பேச்சு:சஙீரான்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic பெயர்

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புத் திட்டம் தொகு


இந்த எச்சங்கலின் காலம் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:57, 21 மே 2012 (UTC)Reply

பெயர் தொகு

சங்கீரான் என்று எழுதலாமா?--இரவி (பேச்சு) 15:05, 21 மே 2012 (UTC)Reply

இந்தோனேசிய மொழியில் சஙீரான் எனப் பலுக்குகிறார்கள் போல் தெரிகிறது. அதனையே முதன்மையாக ஆக்கலாம். சங்கீரான் என்பதை வழிமாற்றாக வைத்திருக்கலாம். தமிழில் உள்ள இவ்வாறான எழுத்துக்களை இதற்காகவாவது பயன்படுத்துவோமே:).--Kanags \உரையாடுக 21:18, 21 மே 2012 (UTC)Reply

சங்கீரான் என எழுத முடியாது. வேண்டுமானால் ஒரு வழிமாற்று ஏற்படுத்தலாம். இந்தோனேசிய மொழியிற் சஙீரான் என்றுதான் அழைக்கப்படுகிறது. நாம் ஆங்கிலத்தைப் பார்த்து இதன் பெயரை அமைக்க முடியாதல்லவா. உண்மையிலேயே இந்தோனேசிய மொழிப் பெயர்களைப் பயன்படுத்தும் போது, கனகு சொல்வது போல ஞ, ஞா, ஞி, ஞீ ... ங, ஙா, ஙி, ஙீ ... போன்ற எழுத்துக்களை இவற்றுக்காகவேனும் பயன்படுத்தப்படுவது நலம். வெறுமனே பொருளின்றி எழுத்து மட்டுமிருந்து என்ன பயன்? இன்னொரு கட்டுரை வரவிருக்கிறது, பெஞெஙாத்து ... என்று. தமிழில் இவ்வெழுத்துக்கள் பயனில்லாதவை என்பது இனிப் பொய்யாகும். சஙீரானிற் காணப்படும் மானிடப் புதை படிமங்கள் 1.81 மில்லியன் ஆண்டுகள் பழைமையானவை என்று சாவக மனிதன் பற்றிய ஆங்கிலக் கட்டுரை தெரிவிக்கிறது.--பாஹிம் (பேச்சு) 03:54, 22 மே 2012 (UTC)Reply

சரி, இந்த எழுத்துகளைப் பயன்படுத்துவோம். ஆனால், இது போன்ற சொற்களை ஒலித்துக் காட்டி ஒரு ஒலிக்கோப்பாகவும் பதிவேற்றி முதல் வரியில் இணைத்து விட்டால் ஒலித்துப் பழக உதவியாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 06:47, 22 மே 2012 (UTC)Reply

சஙீரானுக்குச் சென்று வந்தேன். அங்குள்ள எத்தனையோ பொருட்களைப் பார்த்தும் படமெடுத்தும் வந்திருக்கிறேன். அங்கு மானிடப் புதை படிமங்கள் மாத்திரமன்றி முதலை, மாமதம் (mammoth), எருமை, காண்டாமிருகம், மரை, கடல் வாழ் உயிரினங்கள் என ஏராளமான உயிரினங்களின் படிமங்கள் காணப்படுகின்றன. சஙீரானில் மாத்திரமன்றி அதனைச் சூழவுள்ள இடங்களிலும் இன்றும் கூட அகழ்வாய்வு வேலைகள் இடம்பெறுகின்றன.--பாஹிம் (பேச்சு) 12:01, 24 சூன் 2012 (UTC)Reply

