பேச்சு:ஐயப்பித்து

There are no discussions on this page.

ஐயப்பித்து என்னும் பெயரை இதுவரை நான் அறிந்ததே இல்லை. மனச்சிதைவு என்பது இக்கட்டுரைக்கு பொருத்தமான தலைப்பா?? கவனிக்க @Kanags, AntanO, மற்றும் Nan: --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:59, 3 பெப்ரவரி 2019 (UTC)

@Gowtham Sampath: paranoia n. அறிவுப் பிறழ்ச்சி, தருக்கியல் சித்தப்பிரமை. - தமிழ் அகராதி. கீழே உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகளையும் பாருங்கள். மனச்சிதைவு = Schizophrenia; அறிவுப் பிறழ்ச்சி--நந்தகுமார் (பேச்சு) 06:47, 4 பெப்ரவரி 2019 (UTC)
@Perichandra மற்றும் செல்வா:--Kanags (பேச்சு) 07:00, 4 பெப்ரவரி 2019 (UTC)
@Nan: ஆம் அண்ணா, Schizophrenia என்பது தான் மனச்சிதைவு என்பதும், paranoia என்பது சித்தப்பிரமை என்றும் நேற்றே ஆராய்ந்து தெரிந்துக் கொண்டேன், ஆனால் [விக்சனரியில்] மனச்சிதைவு என்றே உள்ளது. அதனால் தான் இக்கட்டுரைக்கு மனச்சிதைவு என்பது சரியானத் தலைப்பா என்று கேள்வி எழுப்பினேன். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:28, 4 பெப்ரவரி 2019 (UTC)
@Gowtham Sampath, செல்வா, மற்றும் Nan:: மனச்சிதைவு என்பதும் இதுவரை தமிழிலில்லாத சொல்லே. ஆகவே அறியாத சொல்லா அல்லது இல்லாத சொல்லா என்பது தகுதியாகாது. விக்கிப்பீறியாவில் தமிழ்மாபிலே காணாத கருத்துக்களுக்கு ஏற்கெனவே உள்ள சொற்களைப் புணர்த்தியோ புதுச்சொற்களைத் தமிழ்மொழியியல் மரபின்படி ஆக்கியோ சொற்களை வழங்குகின்றோம்.
 புதுத்தமிழ்ச்சொற்களையும் மேலும் மனச்சிதைவு என்பதற்கும் Paranoia-உக்கும் தொடர்பேயில்லை; குறிப்பாக பிரமைநிலை ஐயத்தைக் குறிப்பதன்று. அடுத்துச்  சித்தப்பிரமை என்பது delusion.   பிரமை piramai, n. < bhrama. 1. Wondering, bewilderment, perplexity, confusion, stupor; மயக்கம். மனக்கவலைப் பிரமையுற்று (திருப்பு. 310). 2. Insanity, madness; பயித்தியம். 3. Infatuation; பெருமோகம். நிமலமூர்த்தி பேரிலே பிரமைகொண்ட பெண் (குற்றா. குற. 38). 4. Ignorance; அறியாமை. (யாழ். அக.)

ஆனால் Paranoia = "In everyday language, the term paranoia refers to someone who feels excessively suspicious without justification, and/or that others are plotting against him." மனப்பிரமை (p. 3134) maṉa-p-piramai மனப்பிரமை maṉa-p-piramai, n. < id. +. Delusion of mind; மனத்திலுண்டாம் மயக்கம்.

  • ஐயப்பித்து என்பது சரியான சொல். இப்படியொரு சொல் தமிழில் வழங்கப்பெறவில்லை. ஆனால் இது மிகவும் பொருத்தமான சொல். paranoia என்பது மனச்சிதைவு அல்லவே அல்ல. இதுவொரு தீரா ஐயம் கொள்ளும் உளப்போக்கு இப்படி ஆகிவ்டலாம், அப்படி ஆகிவிடலாம் என்றும் ஐயப்பட்டு அஞ்சும் போக்கு. எனவே ஐயப்பித்து என்பது மிகச்சிறந்த சொல்.--செல்வா (பேச்சு) 18:44, 6 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐயப்பித்து&oldid=2650550" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஐயப்பித்து" page.