பேச்சு:கொக்கான்
chandravathana (akka), sorry could not completely figure out what the game is about and the jargon u have used. Could u be kind enough to explain more and if possible provide the pictures of the items mentioned in the article? it would help us understand this tamil game. saw ur blogpost regarding this too. it was good.--ரவி 09:00, 8 ஏப்ரல் 2006 (UTC)
- கொக்கான் என்று அழைக்கப்படும் விளையாட்டு யாழ்ப்பாணத்தில் சிறுமியர் மத்தியில் பிரபலமானது. தமிழ்நாட்டிலும் தெரியாமலிருக்க முடியாது, வேறு பெயர் இருக்கக்கூடும். கண்டுபிடிக்க முயல்கிறேன். Mayooranathan 18:27, 10 ஏப்ரல் 2006 (UTC)
- தொட்டாங்கல் அல்லது தட்டாங்கல் (சொட்டாங்கல் மற்றும் சுட்டாங்கல் போன்ற மருவுச் சொற்களோடு) என்று தமிழ் நாட்டில் அழைக்கப்படும் விளையாட்டும் இது போன்றது என்றே நினைக்கிறேன். மேலும், மார்பிள் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு சொல் பளிங்கு ஆகும். ஆனால், இச்சொல் தரைகளில் பதிக்கப்படும் கற்களைக் குறிக்கவே அதிகம் பயன்படுகிறது. கூழாங்கல் என்பது உருண்டை மற்றும் நீள் உருண்டை வடிவக் கற்களைக் குறிக்கும். -- Sundar \பேச்சு 08:08, 11 ஏப்ரல் 2006 (UTC)
பரிந்துரைகள்
தொகு- அவுட் = ஆட்டமிழப்பார்
- மார்பிள் = பளிங்கு கல்?
ரவி, கொக்கான் விளையாடும் முறையையும் இணைத்துள்ளேன்.--Chandravathanaa 08:39, 11 ஏப்ரல் 2006 (UTC)
சுந்தர், தரவுகளுக்கு நன்றி. --Chandravathanaa 08:39, 11 ஏப்ரல் 2006 (UTC)
- கொக்கான் சிறுவயதில் நானும் விளையாடியிருக்கிறேன். பொதுவாகக் கொக்கான் விளையாடுதல் என்று சொல்வதில்லை. சந்திரவதனா குறிப்பிட்டிருப்பதுபோல் கொக்கான் வெட்டுதல் என்றே சொல்வது வழக்கம். இப்பொழுது அதை விளையாடும் முறையில் தெளிவில்லாது இருந்தேன். சந்திரவதனாவின் விளக்கங்களுக்குப் பின்னர் ஞாபகம் வருகிறது. அண்மைக் காலங்களில்தான் "மார்பிள்" இவ்விளையாட்டில் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்னர் எல்லாமே கற்கள்தான். எறியும் கல்லை நிலத்தில் விழமுன் பிடிக்கவேண்டும். இவ்விளையாட்டு நீண்ட காலமாக விளையாடப்பட்டுவரும் ஒன்று. மிக அண்மைக் காலத்தில்தான் சீமெந்துத் தரை பரவலாகப் புழக்கத்துக்கு வந்தது. முன்னர் பெரும்பாலும் மண்தரைதான். சாணத்தினால் மெழுகியிருப்பார்கள். இவ்வாறான தரையிலே மார்பிள் விழுந்து மேலெழும்பாது. மார்பிள்கூட அண்மைக்காலத்தில் அறிமுகமான ஒரு பொருள்தான். மார்பிள் என்ற சொற்பயன்பாடும் பிற்காலத்ததுதான். முன்னர் போளை என்பார்கள். இது ball என்ற ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்திருக்கக்கூடும். Mayooranathan 16:07, 11 ஏப்ரல் 2006 (UTC)
சொட்டாங்கல்
தொகுஆஹா..இப்பொழுது புரிவது போல் இருக்கிறது..மார்பிளை மட்டும் விட்டு விட்டு பார்த்தால் இது தமிழ் நாட்டில் பரவலாக விளையாடப் படும் சொட்டாங்கல் (அல்லது சொட்டாங்காய்) விளையாட்டு தான். பெரும்பாலும் நகரத்தில் ஜல்லிக் கற்களை வைத்தும் கிராமங்களில் கூழாங்கற்களை வைத்தும் விளையாடுவார்கள். பெண்களில் அனைத்து வயதினரும், சிறுவர் சிறுமியரும், ஆடு மாடு மேய்ப்போர் நேரம் கடத்தவும் ஆடுவர். சிமெண்ட் தரை கட்டுப்பாடு எல்லாம் கிடையாது. சமனான தரையாக இருந்தால் சரி--ரவி 19:06, 11 ஏப்ரல் 2006 (UTC)
சுந்தர், ரவி, மயூரன்
உங்கள் கருத்துக்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி. கொக்கான் பற்றிய பதிவை உங்கள் தகவல்களையும் இணைத்து செழுமைப் படுத்த முனைகிறேன்.--Chandravathanaa 08:45, 13 ஏப்ரல் 2006 (UTC)
இது தமிழ்நாட்டிலும் ஆடும் விளையாட்டுதான். மார்பிள் என்பதற்கு பதிலாக சிறு கல் அல்லது கோலி என்று இருந்தால் பொருந்தி வரும். இதனை சொட்டாங்கல், கொட்டாங்கல், சொட்டாங்காய் என்றும் பல பெயர்களால் அழைப்பர். வெறும் கல்லாட்டம் என்றும் சொல்லக்க்கேட்டிருக்கிறேன். இதைவிட பரவலான பெயர் கழற்சிக்காயாட்டம். கழற்சிக்காய் என்பது கழற்சிக் கொடியில் விளையும் ஒரு காயின் விதை (Molucca-bean) . இது அம்மானையின் ஒரு திரிபுதான். ஆங்கிலத்திலே சொல்லும் juggling போன்றது. அம்மானை, கழற்சிக்காயாட்டம் என்பன சேர்க்கவேண்டிய சொற்கள். கழற்சி பிங்கலந்தை நிகண்டுவிலும் சொல்லப்பட்டுளது. --C.R.Selvakumar 23:38, 30 மே 2006 (UTC)செல்வா