ஓ! நன்று! செய்திகள் அறிந்து மகிழ்ந்தேன்! நன்றி. இந்தோனேசிய, வியட்நாம், சீன, இலாவோசு மொழிகளில் பயன்படும் மூக்கொலிகளுக்கு ஞ, ஞா, ஞி, ஞீ ... ங, ஙா, ஙி, ஙீ போன்ற தமிழ் எழுத்துகளும் ஒலிகளும் பயன்படும். ஞ என்பது ஞாயிறு, ஞாபகம், ஞாலம், ஞானம் (வடமொழி) போன்ற சில சொற்களுக்கே இப்பொழுது பயன்படுகின்றது. ஆனால் ஞமலி (நாய்), ஞாய் (தாய்), ஞாலல் (தொங்குதல்), ஞாட்பு (வலி, வன்மை) என்பது போன்று நூற்றுக்கணக்கான சொற்கள் இருந்தன, பயன்பட்டும் வந்தன. பலவற்றின் சொற்பொருள் கேட்டவுடனே உள்ளத்தில் உணர்த்தும் விதமாகவும் உள்ளன. எனினும் அண்மையில் அருகியே வருகின்றது. சேலம் திருச்சி பக்கங்களில் தந்தையை இன்னமும் பலர் ஆஞா என்று தந்தை அழைப்பதையும் குறிப்பதையும் கேட்டிருக்கின்றேன் (நாமக்கல் மாவட்டத்தில் காட்டுப்புதூர், கி.வா. சகன்னாதன் அவர்களுடைய ஊராகிய மோகனூர், பகுதிகளில்). சித்தப்பாவை சின்னாஞா என்பார்கள் (இன்றும் இவ்வழக்கு உண்டு). ஆகவே இந்த மூக்கொலி எழுத்துகளும் ஒலிகளும் பயன்படுத்துவது நல்லதே, நமக்கு முற்றிலும் வேறானதும் அல்ல. இன்று ஒப்பொலிப்பு ஒலிகளாகவும் ஙேன்னு விழிக்கின்றான் என்பது போலவும் பயன்படுத்துகின்றோம். உங்கள் இந்தோனேசிய ஒலிப்பு முறை அட்டவணையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். --செல்வா (பேச்சு) 01:07, 5 சூலை 2012 (UTC)Reply

நன்றி செல்வா. எப்படியும் இந்தோனேசிய ஒலிப்பு முறை அட்டவணையொன்றை ஏற்படுத்துவது நல்லதுதான். நான் முயல்கிறேன். எனினும் இந்தோனேசிய மொழிகளின் சில வகையான ஒலிப்புக்களைத் தமிழிற் குறிப்பது அவ்வளவு எளிதன்று. மேலும், ங எழுத்துப் பயன்பாடு கொழும்பில் வேறு மாதிரி காணப்படுகிறது. அஙன, இஙன என்று அங்கே, இங்கே என்ற சொற்களைக் குறிக்கும் வழக்கம் கொழும்பில், குறிப்பாக கொழும்பு வாழ் முஸ்லிம்களின் வழக்கத்தில் உள்ளது.--பாஹிம் (பேச்சு) 02:41, 5 சூலை 2012 (UTC)Reply

அஙன இஙன என்பன தமிழ்நாட்டிலும் வழக்குதான். எஙன வச்சு இருக்கே? என்று கேட்பதும் வழக்கம்தான். இஙனதானே இருந்திச்சு என்றும் சொல்வர்..--செல்வா (பேச்சு) 03:13, 5 சூலை 2012 (UTC)Reply
சஙீரான் என்பதை எப்படி ஒலிப்பீர்கள் IPA தாருங்கள். அதே போல ஙகர உயிர்மெய் எழுத்து தனித்து வருகின்ற சொல் தமிழில் உண்டா? ஆதாரம் தாருங்கள்? --விண்ணன் (பேச்சு) 22:07, 5 செப்டம்பர் 2015 (UTC)
சஙீரான் என்பதை துல்லியமாக ஒலிப்பது எப்படி என்ற ஒலிபதிவை பதிவேற்றவும். அது மட்டுமின்றி ஙகர உயிர்மெய் தனித்து சொற்களில் வருமா என்பதை இலக்கண ஆசிரியர்களிடம் கேட்டு சரி பார்த்துக் கொள்ளவும். --விண்ணன் (பேச்சு) 22:16, 5 செப்டம்பர் 2015 (UTC)

மொழிமுதல் எழுத்துக்கள் என்ற பக்கத்தில் ஙகரம் மொழிக்கு முதலிலும் இடையிலும் வரும் முறை விளக்கப்பட்டுள்ளது.--பாஹிம் (பேச்சு) 01:00, 6 செப்டம்பர் 2015 (UTC)

