பேச்சு:கரனைக்கிழங்கு
கருனை - சங்ககால வழக்கு \ தமிழ்நாட்டில் பெருவழக்கு \ கரனை - திரிபு வழக்கு. கருனை எனத் தலைப்பை மாற்றம் செய்து இக்கட்டுரையுடன் இணைக்கலாம் --Sengai Podhuvan (பேச்சு) 13:06, 2 சூன் 2017 (UTC)
கருனைக் கிழங்கு என்பது பெருவழக்கு.
ஆனைத்தண்டு என்பது அதன் செடியைக் குறிப்பிடும் வட்டார வழக்கு
கருனை - சங்க கால ஆட்சி. மேற்கோள் இணைக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும்போது கருனை கட்டுரையை ஆனைத்தண்டு கட்டுரையோடு இணைப்பது நன்றன்று.
சங்ககாலச் சொல்லுக்கும், பெருவழக்குக்கும் முதன்மை தருதல் முறை --Sengai Podhuvan (பேச்சு) 22:54, 13 நவம்பர் 2017 (UTC)
- இக்கட்டுரை குறிப்பிடும் கிழங்கின் தாவரவில் பெயர் என்ன? ஒத்த பொருள் சொல் ஒவ்வொன்றுக்கும் தனிக்கட்டுரை அமைக்க இயலாது. தயவுசெய்து பெயரிடல் மரபைக் காணவும். நன்றி. --AntanO (பேச்சு) 00:46, 14 நவம்பர் 2017 (UTC)
பொதுவன் ஐயா! கருனை / கருணை வேறுபாடுகளை இலக்கண அடிப்படையில் உணர்த்துக. ஆவலுடன் ..--த♥உழவன் (உரை) 02:08, 14 நவம்பர் 2017 (UTC)
- கருனை சங்ககால ஆட்சி ஆகையால், கருனைக் கிழங்கு என்னும் தலைப்பில் ஒரே கட்டுரையாக அமைவது முறையானது. --Sengai Podhuvan (பேச்சு) 19:25, 29 நவம்பர் 2017 (UTC)
@-AntanO, கருணைக்கிழங்கின் அறிவியல் பெயர் Amorphophallus paeoniifolius. இது ஆங்கிலத்தில் Elephant foot yam (ஆனைத்தண்டு) என்று அழைக்கப்டுகிறது. எனவே ஆனைத்தண்டு என்ற பக்கத்தை கருனைக் கிழங்கு என்ற தலைப்பிற்கு நகர்த்திவிட்டு கரனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு ஆகிய பக்கங்களை அதற்கு வழிமாற்றி விடலாம் என்பது என் கருத்து. நன்றி. Varunkumar19 (பேச்சு) 14:05, 28 பெப்ரவரி 2019 (UTC)
கரனை
தொகுகரனை என்றுதான் தென்னிலங்கையிலும் சொல்லப்படுகிறது. ஆனைத் தண்டு என்று எதுவும் கிடையாது. கரனை என்பது இத்தாவரத்தின் பெயர். இதன் கிழங்குக்குத் தனியான கட்டுரை இருக்குமளவுக்கு எச்சிறப்பும் அறியப்படவில்லை. இத்தாவரத்தின் கட்டுரைக்கு இங்குள்ளவை இணைக்கப்பட வேண்டும். User:Info-farmer கரனை என்பது கருனை என்பதன் மருவலாம். கரணை என்பது ஒரு நோய்.--பாஹிம் (பேச்சு) 04:52, 31 மே 2019 (UTC)