பேச்சு:கணக்கெடுப்பில் உள்ள ஊர்

கணக்கெடுப்பில் உள்ள ஊர்

தொகு

சிறு சந்தேகம். இந்தக் கட்டுரையில் கணக்கெடுப்பில் உள்ள ஊர் என்று உள்ளது. ஊர் என்றாலே பொதுவாக பார்கையில் கிராமம், நகரம் என அனைத்தையும் குறித்தாலும் அதிக இடங்களில் இதன் பயன்பாடு கிராமத்தையே குறிக்கும்.

குறிக்கப்பட்டுள்ள வரையறைகள் இந்தக் கோப்பின் கடைசி பக்கத்தில் காணப்படும் ஒரு நகர்புறத்திர்கான வரையரைகள் போல் உள்ளதே. இணைத்துள்ள கோப்பு குறிப்பிடும்படி பார்த்தால் இந்த விக்கி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அனைத்தும் ஒரு நகர்புறத்திற்கான தகுதிகள்.

இந்தியாவில் நாம் 'Town' ஐ நகர்புறமாக (Urban area) கொள்கிறோம். எனவே மூலக் கட்டுரையான Census town கணக்கெடுப்பில் உள்ள ஊர்கள் என இருப்பது முரணாக இருக்கிறது. குழப்பத்தை தீர்த்து வைக்கவும். --எஸ்ஸார் (பேச்சு) 15:46, 24 ஆகத்து 2012 (UTC)Reply

Town என்பதைப் பேரூர் என வேறுபாடு காட்டலாமா? Town panchayat என்பதை பேரூராட்சி என அரசில் குறிப்பிடுகிறார்கள்.
தொடர்புடைய உள்ளாட்சித்துறைச் சொற்கள்:

village - ஊர் town - பேரூர் taluk - வட்டம் block - கோட்டம் district - மாவட்டம் corporation - மாநகர் -- சுந்தர் \பேச்சு 19:02, 24 ஆகத்து 2012 (UTC)Reply

town என்பது பொதுவாக இந்தியாவில் நகர்ப் பகுதிகளையே குறிப்பிடுகிறது. பேரூராட்சி (Town Panchayat) எனும் அமைப்பு தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்பில் மட்டுமே இருக்கிறது. பிற மாநிலங்களில் பேரூராட்சி அமைப்புகளே இல்லை. பிற மாநிலங்களில் ஊராட்சி (Panchayat) -> ஊராட்சி ஒன்றியம் (Block Development Office or Panchayat Union Office) -> மாவட்ட ஊராட்சி (District Panchayat) எனும் நிலையிலும், நகர்ப் பகுதிகள் நகராட்சி (Municipality) எனும் நிலையிலும், பெருநகரப் பகுதிகள் மாநகராட்சி (Corporation) எனும் நிலையிலும் இருக்கின்றன. இவை அனைத்தும் உள்ளாட்சி அமைப்பில் இருக்கும் பிரிவுகள். இவை வருவாய்த் துறையின் கீழ் வரும் பொழுது, கிராமம் (Village), வருவாய் அலுவலகம் (Revenue Office), வட்ட அலுவலகம் (Taluk Office), வருவாய்க் கோட்ட வளர்ச்சி அலுவலகம் (Revenue Development Office), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (District Collectorate) என்று இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் வருவாய்த்துறைக் கிராம நிர்வாக அலுவலகத்திற்கான எல்லைகள் சில ஊராட்சிகளையும், சில பேரூராட்சிகளையும் கூட உள்ளடக்கியதாகப் பெரிய அளவில் இருக்கின்றன. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:58, 25 ஆகத்து 2012 (UTC)Reply
ஓ, தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த அமைப்பு உள்ளதா? எனக்கு முன்னர் தெரியாது, தேனி சுப்பிரமணி. தகவலுக்கு நன்றி. கணக்கெடுப்பில் உள்ள நகர்ப்புறங்கள் எனச் சொல்லலாமா? -- சுந்தர் \பேச்சு 03:08, 26 ஆகத்து 2012 (UTC)Reply
கணக்கெடுப்பில் உள்ள நகர்ப்புறங்கள் பொருத்தமாக இருக்கும். அவ்வாறே மாற்றலாம். --எஸ்ஸார் (பேச்சு) 13:29, 28 ஆகத்து 2012 (UTC)Reply
Return to "கணக்கெடுப்பில் உள்ள ஊர்" page.