'ங' எழுத்து மொழிக்கு முதலில் வராது. எனினும் தனிப்பொருள் தரும் துணைப்பெயராக வருவதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.--விண்ணன் (பேச்சு) 06:57, 7 செப்டம்பர் 2015 (UTC)
சஙீரான் என்பதன் ஆங்கிலம், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் அவ்வளவு ஏன் இந்தோனேசியா, ஜாவா மொழிகளிலும் Sangiran, சங்கிரான் என்றே எழுதியுள்ள போது தமிழில் மட்டுமே ஏன் சஙீரான் என எழுதியுள்ளீர்கள், மூல ஒலிக்கு அது நெருங்கி வரலாம், ஆனால் தமிழர் வாய்க்குள் அது புகுந்து வருமா? --விண்ணன் (பேச்சு) 22:17, 5 செப்டம்பர் 2015 (UTC)

இந்தோனேசிய மொழி ஒலிப்பு தொகு

இந்தோனேசிய மொழியில் Sangiran என்றெழுதினால் சங்கிரான் என்று ஒரு போதும் வாசிக்கப்படுவதில்லை. அது சஙீரான் என்று மட்டுமே வாசிக்கப்படுகிறது. இந்தோனேசிய மொழி, மலேசிய மொழி, சாவக மொழி போன்றவற்றில் ng என்ற எழுத்துக்களால் ஙகரம் குறிக்கப்படுகிறது. Ringgit என்பதில் வருவது போன்று ngg என்று வரின் இரண்டாவதாக உள்ள g எனுமெழுத்து தங்கம் என்ற சொல்லிலுள்ள ககரம் போன்று ஒலிக்கும். Bangun (எழும்பு), jangan (செய்யாதே) போன்ற சொற்களில் வரும் ng எனுமெழுத்துக்கள் ஙகரமாக மட்டுமோ மொழியப்படுகின்றன. இந்தோனேசியாவின் தேசிய வீரர்களுள் ஒருவரான Sisingamangaraja என்பவரின் பெயரைத் தமிழில் ஸிஸிஙாமாஙாராஜா என்றே வாசிக்க முடியும். ஸ்ரீ லங்கா என்பதை இந்தோனேசிய மொழியில் அதே உச்சரிப்புக் கருதி Sri Langka என்றே எழுதப்படுகிறது. தொடக்கத்தில் வேறு எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தாலும் தற்காலத்தில் இலத்தீன் எழுத்தக்களைக் கொண்டு எழுதப்படுகின்றமையால் அதனை ஆங்கிலத்தைப் போன்று மொழிய நினைப்பது தவறு.--பாஹிம் (பேச்சு) 00:50, 6 செப்டம்பர் 2015 (UTC)

ஙீ என்ற எழுத்துடன் வேறு தமிழ் சொற்கள் உண்டா? இதை எப்படி சொல்லின் இடையில் வலிந்து ஒலிப்பது என எனக்குத் தெரியவில்லை. மூக்கண்ண சொற்களை அதிகம் பயன்படுத்த நாம் ஒன்றும் சீனர்கள் இல்லையே. இதை எப்படி ஒலிப்பது என ஒலிபதிவேற்றவும். --விண்ணன் (பேச்சு) 06:59, 7 செப்டம்பர் 2015 (UTC)

கட்டளையிடுகிறீரா நீர்?--பாஹிம் (பேச்சு) 07:47, 7 செப்டம்பர் 2015 (UTC)

விண்ணன், தமிழில் உள்ள இந்த எழுத்துக்களை எப்படி ஒலிப்பது என்பது உங்களுக்குத் தெரியாது எனக் கூறுகிறீர்கள். இதனை நாம் நம்ப வேண்டுமா? கண்டந்தெ என்பதை எவ்வாறு ஒலிப்பது என்று கூறுங்கள். எனக்கு உண்மையில் வருகுதில்லை. கண்டந்தே என்று தான் வருகிறது.--Kanags \உரையாடுக 08:19, 7 செப்டம்பர் 2015 (UTC)
கண்டந்தெ என ஒலிப்பது சிரமம் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். அதனால் தான் அதனை கண்டந்தை என (அருணன் சொன்னது போல இலக்கண வகைமைக்கு ஏற்ப) எழுதி, சொல்லீற்றில் வரும் ஐகாரம், அதன் மாத்திரை அளவிலிருந்து குறைத்து (கண்டந்த என்பது போல) ஒலித்தால் மூல ஒலியினை நெருங்கி நம்மால் ஒலிக்க முடியும். இதைப் பற்றி பலரும் விரிவாக விவாதித்தாகிவிட்டாயிற்று, மீண்டும் மீண்டும் ஒரண்டை இழுத்தால் அதற்கு ஈடுகொடுக்க நான் விரும்பவில்லை. சஙீரான் என்பதை எப்படி ஒலிப்பீர்கள் என எனக்கு விளக்குங்கள். கேட்டுக் கொள்கிறேன் --விண்ணன் (பேச்சு) 18:38, 7 செப்டம்பர் 2015 (UTC)
பண்டிதர் க. நாகலிங்கம் எழுதிய செந்தமிழ் இலக்கண விளக்கம் என்ற நூலிலிருந்து,

