பேச்சு:சுங்கிங் கட்டடம்
ச்சுங்கிங் மென்சன் கட்டிடம் என்பதை இச்சுங்கிங் மென்சன் கட்டிடம்\கட்டடம் என மாற்றலாமா? கட்டிடம் - கட்டடம் எது சரி --குறும்பன் 02:38, 29 திசம்பர் 2010 (UTC)
- ஆம், குறும்பன். சொல்லின் முதலில் மெய்யெழுத்து வரலாகாது. கட்டடம் என்பதே சரியென முன்பொரு உரையாடலில் பார்த்த நினைவு. -- சுந்தர் \பேச்சு 02:50, 29 திசம்பர் 2010 (UTC)
- இக்கட்டடத்தின் பெயர் Chungking Mansion. எனவே எளிமையாக சுங்கிங் மாளிகை எனலாம்.--Kanags \உரையாடுக 03:10, 29 திசம்பர் 2010 (UTC)
- ஆம், இது பொருத்தமாக உள்ளது. மாற்றிவிடலாம். -- சுந்தர் \பேச்சு 07:40, 29 திசம்பர் 2010 (UTC)
- மாளிகை என்ற பயன்பாடு பொருந்தி வராது. ஏனெனில் இங்கு mansion என்பது ஒரு மிகைச்சொல் போன்றது. புறாக்கூடு போல உள்ள விடுதிகளை mansion என்று பெயரிட்டது அவற்றன் உண்மை நிலையை மறைப்பதற்கு. பின் இதற்கு சிறிய அறைகளை உடைய தங்கு விடுதி என்ற பொருளும் ஏற்பட்டுவிட்டது. நாம் இப்போது மாளிகை என்று மாற்றினால் அர்த்தம் மாறிவிடும். --சோடாபாட்டில் 09:05, 29 திசம்பர் 2010 (UTC)
- ஓ, அது இடக்கர் அடக்கல் சொல்லா? அப்படியெனில் கட்டடம் என்றே சொல்லலாமா? -- சுந்தர் \பேச்சு 09:31, 29 திசம்பர் 2010 (UTC)
- சுங்கிங் கட்டடம் என்பதே பொருத்தமாக இருக்கும்--சோடாபாட்டில் 11:32, 29 திசம்பர் 2010 (UTC)
- நேற்று இணையம் பக்கம் எனக்கு வரக்கிடைக்கவில்லை. அதனால் மேலுள்ள உரையாடல்களை கவனிக்க முடியாமல் போய்விட்டது. சுங்கிங் கட்டடம் என்பது எனக்கும் ஏற்புடையதே--HK Arun 10:10, 30 திசம்பர் 2010 (UTC)
உரையை மேம்படுத்துதல்
தொகுபயனுள்ள பல தகவல்களைக் கொண்ட கட்டுரை. அருணுக்குப் பாராட்டுகள். உரையை ஒருமுறை திருத்தியுள்ளேன். அடிக்கடி ஒரே கட்டுரைக்கு இணைப்பு தருவதை இன்னும் குறைக்க வேண்டும். ஆங்காங் என்ற மாற்றுப் பயன்பாட்டையும் குறிக்கலாம். ஒரு சில இடங்களில் பயனரின் சொந்தத் துய்ய்ப்பின்வழி செய்திகள் தென்படுகின்றன. அவற்றுக்கான சான்றுகளை இணைக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 10:25, 2 சனவரி 2011 (UTC)
- பாராட்டுகளுக்கு நன்றி சுந்தர். //பயனரின் சொந்தத் துய்ய்ப்பின்வழி செய்திகள் தென்படுகின்றன.// நிச்சயமாக.
- மூன்றாம் நபரின் கருத்துக்களுக்கு அமைவாகவோ, ஆங்கில கட்டுரைகளை அப்படியே மொழியாக்கம் செய்தோ அல்லாமல், தேடலின் ஊடாகத்தான் செய்திகள் சேகரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன.
- மேலும் உங்களால் சான்று தேவை என இடப்பட்டிருக்கும் இடங்களில் சில குறிப்புகளாக தருவதை விட ஹொங்கொங் சட்டத் திட்டங்கள், ஹொங்கொங் காவல்துறை போன்ற கட்டுரைகளின் ஊடாக சான்றுகளுடன் முழுமையான தகவல்களை வழங்குவதே பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
- ஹொங்கொங்கில் பல்லாண்டுகளாக குடிவரவு திணைக்களம், நீதிமன்றம், மனிதவுரிமை சட்டங்கள், காவல்துறை, சிறைச்சாலை, சட்டவுதவி போன்றவற்றின் ஊடான எம் ஈழத்தமிழரின் வாழ்க்கை முறை நிறைவே விடயங்களில் பட்டறிவைத் தந்துள்ளன. மிகவும் மோசமான அரசியல் பின்னனியைக் கொண்ட நாட்டில் இருந்து வந்த எம்மை, இந்த நாட்டின் நியாயமான சட்டத்திட்டங்கள், காவல்துறையின் அனுகுமுறைகள், சட்டத்திட்டங்களை மதிக்கும் இந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை என நிறையவே விடயங்கள் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இன்னும் சொல்லப்போனால், இப்படியெல்லாம் உள்ள நாடுகள் இருக்கிறதா என்று கூட நம்ப மறுக்கும் ஆட்சியின் பின்னனியைக் கொண்ட நாடுகளில் நாம் வாழ்ந்துவிட்டோம் என்பது தான் கவலையான விடயம். --HK Arun 14:51, 2 சனவரி 2011 (UTC)
பகுப்பு
தொகு"ஆதாரமற்ற தகவல்களை கொண்டுள்ள கட்டுரைகள்" எனும் பகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. நான் ஹொங்கொங்கில் இருந்துக்கொண்டு வடக்கொரியாவையோ அல்லது ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டைக்குறித்தோ எழுதுவதானால்; ஒன்று ஆங்கில விக்கிப்பிடியாவில் உள்ளதை அப்படியே தமிழாக்கம் செய்து எழுதவேண்டும். அல்லது மூன்றாம் நபர் ஒருவர் எழுதியதை மேற்கோள்காட்டி எழுதவேண்டும். அவ்வாறு யாரோ ஒரு மூன்றாம் நபர் எழுதியதை ஆதாரமாக மேற்கோள் காட்டிவிட்டால் அது சரியான ஆதாரம் ஆகுமா?
