சு) 21:13, 10 அக்டோபர் 2012 (UTC)Reply
ஓ, ஆங்கில விக்கியில் இருக்கும் அமெரிக்க நோக்கைத் தவிர்த்து தமிழில் நல்ல பொருத்தமான சொல் கொண்டே அழைக்கலாம். பெயரைப் பற்றிய தனிப்பத்தியில் விளக்கத்தையும் சேர்க்கலாம். வலுவான சான்று இருந்தால் நல்லது. -- சுந்தர் \பேச்சு 09:28, 12 அக்டோபர் 2012 (UTC)👍 விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:01, 14 அக்டோபர் 2012 (UTC)Reply

👍 விருப்பம் சுவையான விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி- தமிழ்க்குரிசில் ( பேச்சு )

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எஸ்கிமோ&oldid=2843903" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எஸ்கிமோ" page.