உயிர் எழுத்துக்களுடன் மெய்யெழுத்துக்கள் மயங்குவதற்கும் மெய்யெழுத்துக்களுடன் உயிரெழுத்துக்கள் மயங்குவதற்கும் இலக்கணகாரர் வரம்பு கட்டவில்லை. அவை வேண்டியவாறு மயங்குமென்பது அவர்கள் காட்டிய வழியாகும்.

இங்கே கூறப்பட்ட கருத்தும் எடுத்துநோக்கத்தக்கது. பிறமொழிச் சொற்களை எழுதும்போது ஙகர வரிசையிலுள்ள மற்ற உயிர்மெய்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஙப்போல் வளை என்று ஆத்திசூடி உள்ளதே. சிறுவர்களுக்கு அதனை ஒலிக்கச் சொல்லிக் கொடுப்பதில்லையா என்ன? --மதனாகரன் (பேச்சு) 08:52, 7 செப்டம்பர் 2015 (UTC)
ஙகர உயிர்மெய்யெழுத்து வரிசையில் அனைத்து உயிர்மெய்யெழுத்துகளும் தமிழ்ச் சொல்லாட்சிகளில் இடம்பெறவில்லை. இவற்றுள் ங ஒன்றே வழக்கிலிருப்பினும் தமிழ் நெடுங்கணக்கில் உயிர்மெய்யெழுத்துகள் பதினெட்டும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. கறிப்பிங்கால் எழுத்துக் கோவை இடையீடு படலாகது என்பதற்காக நெடுங்கணக்கில் பயன்பாடு நோக்காது பயிற்சி யொழுங்கு நோக்கிச் சேர்த்துக்கொள்ளப்பட்டன என மரபிலக்கண வல்லுநர் அமைதி கூறுவர் என தங்களின் சுட்டி விளக்குகின்றது. ஙகர உயிர்மெய்யெழுத்துகளை பயன்படுத்துவதில் குழப்பமில்லை, அதில் தவறுமில்லை. ஆனால், ஙகரம் சொல்லின் மொழிமுதலில் வராது, என தொல்காப்பியம் கூறுகின்றது. ங என்ற எழுத்தை சுட்டும் போது மட்டும் அவற்றை மொழிமுதலில் ஔவையார் கையாள்கின்றார். அதே போல ங என்பதை குறியீடாகப் பயன்படுத்தும் போதும், ஙகரம் பயன்படுகின்றது. சுட்டெழுத்து வினாவெழுத்துகளையொட்டி வருகின்ற ஙகரம் ( அங் ஙனம், இங் ஙனம், எங் ஙனம் ) மொழிமுதலில் வருகின்றது. இவை யாவும் விதிவிலக்குகள் தானே ஒழிய, ஙகரத்தை மொழி முதலாகக் கொள்ளலாம் என்பதற்கான வழிகாட்டல் இல்லை.
ஙகர உயிர்மெய்யெழுத்துக்களை தமிழின் பிற சொற்களில் எங்குமே பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. அதுவும் சொல்லிடையில் வருகின்ற போது, அவை எங்கும் தனித்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. பெரும்பாலான சொற்களில் ஙகர (ங்க் - அங்கே, இங்கே, பங்கு, தங்கு, நுங்கு, கங்கு ) மெய்யெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் ஙகர மெய்யை அடுத்து ககர உயிர்மெய் வருகின்றது. இதுவே இயல்பான நடைமுறை. சஙீரான் என்பது சரியான மூல ஒலியாகவே இருந்தாலும் கூட, தமிழின் இயல்புக்கு ஒவ்வாத ஒன்றாகவே படுகின்றது. எதோ புதுசா செய்யிறேன் பேர்வழி என்பதுபோல என்னென்னவோ எல்லாவற்றையும் எழுதிவிட்டு அதை நியாயம் செய்ய சான்றுகளோ, ஆதாரங்களோ தராமல் பேசுவது எல்லாம் நகைப்புக்குறியது. சஙீரான் என்ற இச்சொல்லின் ஒலிப்பில் நிறுத்தங்கள் காணப்படவில்லை, இது வாசிப்பவருக்கு குழப்பத்தையும், இடைஞ்சலையும் தருகின்றது. இடை அண்ண ஒலியை அடுத்து வருகின்ற மூக்கொலியை அதுவும், நெடிலாக கூறுவது மிகவும் சிரமமான ஒன்றாகும். இவ்வாறு அண்ண ஒலியை அடுத்து, நிறுத்தமில்லாமல் மூக்கொலிகள் தமிழில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? அதிலும் நெடிலாக பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதே எனது வினா? எடுத்துக் காட்டுகள் இருந்தால் தாருங்கள். தொடர்ந்து பேசுவோம். --விண்ணன் (பேச்சு) 18:38, 7 செப்டம்பர் 2015 (UTC)
