பேச்சு:காளமேகம்

காளமேகம் ஏற்கனவே உள்ள கட்டுரை. இரு வேறு நபர்களா?


இவர் வைணவ சமயத்தில் பிறந்தவர் என நிலாச்சாரல் கட்டுரை சொல்கிறது. கட்டுரையின் பெயர் காரணத்தில் திருவரங்க கோயில் சமையல்காரர் என்றதாலும் இவர் சமணர் அல்ல வைணவர் என்று எண்ணத்தோன்றுகிறது. எது சரி?--−முன்நிற்கும் கருத்து Kurumban (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

காளமேகம் பற்றிய குறிப்பில் நான் சேர்த்திருக்கும் கீழ்க்கண்ட பகுதியைக் காணவும்:

இது காளமேகத்தின் பாடலில்லை. சொக்கநாதப் புலவர் பாட்டு. இதைத் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். பாட்டிலும் மூன்றாமடி மூன்றாம் சீர் 'வேண்டேன்' என்பதற்கு பதிலாகத் 'தேடேன்' என்றிருக்க வேண்டும். முதற்சீரான 'சீ'க்கு மோனையாக மூன்றாம் சீர் 'தேடேன்' என்று தொடங்கினால்தான் பொருந்தும்.

--ஹரி கிருஷ்ணன் hari.harikrishnan@gmail.com (என் கடவுச் சொல் மறந்துவிட்டது. மாற்றியமைப்பதற்கான மின்னஞ்சல் கிடைக்கவில்லை. ஆகவே இப்படிச் செய்கிறேன்.)

என்னால் என் கணக்கையும் பயன்படுத்த முடியவில்லை; புதிய கணக்கையும் என் நடப்பு மின்னஞ்சல் முகவரியை வைத்துக்கொண்டு உருவாக்க முடியவில்லை.

@Sengai Podhuvan and Kalaiarasy:.--Kanags \உரையாடுக 01:49, 16 திசம்பர் 2015 (UTC)Reply
  • அன்புப் பெருந்தகைக்கு, வணக்கம். பாடலை நான் சேர்க்கவில்லை. சேர்த்தவர் எதனைப் பார்த்துச் சேர்த்தார் என்பது விளங்கவில்லை. எனவே பொருள் கேடு நேராவகையில் திருத்தம் செய்துள்ளேன். ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 02:36, 16 திசம்பர் 2015 (UTC)Reply
நன்றி ஐயா, வெங்காயம் சுக்கானால் என்ற பாடலை சொக்கநாதப் புலவரின் பாடலாக நீங்கள் விக்கிமூலத்தில் சேர்த்திருக்கிறீர்கள். அதுவே சரியானதாக இருக்கலாம். இணையத்தில் தேடிய போது பலரும் இப்பாடலை காளமேகத்தாரின் பாடல் என்றே எழுதுகிறார்கள். சிலேடைப் பாடல் என்றதும் அனைவரும் காளமேகத்தையே குறிப்பது வழக்கம், அவ்வாறே இதுவும் அவரது பாடலாக சேர்க்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. எனவே இப்பாடலைக் கட்டுரையில் இருந்து எடுத்து விடலாம். இதனை சொக்கநாதப் புலவர் கட்டுரையில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 07:43, 16 திசம்பர் 2015 (UTC)Reply
எனது இணைய இணைப்பில் கொஞ்சம் சிக்கல் உள்ளது. எங்கிருந்து தகவலைப் பெற்றேன் என்பது நினைவில் இல்லை. தயவுசெய்து வேண்டிய திருத்தங்களைச் செய்து விடுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 21:42, 16 திசம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காளமேகம்&oldid=1984148" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காளமேகம்" page.