பேச்சு:கிரெகோரியன் தொலைநோக்கி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan
கிரெகோரியன் என்று ஏன் எழுதவேண்டும்? க்ரெகோரியன் என்று எழுதுவதுதானே சரியாக இருக்கிறது.. தமிழ்ச்சொல்லாத சொற்களுக்கு ஏன் தமிழிலக்கணத்தைப்பயன்படுத்தவேண்டும்? −முன்நிற்கும் கருத்து MJohnRupert (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- மெய்யெழுத்து தமிழில் முதலெழுத்தாக வராது. பிற மொழிப் பெயர்களை தம் மொழி எழுத்திற்கேற்ப எழுதுவது காலங்காலமாக எல்லா மொழிகளிலும் உள்ள நடைமுறை. [க்ரிக்கெட் என்பதை கிரிக்கெட் என்றும். க்ரோம்பேட்டையை குரோம்பேட்டை என்றும், ஜ்யோதியை ஜோதி என்றும், ஜ்வாலையை ஜுவாலை என்றும், வ்யவசாயத்தை விவசாயம் என்றும், ப்ரியாவை பிரியா என்றும், ம்ருகம் என்பதை மிருகம் என்றும் எழுவதைப் போல.] இயல்பாகவே, பிற மொழிப் பெயர்கள் தம் மொழி இயல்புக்கு ஏற்ப எழுதுவது உலக வழக்கம். இது சரியானதே. நீங்கள் மொழியியலைப் படித்து தெரிந்துகொண்டால் இன்னும் எளிதில் புரிந்துகொள்வீர்கள். :) கவனிக்க: பயனர்:செல்வா, பயனர்:Kanags, பயனர்:Mayooranathan, -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:44, 30 ஆகத்து 2014 (UTC)
- சரியாகச் சொன்னீர்கள் தமிழ்க்குரிசில்.--Kanags \உரையாடுக 22:45, 30 ஆகத்து 2014 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 05:08, 31 ஆகத்து 2014 (UTC)
- விருப்பம்-- தமிழ்க்குரிசிலின் கருத்துச் சரியானதே. தமிழ்ச் சொற்களில் இப்பிரச்சினை எழுவதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ் அல்லாத சொற்களைத் தான் தமிழ் மரபுக்கு ஒப்ப மாற்றி எழுதவேண்டியுள்ளது. பிற மொழிச் சொற்களைத் தமிழுக்குள் கொண்டுவரும்போது கூடியவரை தமிழ் மரபுக்கு ஏற்ப எழுதவேண்டியது அவசியம். --- மயூரநாதன் (பேச்சு) 19:00, 31 ஆகத்து 2014 (UTC)
- விருப்பம் எந்தமொழிச்சொல்லானாலும் தமிழில் எழுதுங்கால், தமிழிலக்கண விதிகளுக்கு உட்பட்டே எழுதுதல் வேண்டும். மற்றமொழிகள் போலில்லாமல் தமிழில் இதற்கும் (அதாவது வேற்றுமொழிச்சொற்களைத் தமிழில் எழுதுவதற்கும்), மொழிமுதல் எழுத்துகள்< ஈற்றெழுத்துகள், இடையே வரும் எழுத்துகள் ஆகியவற்றுக்கு அறிவார்ந்த விதிகள் வகுத்துள்ளார்கள். "க்ரி', 'ப்ரி' போன்றெல்லாம் மெய்யெழுத்தை அடுத்து சிறிது உயிரொலி இல்லாமல் ஒலிக்கவும் முடியாது. அந்த உயிரொலி சிறிதாக இருக்கலாம், ஆனால் உயிரொலி இல்லாமல் ஒலிக்கவிலாது. ஆங்கிலத்தில் develop, envelope என்று எழுதினால் எங்கு e சேர்க்க வேண்டும், எங்கு சேர்க்கக்கூடாது என்று ஏற்கின்றோம், open, happen என்று வருமிடங்களில் ஒலிப்பு ஒரே வகையான -p- ஒலிப்பே என்றாலும் ஓரிடத்தில் இரட்டை p என்றும், இன்னோரிடத்தில் ஒற்றை p என்றும் எழுதும் ஒழுக்கத்தை வழக்கத்தை ஏற்கின்றோம். தமிழில் உள்ள அறிவார்ந்த விதிமுறையை ஏன் மீற வேண்டும்? மெய்யெழுத்தில் தொடங்கி எழுதலாகாது. இது தமிழ் விதி. அதுவும் அறிவார்ந்த விதி!!--செல்வா (பேச்சு) 08:40, 13 செப்டம்பர் 2014 (UTC)
- சரியாகச் சொன்னீர்கள் தமிழ்க்குரிசில்.--Kanags \உரையாடுக 22:45, 30 ஆகத்து 2014 (UTC)