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இது வரையில் எந்தச் சொல்லும் உருவாக்கப்படவில்லை என்பதால், இனிமேலும் எந்தச் சொல்லும் உருவாக்கப்படக் கூடாது என்கிறீர்கள். கண்டந்தெ என்பதை நீங்கள் எப்படி உருவாக்கினீர்கள்? இவ்வாறு ஏராளமான மலையாளச் சொற்கள் தமிழ் விக்கியில் உருவாக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் களையப்பட வேண்டும். அங்ஙனம் இதுவும் வழக்கில் உள்ள தமிழ்ச் சொல் தான் என்பது தெரியுமா?--Kanags \உரையாடுக 20:30, 7 செப்டம்பர் 2015 (UTC)
ஹஹா, கொஞ்சம் அமைதியாப் பேசுங்க தோழரே ! இப்போ யார் உருவாக்கப்படக் கூடாது என்றது. எந்த அடிப்படையில் உருவாக்குகிறீர்கள் என்பது தான் கேள்வி? எந்தவொரு சொல்லும் அனைவரும் பயன்படுத்த எளிமையாக இருக்க வேண்டும். கண்டந்தெ என கன்னடத்தில் எழுதினார்கள், அதனால் அதை அப்படியே தமிழாக்கினேன். அப்புறமா நீங்க தான் சொன்னீங்க, தெ என தமிழில் எங்குமே சொல் முடியாது, சொல்றதுக்கும் கஷ்டமா இருக்கு என, எனக்கு இந்த இலக்கண அறிவு எல்லாம் ரொம்பவே கம்மி, அதனால் தான் எனக்குத் தெரிந்தவர்களிடம் உதவிக் கேட்டேன், அவங்களும் வந்து நெறிப்படுத்தினாங்க. அதை ஏற்றும் கொண்டேன். கண்டந்தெ என எழுதிய போது சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு என முதலில் சொன்னதே நீங்க தான். இப்போ அப்படியே பல்டி அடிக்கிறீங்க, ஏன் உருவாக்க கூடாது என்கிறீர்கள்? பாருங்க சஙீரான் என்பதை எப்படி ஒலிப்பது ஒலிபதிவேற்றுங்கள் என கேட்டும், அண்ணாச்சி இன்னும் எந்த பதிலும் தரவில்லை. கண்டந்தெ என்பதையே ஒலிக்க கஷ்டம் என சொன்ன நீங்க இப்போ உங்க குழுவைச் சேர்ந்த ஒருவர் சஙீரான் என எழுதியிருக்கிறது சரி தான், ஒலிக்க கஷ்டம் பற்றி எல்லாம் எதுக்கு கவலை என்பது போல பேசுகிறீர்கள். எனக்கு மலையாளம் மொழி ஓரளவு தெரியும் மலையாளத்து மஞ்சு என்பதை மஞ்ஞு என்பார்கள், அது அவர்களுக்கு சுலபமாக இருக்கலாம், நமக்கு மஞ்சு என்பது தான் சுலபம். மலையாளத்தி மூக்கொலி இரட்டித்து வருவதை தமிழில் எல்லா இடத்திலும் இரட்டித்து ஒலிக்கத் தேவையில்லை, நமக்கு மூக்கொலிகளின் இணையான அண்ணவொலிகளை சேர்த்து எழுதிக்கலாம். மஞ்ஞள் என மலையாளத்தில் எழுதுறதாலே நாமும் அப்படியே எழுத வேண்டும் என்றும் ஒன்று அவசியமில்லை, மஞ்சள் என மாற்றிக் கொள்ளலாம். கண்டந்தெ என்பதை கண்டந்தே என மாற்றலாம் என முன்மொழிந்ததே தாங்கள் தான். ஒரு அந்நிய