பேச்சு:கடற்காயல்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sundar
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 7, 2012 அன்று வெளியானது. |
கடற்காயல் என்பது தமிழ்நாட்டில் வழங்கும் சொல்லா? இலங்கையில் lagoon என்பதைக் களப்பு (உதாரணம்: மட்டக்களப்பு) என்றே கூறப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 00:10, 10 மார்ச் 2012 (UTC)
- தமிழ்நாட்டில் என்ன சொல் புழங்குகிறது என்று தெரியவில்லை. காயல்பட்டினம் என்று ஒரு ஊர் உள்ளது--இரவி (பேச்சு) 07:02, 10 மார்ச் 2012 (UTC)
- இந்தச் சொல் விக்சனரியிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. --மணியன் (பேச்சு) 09:02, 10 மார்ச் 2012 (UTC)
- களப்பு என்பதையும் கட்டுரையில் குறித்துள்ளேன்.--சிவக்குமார் \பேச்சு 06:24, 25 ஏப்ரல் 2012 (UTC)
- தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளிலும் கேரளாவிலும் காயல் எனுஞ்சொல் புழக்கத்திலுள்ளது. ஆனால் பெரும்பாலும் backwater என்ற பொருளில் ஆளப்படுவதாக நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 02:52, 5 சூலை 2014 (UTC)