சீமான் இயற் பெயர் குறித்த சர்ச்சைகள் !

தொகு

பிழை

தொகு

சீமான் அவர்களின் சொந்த விபரம் பிழையாகவும் இருக்கின்றன தரவுகளும் பிழை! சற்று சரி செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்...--சிவம் 10:29, 4 நவம்பர் 2013 (UTC)

வணக்கம் நண்பரே! பிழையை சுட்டிக் காட்டுங்கள். தவறு இருந்தால் தாங்களே திருத்தித் தருமாறு வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:16, 4 நவம்பர் 2013 (UTC)Reply

மன்னிக்கவும், எனது முகவரியை முன்பு இனைப்பில் தொடுக்கவில்லை; சீமான் என்பது அவரின் புனைப்பெயர், அது போன்று அவரின் பிறப்பு திகதியும் மாறுபட்டுள்ளது! இது ஒரு குழப்பமான நிலைதான், அதனால் அவரின் பிறப்பு மற்றும் அவரின் முழுப் பெயரை எதிர்பாக்கின்றேன்.. என்னிடம் தரவு உண்டு ஆனால் அதுவும் பிழையோ என்ற ஐயம் எனக்குண்டு. அதனால் அக்கட்டுரையை என்னால் உறுதியாக திருத்தமுடியவில்லை... ஆனால் தரவுகள் பிழை என்பதனை என்னால் கூறமுடியும்...--சிவம் 10:29, 4 நவம்பர் 2013 (UTC)

இயற்பெயர்

தொகு

செபாஸ்தியன் சீமான் என்பது தான் சீமானின் முந்தைய பெயர். [1] [2] [3] [4]

உசாத்துணை

செந்தமிழன் சீமான் என்பது இயற்பெயரல்ல, புனைப் பெயர் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கூறி வருகின்றனர். செபாஸ்தியன் சீமான் தான் தன் பெயரை செந்தமிழன் சீமான் என தற்போது மாற்றிக்கொண்டிருக்கிறார் என்பதையும் கூறி வருகின்றனர். சீமான் இது குறித்த மறுப்போ அல்லது விளக்கமோ இதுவரை கொடுக்கவில்லை.

2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கனடா வாழ் தமிழர்களிடையே பேச வந்த சீமான் கனடா நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசினார் என்று கூறி அவரை கைது செய்தனர். அப்போது வெளியிட்ட செய்திக் குறிப்பில் இயக்குனர் செபாஸ்தியன் சீமான் இக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். சீமான் அவர்கள் உடனடியாக இந்தியா திரும்புவதாக உறுதியளித்ததின் பெயரில் அவரை விடுவிப்பதாக கனடா நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை அப்போது செய்தியாக வெளியிட்ட பத்திரிக்கைகளில் சீமான் அவர்களை செபாஸ்தியன் சீமான் என்ற பெயரிலேயே கனடா அதிகாரிகள் குறிப்பிட்டதை வெளியிட்டிருந்தனர்.

இவரது இயற்பெயர் செபாஸ்தியன் சீமான். இந்த பெயரை கட்டுரையில் இணைக்கப்போகிறேன், மாற்று கருத்து இருந்தால் கூறவும்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:33, 3 செப்டம்பர் 2019 (UTC)

ஆம். நான் உங்களை ஆதரிக்கிறேன். அதுதான் அவருடைய பிறந்த பெயர், அதை யாரும் நீக்காதவாறு கட்டுரையில் சேர்த்து கட்டுரையைப் பூட்டவும். இன்னும் சில மேற்கோள்கள் இங்கே. அதையும் சேர்த்து கொள்ளவும். References: http://www.thehindu.com/news/international/director-seeman-arrested-and-deported-from-canada/article55523.ece , http://www.theglobeandmail.com/news/national/champion-of-tamil-tigers-booted-out-of-canada/article1347721/ , http://www.newindianexpress.com/states/tamil_nadu/Seeman-Gets-Bail-in-Melur-Tollgate-Staff-Attack-Case/2014/07/20/article2339662.ece , http://www.asiantribune.com/news/2011/06/04/rape-charged-leveled-against-film-director-and-ltte-supporter-sebastian-seeman-actre

Watsonsherwin (பேச்சு) 15:49, 27 அக்டோபர் 2021 (UTC)Reply

en:WP:BLPNAME When deciding whether to include a name, its publication in secondary sources other than news media, such as scholarly journals or the work of recognized experts, should be afforded greater weight than the brief appearance of names in news stories. --AntanO (பேச்சு) 18:30, 27 அக்டோபர் 2021 (UTC)Reply

அவர் பெயர் செபாசிடியன் சீமான் என்று உறுதிப்படுத்த செய்தித் தாளைத் தவிர வேறு ஏதும் சான்று உண்டா தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 16:17, 13 செப்டம்பர் 2022 (UTC)

Return to "சீமான் (அரசியல்வாதி)" page.