பேச்சு:கே. அண்ணாமலை
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Almighty34 in topic கேள்விகள்
கே. அண்ணாமலை என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
கே. அண்ணாமலை என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
திரு அண்ணாமலை 1984 இல் கரூரில் பிறந்தவராகக் குறிப்புகள் உள்ளன. இவர் 17 அகவையிலேயே (2001 இல்) சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? சான்று பகரும் பக்கம் இணைப்பில் கிடைக்கவில்லை! இச்செய்தி சரியானதுதானா?--செல்வா (பேச்சு) 20:04, 14 சூலை 2021 (UTC) "The person should be a citizen of India. Not less than 25 years of age to be a member of the Legislative Assembly and not less than 30 years (as per Article 173 of Indian Constitution) to be a member of the Legislative Council." என்று கூறப்பட்டுள்ளது. பார்க்கவும் அகவை 25. எனவே திரு அண்ணாமலை 2001 இல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தவறான தகவல். --செல்வா (பேச்சு) 20:08, 14 சூலை 2021 (UTC)Reply
- @செல்வா: இருவரும் வேறு வேறு நபர்கள். தென்காசி சட்டமன்ற உறுப்பினராக கே. அண்ணாமலை என்பவர் 2001 இல் தெரிவு செய்யப்பட்டார். பார்க்க: [1].--Kanags \உரையாடுக 21:59, 14 சூலை 2021 (UTC)Reply
- ஓ, அப்படியா? இப்பொழுதுள்ள பதிவு பாரதீய சனதா கட்சியின் புதிய தலைவரைப் பற்றியது. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. --செல்வா (பேச்சு) 23:54, 14 சூலை 2021 (UTC)Reply
- @Kanags and செல்வா: ஐயா, பாரதீய சனதா கட்சியின் புதிய தலைவரைப் பற்றி இன்னொரு கட்டுரை உள்ளது அண்ணாமலை குப்புசாமி--தாமோதரன் (பேச்சு) 00:56, 15 சூலை 2021 (UTC)Reply
- அப்பொழுது இந்தக் கட்டுரையை நீக்கிவிடாலாம் என்று கருதுகின்றேன். --செல்வா (பேச்சு) 02:16, 15 சூலை 2021 (UTC)Reply
- @செல்வா: இல்லை ஐயா, தென்காசி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே. அண்ணாமலை கட்டுரையை மீளமைக்கலாம்--தாமோதரன் (பேச்சு) 02:23, 15 சூலை 2021 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே._அண்ணாமலை&oldid=4028260" இலிருந்து மீள்விக்கப்பட்டது