பேச்சு:சீர்காழி இரா. அரங்கநாதன்
பெயர்
தொகுஇவர் பெயர் அரங்கநாதன் என்று இருக்கவேண்டும். எனவே மாற்றுகின்றேன்.--செல்வா 19:37, 25 சூன் 2011 (UTC)
- இவர் பெயர் Ranganathan, ரங்கநாதன் தமிழில் அரங்கநாதன் என்றாகுமா?--Kanags \உரையாடுக 22:31, 25 சூன் 2011 (UTC)
ரங்கன் என்பதை அரங்கன் என்று தான் எழுதவேண்டும் (ர வுக்கு முன் அ போடவேண்டும், ல வுக்கு முன் இ போடவேண்டும் - லட்சுமி-இலட்சுமி) ஆனால் பலர் அப்படி எழுதுவதில்லை. எனக்கும் தெளிவான இலக்கண விதி தெரியாது தெரிந்தவர்கள் விளக்கமாக எழுதினால் நலம்.--குறும்பன் 01:13, 26 சூன் 2011 (UTC)
ராமசாமி-> இராமசாமி --குறும்பன் 01:16, 26 சூன் 2011 (UTC)
சிறீதரன் கனகு, ஆமாம். தமிழில் அரங்கநாதன். ஆங்கிலத்தில் Renganathan, Ranganathan என்றும் இன்னும் பலவாறும் எழுதுவர். அரங்கத்துக்கு நாதன் அரங்கநாதன். சிவனுக்கு சபாபதி என்று பெயர் இருபப்துபோல் திருமாலுக்கு அரங்கநாதன் என்னும் பெயரும் உண்டும். முதலாழ்வார்களின் ஒருவராகிய பொய்கை ஆழ்வார் பாசுரத்தில்,
பொன்திகழு மேனி புரிசடை அம்புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன்.
திருமாலும் சிவனும் சேர்ந்திருப்பதாக ஒரு கருத்து உண்டு. அரங்கநாதன் என்பது சரியான பெயர். இரங்கநாதன் என்றால் பொருளற்றதாகிவிடும். தவறான பொருளும் சுட்ட நேரிடும். வடமொழியாகில் தக்கவொரு உயிரொலி முன்னே இட்டுக் கூறுதல் வேண்டும். துணை உயிரொலி என்று இன்று கூறுவர். ஆங்கிலத்திலே மொழியியலிலே prosthetic vowel அல்லது prothetic vowel என்றும் கூறுவர். இது பிற பல மொழிகளிலும் உள்ள முறைமை. கிரேக்க மொழியில் கூட உண்டு. --செல்வா 02:50, 26 சூன் 2011 (UTC)
- தெளிவான விளக்கத்துக்கு நன்றி செல்வா.--Kanags \உரையாடுக 04:02, 26 சூன் 2011 (UTC)
- நன்றி சிறீதரன் கனகு, இன்னொன்றையும் சொல்ல மறந்துவிட்டேன். அரங்கநாதன் என்பதில் உள்ள அரங்கம் என்னும் சொல் தமிழ்ச்சொல்தான். "பொதுவாக" பிறமொழிச்சொற்களில் இருந்து தமிழில் வந்து ர, ல முதலான எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னே தக்கதோர் உயிரொலியை துணையொலியாய் இடுவது தமிழ் இலக்கணம்.--செல்வா 16:15, 29 சூன் 2011 (UTC)
இவருடைய பிறந்தநாள்
தொகுஇவருடைய பிறந்தநாள் கட்டுரையில் 9-8-1892 என்றும், இவருடைய படத்தில் 12-8-1892 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.-- சா. அருணாசலம் (பேச்சு) 04:10, 27 செப்டம்பர் 2022 (UTC)