பேச்சு:கல்லீரல்

கல்லீரல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
கல்லீரல் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இலங்கையில் Liver ஐ ஈரல் என்றுதான் சொல்லி வந்தோம். கல்லீரல் என்று வேறொரு உறுப்பைச் சொல்வோம். அது எந்த உறுப்பை என்பதை சரியாக நினைவுக்கு வரவில்லை. பின்னர் சொல்கின்றேன். --கலை 15:56, 26 நவம்பர் 2010 (UTC)Reply

தமிழகத்திலும் ஈரல், ஈரக்குலை என்பது தான் பொது வழக்கு. மண்ணீரலை வேறுபடுத்தும் பொருட்டு கடினமாக இருப்பதால் கல்லீரல் எனப் பெயர் பெற்றது. உள்ளுறுப்புகளி்ல் மிகப் பெரியதும் மிகக் கனமானதுமாய் இருப்பதால் கல்லீரல் எனப் பெயர் பெற்றது. The largest internal organ is the liver. It is also the heaviest organ, with an average of 1.6 kilograms (3.5 pounds). --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 16:48, 26 நவம்பர் 2010 (UTC)Reply

கல்லீரல் என்று இலங்கையில் spleenஐத் தான் குறிப்பிடுவோம். இங்கே மண்ணீரல் என்று உள்ளதே இலங்கையில் கல்லீரல். இவ்வளவு பிரச்சினைகளைத் தவிர்க்க இதனை சுருக்கமாக ஈரல் என்று மாற்றலாமே. இது தமிழகத்திலும் இலங்கையிலும் ஒரே வழக்கு தானே.--G.Kiruthikan (பேச்சு) 15:40, 11 சனவரி 2014 (UTC)Reply

கல்லீரல் spleen ஐக் குறிக்கப் பயன்படுமானால் அது தேவையற்ற குழப்பத்தையே விளைவிக்கும். இக்கட்டுரையில் அடைப்புக்குறிக்குள் இலங்கை வழக்கு தரப்பட்டுள்ளதால் குழப்பமில்லை. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 05:17, 12 சனவரி 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்லீரல்&oldid=2295125" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கல்லீரல்" page.