மொழிச் சொல்லை எடுத்துக் கொண்டு சாதாரண தமிழர்களிடம் கொடுத்து திருப்பிச் சொல்லச் சொன்னாலே, தானாவே அது தமிழ் வழமைக்கு மாறிவிடும். சஙீரான் என்ற சொல்லை ஒரு பத்து பேரிடம் கொடுத்து வாசிக்க சொல்லுங்கள், எத்தனை பேருக்கு அது சுலபமாக இருக்கும்? அப்புறமா சஙீரான் என்பதன் ஒலிபதிவை அவர்களிடம் போட்டுக் கேட்கச் செய்து மறுபடியும் சொல்லச் சொல்லுங்கள், அனைவர் வாயிலிருந்தும் எது வருகிறதோ, அது தான் தமிழாக்கும் முறை. எதோ, வித்தியாசம் காட்டுறேன் பேர்வழி என என்ன வேண்டும் என்றாலும் தமிழ் விக்கியில் செய்வீர்கள், அதை திருப்பிக் கேட்டால் குய்யோ முய்யோ என்பீர்கள், என்னவோ போங்க உங்க தர்க்கமும் வாதமும் நியாயமும் நியதியும். சஙீரான் என்பதை எப்படி ஒலிப்பீர்கள் விளக்கினால் போதும். தனியொரு மூக்கொலியை உயிர்மெய்யிற்கு முன் அண்ணவொலி உயிர்மெய் வருமா? இலக்கணத்திற்கு உட்பட்டதா? வழக்கமாக நன்னூல் வழிகாட்டிகள் வந்து விளக்கமளித்தால் நானும் நாலு விசயம் கற்றுக் கொள்வேன். --விண்ணன் (பேச்சு) 20:59, 7 செப்டம்பர் 2015 (UTC)
அங்ஙனம் இதுவும் வழக்கில் உள்ள தமிழ்ச் சொல் தான் என்பது தெரியுமா? ஹிஹி. தெரியாதுங்க, இப்போ தான் கேள்வி படுறேனாக்கும், பால்வாடி தமிழ் பழகிறேன். நீங்க வேற அங்ஙன இங்ஙன என்பதெல்லாம் இப்போதும் நாங்க பேசிட்டு இருக்கிற சொல் தானுங்க. ஙனம் என்பது தான் சொல், அ என்பது சுட்டு, ஙகர சொல்லின் முன் சுட்டு வரலாம் என்பது வழக்கம். அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்ற சுட்டு, வினா சொல்லைத் தவிர வேறு எடுத்துக் காட்டு இருக்கா? இந்த சொற்களில் கூட அஙனம் என சொல்லவில்லை, இதில் Intonation உள்ளது, அதாவது நிறுத்தம் அங்'ஙனம், தமிழில் மூக்கொலிகளுக்கு நிறுத்தம் கொள்வதே வழக்கம். அந்த நிறுத்தம் தருவதற்கு மூக்கொலிகள் வரும் போது எல்லாம் அதன் இணையான அண்ணவொலிகள் கூடவே வரும், அல்லது இரட்டிக்கும் இதுவே வழக்கம். மூக்கொலிகளான மெல்லின எழுத்துக்களை அடுத்து நிறுத்தம் தர அண்ணவொலிகளான வல்லினம் வருவது தமிழின் இயல்பே. ங்க் ( அங்கு ), ந்த் ( சந்து ), ன்ற் ( நன்றி ) , ஞ்ச் ( பஞ்சு ) போன்றவைகள். இவ்வாறு அண்ணவொலி வராமல், மூக்கொலியே இரட்டிப்பது மலையாள வழக்கம் ன்ன் ( நன்னி ), ஞ்ஞ் ( பஞ்ஞு ). ஆனால் திராவிட மொழிகளில் எல்லாம் மூக்கொலிகள் வருமிடத்து எதோ ஒருவகை நிறுத்தங்களை கொடுப்பதே வழக்கம். சீன மொழி, தென் கிழக்காசிய மொழிகளில் மூக்கொலிகள் நிறுத்தமின்றியே வரும், அது அவர்களின் இயல்பு, நம் இயல்பு அதுவல்ல. சஙீரான் என்பதை ஒலிக்க சிரமமாகவே இருக்கின்றது, சங்ஙீரான் என்றாலோ, சங்கீரான் என்றாலோ ஒலிக்க முடிகிறது. இது தான் எனது கவலை?!--விண்ணன் (பேச்சு) 22:07, 7 செப்டம்பர் 2015 (UTC)
பன்னீ ருயிருங் க ச த ந ப ம வ ய
ஞ ங வீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல்

