பேச்சு:கருவிளை (பேரினம்)

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இக்கட்டுரை சங்குப்பூவைப் பூக்கும் தாவரத்தைப் பற்றித்தானே குறிப்பிடுகிறது. சங்குப்பூ என்ற தலைப்பு எப்படிப் பொருந்தும்? --Booradleyp (பேச்சு) 16:25, 9 பெப்ரவரி 2013 (UTC)

எனக்கும் சில குழப்பங்கள் உள்ளது.
  • சங்குப்பூ என்ற தலைபில் அதன் தாவரம் எழுதப்பட்டுள்ளது. இதன் தாவரத்தை எவ்வாறு குறிப்பிடலாம். சங்குப்பூ செடி அல்லது கொடி?
  • கருவிளை சங்குப்பூவின் ஒரு வகைதான். அதாவது நீல நிறம்.
  • செருவிளை என்பது வெண்ணிற சங்குப்பூவைக்குறிக்கும்.
கருவிளை மற்றும் செருவிளை சங்குப்பூவில் சேர்ப்பதே நன்று. ஏன் என்றால் இந்த இரண்டு வகையையும் சேர்ந்துதான் சங்குப்பூ. சங்குப்பூ is broad based.இந்த குழப்பத்தின் விளைவினால் சங்குப்பூ என்ற பெயரில் கட்டுரை தொங்கினேன். என் ஐயத்திற்கு உதவவும்.பாலாஜி (பேச்சு) 16:24, 10 பெப்ரவரி 2013 (UTC)
  • பொருத்தமான தலைப்பு பற்றி எனக்கும் சரியாகக் கூறமுடியவில்லை. ஆனால் இக்கட்டுரை கருவிளை கட்டுரையோடு இணைக்கப்பட வேண்டாம் என நினைக்கிறேன். அக்கட்டுரை ’கருவிளை’ என குறிஞ்சிப்பாட்டுக் குறிப்பிடும் பூவைப் பற்றி மட்டுமே குறிக்கிறது. மேலும் அந்தக் ’கருவிளை’ தான் ’சங்குப்பூ’ என்பதற்கான ஆதாரமும் அந்தக் கட்டுரையில் இல்லை. தாவரவியல் தெரிந்த பயனர்கள் கருத்துத் தெரிவிக்கும்வரை காத்திருக்கலாம்.--Booradleyp (பேச்சு) 16:38, 10 பெப்ரவரி 2013 (UTC)
இல்லையென்றால் சங்கு (மலர்) என்று பெயர் மாற்றம் செய்யலாம்.நான் ஏன் சங்கிற்கு முக்கியதுவம் தருகிறேன் என்றால் அதுதான் தற்பொழுது அனைவராலும் பொதுவாக பயண்படுத்தப்பபடும் பெயர்.பாலாஜி (பேச்சு) 16:55, 10 பெப்ரவரி 2013 (UTC)
இது பற்றி பள்ளிக்காலங்களிலும், கல்லூரியிலும் படித்துள்ளேன். இப்பொழுதும் பள்ளிப் பாடத்திட்டத்தில் இருக்கிறது! இது கொடி வகை. இப்பொழுதும் தமிழகத்தின் பல இடங்களில் பரவியிருக்கிறது. இதன் வடிவமைப்பு என்னை மனதைக் கொள்ளை கொள்வதால், கொல்லையில் அவ்வப்போது இரசிப்பதுண்டு. இது கருவிளையாக இருக்கலாம். எனவே, ஒருங்கிணைக்கத் தேவையில்லை. சங்குப்பூ (கொடி) என பெயர் மாற்றுவதில் எனக்கு உடன்பாடு. யாரும் மாற்றுக்கருத்துக் கூறவில்லையெனில், மாற்றிடுக.--≈ உழவன் ( கூறுக ) 13:28, 20 சூலை 2013 (UTC)Reply

இதனை சங்கு (தாவரம்) என் பெயர் மாற்றம் செய்து en:Clitoria என்பதுடன் இணைக்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 07:25, 19 சனவரி 2014 (UTC)Reply

ஒரு தமிழக வழிபாட்டுத் தளத்தில் பிரபலமான [http://www.aaseyathirai.com/wp-content/uploads/2013/12/DD25-3.jpg சங்கு மரம்} உள்ளது. சிறுவயதில் சென்றிருக்கிறேன். இப்பொழுது அதன் தோற்றப்பெயர் என்னவென்றுத் தெரியவில்லை. சங்கு பற்பம் (கடற்சங்கின் பொடி) என்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. சங்குப்பூ (மூலிகை) என மாற்றலாமா? --≈ உழவன் ( கூறுக ) 04:47, 21 சூன் 2014 (UTC)Reply
  • பூவின் பெயரே சங்குப்பூ. எனவே தலைப்பை மாற்றவேண்டியதில்லை. மாற்றவும் கூடாது. காரணம் இதன் கொடியைச் சங்குப்பூப் கொடி என்றே வழங்குவர். சங்கஞ்செடி என்று மற்றொரு செடி உண்டு. அதன் இலையில் முள் இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கட்டுரையில் இடப்பட்டுள்ள தலைப்பு மாற்றக் குறியாட்டை நீக்குதல் நன்று. --Sengai Podhuvan (பேச்சு) 12:13, 17 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருவிளை_(பேரினம்)&oldid=1986937" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கருவிளை (பேரினம்)" page.