பேச்சு:சங்க இலக்கியம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic திருக்குறள் காலம் என்ன?
காலம்
தொகுசங்க இலக்கியம் என்பது ’கிருத்துவின்’ காலத்துக்கு முந்தையது எனக் குறிப்பிட வேண்டுமா? அது செயற்கைத் தனமாக யாரோ ஒரு ஐரோப்பியரின் வரியை மொழிமாற்றம் செய்தது போலுள்ளதல்லவா? சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றோ ‘முதல், இடை, கடை தழிழ்ச்சங்க காலங்களில்’ எழுதப்பட்டவை என்றோ குறிப்பிடுவது இயல்பாக இருக்கும் என்று கருதுகிறேன். நன்றி. −முன்நிற்கும் கருத்து Mageshsai (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
Mageshsai. உங்களின் கூற்றுச் சரியே. நீங்கள் பொருத்தம் போல மாற்றி எழுதலாம். --Natkeeran 20:22, 10 ஜூலை 2009 (UTC)
- மகேசு சாயி உங்கள் கருத்து மிகவும் சரியானதே. மாற்றிவிடலாம். --செல்வா 21:27, 10 ஜூலை 2009 (UTC)
சங்க இலக்கியம் எடுத்துக்காட்டுக்கள்
தொகுகணியன் பூங்குன்றனாரின் 192- ஆம் புறநானூற்றுப் பாடல்
தொகுபாட்டும் இராம.கி இங்கு குறிப்பிட்ட விளக்கமும்.
- யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
- தீதும், நன்றும், பிறர் தர வாரா;
- நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
- சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
- இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
- இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
- வானம் தண் துளி தலைஇ ஆனாது,
- கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
- நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
- முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
- காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
- பெரியோரை வியத்தலும் இலமே!
- சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
- யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
- எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;
- தீதும், நன்றும், பிறர் தர வாரா;
- தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;
- நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
- துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.
- சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
- செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.
- இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
- வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.
- இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
- மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;
- வானம் தண் துளி தலைஇ ஆனாது,
- வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,
- கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
- கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,
- நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
- அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது
- முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
- முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
- காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
- அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]
- பெரியோரை வியத்தலும் இலமே!
- பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]
- சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
- சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]
பாடு பொருள்கள்
தொகு- காதல்
- காமம்
- ஊடல்
- கூடல்
- பிரிதல்
- காத்திருத்தல்
காலக் குறியீடுகள்
தொகு- எந்த நூலை அடிப்படையாகக் கொண்டு காலக் குறியீடுகள் தரப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டால் கருதிப்பார்க்கலாம். --Sengai Podhuvan 01:23, 20 சூன் 2011 (UTC)
- காலக் குறிப்புக்கள், பொதுவாக கொள்ளப்படும் காலத்தை விட மிகப் பிந்தியவை ஆக உள்ளன. சங்க காலம், சங்கம் மருவிய காலத்தை கிமு 300 - கிபி 300 பின்னர் கொள்வதில்லை இல்லையா?? --Natkeeran 21:24, 17 நவம்பர் 2011 (UTC)
- காலக் குறிப்புகள் பற்றி யாரும் உசாத்துணைகள் பகிர முடியுமா? --Natkeeran (பேச்சு) 13:25, 9 அக்டோபர் 2013 (UTC)
திருக்குறள் காலம் என்ன?
தொகுபயனர்:Sengai Podhuvan--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:41, 18 ஆகத்து 2014 (UTC)