பேச்சு:கருநாடகம்

கருநாடகம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கருநாடகம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

படங்கள்

தொகு
 
ஹோசலா பேரரசின் சிற்பக்கலை.
 
இராஷ்ரகுடர் பேரரசு

<br="clear"/>

கூடுதல் அல்லது மாற்றுத் தலைப்பு

தொகு

கர்நாடகம் என்பதைத் தமிழில் கருநாடகம் என்றே சொல்லலாமே. கருநாடக இசை என்ற வழக்கு வேறு உள்ளது. பழைய கன்னடத்திலும் (அழேகன்னடம்) தமிழிலும் அதுவே வழக்குச் சொல் என நினைக்கிறேன். மேலும் இம்மாநிலத்தைப் பற்றிய கன்னட விக்கிக் கட்டுரை (kn:ಕರ್ನಾಟಕ) முன்னுரைப் பகுதியில் பின்வருமாறு கூறுகிறது.

அதை வினோத்தின் அச்சரமுகப் பொறியைப் பயன்படுத்தி ஒலிபெயர்த்தால்:

தெளிவாகவே உள்ளது. மேலும், கருநாடக அரசின் அலுவல் தளமான http://www.karunadu.gov.in/Pages/Default.aspx என்பதன் முகவரியைப் பார்க்கவும். குறைந்தது மாற்றுப் பெயராகவாவது கருநாடகம் இருக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 13:14, 22 ஆகத்து 2012 (UTC)Reply

வேறு யாரும் கருத்திடுகிறார்களா என்று பார்த்துவிட்டு இன்னும் ஒருநாளில் மாற்றி விடலாம். -- சுந்தர் \பேச்சு 06:30, 23 ஆகத்து 2012 (UTC)Reply

என்னுடைய கன்னட நண்பன், வானொலியில் கர்நாடகா என்னும் பெயர் கேட்டு, கர்நாட்டக்கா என்று தானே வர வேண்டும் என்கிறான், தவறாக பலுக்குகிறாகளே என்றான். நாடகம் என்று எப்படி வரும்?? நாடு+அகம் = நாட்டகம் என்று தானே வரும்? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:58, 12 அக்டோபர் 2012 (UTC)Reply

ஆம், தமிழ்க்குரிசில் நீங்கள் கூறுவது சரியே. ಟ என்றே எழுதுகிறார்கள். அவ்வெழுத்தின் ஒலிப்பு மிகச் சரியாக ட்ட என்பதே. ஒலிப்பதும் அவ்வாறே. -- சுந்தர் \பேச்சு 06:59, 15 அக்டோபர் 2012 (UTC)Reply

கருநாடக அரசின் தமிழ்வழிப் பாடநூல்களில் கருநாடக அரசு என்று இருப்பதையும் கவனிக்க வேண்டும். �������� �������-- சுந்தர் \பேச்சு 16:53, 9 சனவரி 2014 (UTC)Reply

தமிழ் முறை

தொகு

கர்நாடகா என்றும் கேரளா என்றும் எழுதுவது தமிழ் முறையன்று. அவை முறையே கருநாடகம், கேரளம் என்றே வர வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 12:56, 6 மே 2016 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருநாடகம்&oldid=3747878" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கருநாடகம்" page.