என்கிறது நன்னூல். மொழி முதலில் வரக்கூடியதாகக் குறிக்கப்படும் இவை மொழியின் இடையில் வருவதில் தவறில்லை. அவற்றை மொழிய முடியாதென அடம் பிடிப்பது வரட்டுப் பிடிவாதமே தவிர வேறில்லை. இடையின உயிர்மெய்யெழுத்துக்கள் மொழியின் இடையில் தனித்து வரலாம். இரட்டித்தோ வல்லினத்துடன் சேர்ந்தோ வர வேண்டுமென்று எந்த விதியும் கிடையாது. ஙஞணநமன என்பனவே இடையினம். அநியாயம், கலைமான் போன்றவற்றில் வரும் இடையின எழுத்தைப் போன்றே சஙீரான் என்பதில் வருவதும் கூடும்.--பாஹிம் (பேச்சு) 02:07, 8 செப்டம்பர் 2015 (UTC)

ஙனம், ஙகரம் ஆகிய சொற்களைத் தவிர தமிழில் வேறு எந்த சொல்லும் ஙகர உயிர்மெய் கொண்டு மொழிமுதலில் வந்ததில்லை. இருந்தாலும், ஙகரம் மொழி முதல் வருமா வராதா என்பதல்ல இங்கு விவாதம், இது இங்கு தேவையற்ற திசைதிருப்பு. மெல்லின மூக்கொலிகள் மொழியிடையே தனித்து நெட்டி வருவதை, அதாவது இவ்வாறான மூக்கொலி அதிக மாத்திரையளவில் தமிழ் மொழியில் நான் எந்த சொல்லிலும் கண்டதில்லை. பல்லின ஒலி ( அநீதி ), அண்பல் ஒலி ( ன, ல ) ஆகியவை மொழியிடையில் வருவது எனக்கும் தெரியும். சஙீரான் என்பதை எப்படி ஒலிப்பீர்கள், ஒலிபதிவேற்றவும்? தங்களவர்களுக்கு அதிகம் கிழக்காசிய, தென்கிழக்காசிய தொடர்பும் பரிச்சயமும் இருப்பதால் ஒலிக்க பழகிக் கொண்டீர்கள் போலும், ஒலிபதிவேற்றித் தாருங்கள் தினமும் சொல்லி பழகிக் கொள்கின்றோமேன். --விண்ணன் (பேச்சு) 02:17, 8 செப்டம்பர் 2015 (UTC)

தமிழில் ஆஞான் என்றொரு சொல் இருக்கிறது. ஙீ என்பது ஏற்கனவே சிங்கப்பூர்த் தமிழர்களால் மொழிமுதலிற் பயன்படுத்தப்பட்டு வருகிறது.--பாஹிம் (பேச்சு) 02:46, 8 செப்டம்பர் 2015 (UTC)

கரவிளாகம் ஙூ கிருஷ்ண சுவாமி கோவில்.--பாஹிம் (பேச்சு) 03:03, 8 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சஙீரான்&oldid=1912552" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சஙீரான்" page.