பேச்சு:கருந்துளை

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை
கருந்துளை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.


கருந்துளை என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருந்துளை என்பது உள்ளபடியான மொழிபெயர்ப்பாக உருக்கும். எனினும், அதன் தன்மையை விளக்குவது கருங்குழி என்பதால் சரியாக உள்ளதென்றும் தோன்றுகிறது.

என்பதன் மொழிபெயர்ப்பு "நிறை" என்று படித்ததாக நினைவு. ஆனால் இங்கு திணிவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எது சரி? -- Sundar 08:23, 28 ஏப் 2005 (UTC)

இலங்கைப் பாடசாலைகளில் பயன்பாட்டிலுள்ள கலைச்சொல் அகராதிப்படி "நிறை" என்பது "weight", "திணிவு" என்பது "mass". தமிழ்நாட்டுப் பயன்பாடு பற்றித் தெரியவில்லை. "weight" and "mass" இரண்டும் வெவ்வேறு பொருள் கொண்டவை. Mayooranathan 08:37, 28 ஏப் 2005 (UTC)

விளக்கத்திற்கு நன்றி. என்னிடம் இருந்த அறிவியல் தமிழ் புத்தகத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அப்படியாயின் சந்திரசேகர் வரையரையில் நான் குறிப்பிட்டதை மாற்ற வேண்டும். But a number of websites tell the other way. We need to decide on one of these. -- Sundar 09:00, 28 ஏப் 2005 (UTC)

தமிழ்ப் பல்கலைக் கழக அகராதி, mass என்பதற்கு நிறை என்றும், weight என்பதற்கு எடை என்றும் பொருள் தருகிறது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், mass என்பதற்குப் "பொருண்மை" என்று பொருள் தரும் அதேவேளை, weight என்பதைப் பட்டியலில் காணமுடியவில்லை. Mayooranathan 10:06, 28 ஏப் 2005 (UTC)

"பொருண்மை" என்பது அருமையான சொல். எனினும் "நிறை" எளிதாக உள்ளது. எடை என்பது தமிழ் நாட்டில் வெகுவாக பயன் படுத்தப்படுகிறது. இலங்கைத் தமிழருக்கும் புரியுமானால் அதையே வைத்துக் கொள்வோம். -- Sundar 10:15, 28 ஏப் 2005 (UTC)

சுந்தர், நிறை என்பதிலும், பொருண்மை, திணிவு என்பன சரியான பொருளைத் தருகின்றன. mass indicate the substance in a matter. எனவே "பொருண்மை" என்பது அடங்கியிருக்கும் பொருள் என்னும் பொருள் தருவதுடன், பொருள் புரியும்படியும் உள்ளது. "திணிவு" என்பதும் அவ்வாறே. "திண்" என்பது பொருள் அடங்கியிருப்பதைக் குறிக்கிறது. திண்ணை, திண்டு, திண்ணம் போன்ற சொற்கள் மேற்படி வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவைதான். ஆகவே, "பொருண்மை" அல்லது "திணிவு" பொருத்தமாக இருக்கும். நிறை என்பது பழக்கமான சொல்தான் எனினும், அறிவியல் நோக்கில் பொருள் விளக்கம் அற்றது, இலங்கைத் தமிழருக்கும் பரிச்சயமானதெனினும், அது mass என்ற பொருளிலன்றி weight என்ற பொருளிலேயே அங்கே புரிந்து கொள்ளப்படும். Mayooranathan 10:54, 28 ஏப் 2005 (UTC)

நான் மேற்குறிப்பிட்ட சந்திரசேகர் வரையரை எனும் கட்டுரையில் சென்று "திணிவு" என்று மாற்றிவிடுகிறேன். இனி நீங்களும் weight என்பதற்கு "எடை" என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள். -- Sundar 11:41, 28 ஏப் 2005 (UTC)

இக்கட்டுரையின் கடைசிப் பகுதியின் தலைப்பும் அதில் இருந்த நான்கு விளக்கப் படிமங்களும் தொகுத்த பின் மறைந்து விடுகின்றன. அவற்றை மீள வரவைத்து உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:12, 8 மே 2017 (UTC)Reply

பிழையை நானே சரிசெய்துவிட்டேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:18, 8 மே 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருந்துளை&oldid=2278871" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கருந்துளை" page.