அவ்வாறு இணையத்திலோ அல்லது ஏதாவது ஒரு நூல் வடிவிலோ ஒரு மூன்றாம் நபர் எழுதியதை மேற்கோளாக கொடுக்கும் போது அதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளத் தயாரான நிலையில், ஒரு நபர் (நிழல் படங்களையும் இணைத்து) தாம் வாழும் நாட்டில், தனது நேரடித் தேடலூடாகக் கொடுக்கும் தகவல்களை "ஆதாரமற்ற தகவல்களை கொண்டுள்ள கட்டுரைகள்" என்று குறிப்பிடுதல், தன்னார்த்துடன் பங்களிக்க வரும் ஒருவரை புறக்கணிக்கும் செயலாகும்.
எடுத்துக்காட்டாக: தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான மருத்துவர்கள் உள்ளனர்; இலங்கையிலும் அப்படியே. இருப்பின் மருத்துவர்களாக உள்ளோர் எத்தனைப் பேர் எழுத்துத் துறையிலும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர்? ஒரு கட்டுரையை முழுமையாக எழுதும் தகுதரம் உள்ளவர்கள் எத்தனைப் பேர் மருத்துவத்துறையில் எழுத்தாளர்களாக உள்ளனர்? உண்மையில் மருத்துவத் துறையின் உட்கட்டமைப்புகள் குறித்து, மருத்தவர்களின் அளவுக்கு மற்றவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு ஒருவரேனும் விக்கியின் பக்கம் வந்தால் ஈர்த்துக்கொள்ளுதலே பயன்மிக்கதாகும். அவ்வாறு தான் ஏனைய ஒவ்வொரு துறைச் சார்ந்தோருடனான பங்களிப்பும், ஒவ்வொரு நாட்டில் வாழ்வோரின் ஊடான தகவல்களும் அமையும். இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தினமும் விக்கிப்பீடியா பயிற்சி பட்டரைகளை நடாத்தி பயனரின் எண்ணிக்கைக் கூட்டிக்கொள்வதால் மட்டும் காத்திரமான படைப்புகள் வந்துவிடாது. முதலில் துறை சார்ந்து, வாழும் நாடு சார்ந்து எழுதுவோரை சீர்குழைக்காமல் இருப்போரையேனும் தக்கவைத்து கொள்ளுதலே நலம் பயக்கும். --HK Arun 18:18, 2 சனவரி 2011 (UTC)
- அருண், அப்பகுப்பு citation needed/fact வார்ப்புருவை இணைத்தால் தானாக இணையும் பகுப்பு. உங்கள் கட்டுரையை இழிவு செய்யும் பொருட்டு இணைக்கப்பட்டதல்ல (நானே நான் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் சான்று உடனே தரவியலாத தருணங்களில் இதனை இணைத்துள்ளேன்). இப்பகுப்பு இடடதனைத் தனிமனிதத் தாக்குதலாக நீங்கள் கொண்டது வருத்தமளிக்கிறது.
- விக்கி என்பது ஒரு மூன்றாம் நிலை தகவல் ஆவணம் (tertiary source of information). சொந்த ஆய்வினைப் பதிவு செய்யும் முதல் நிலை ஆவணம் (primary source of information) அல்ல. தமிழ் விக்கி மட்டுமல்ல, அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களும் இந்த கொள்கையைக் கொண்டு தான் இயங்குகின்றன. இது உங்களைத் தனிப்பட்ட ரீதியாக தாக்கவோ/புறக்கணிக்கவோ இடப்பட்டதல்ல. உங்களை சீர்குலைக்கவும் ஆர்வத்தைத் தடுக்கபதுமல்ல “சான்று தேவை” என்று இடுவதன் என்பதன் நோக்கம். சொந்த ஆய்வினை ஊக்குவித்தால், நாளை யார் வல்லுனர்/யார் வல்லுனரல்லர் என்ற கேள்வி எழும். இதனால், தகுந்த புற ஆவணங்கள் (en:WP:RS - இந்த சுட்டி இதனை விளக்குகிறது). நீங்கள் சொன்ன “துறை சார் வல்லுனர்” முறையினைப் பின்படுத்திய citizendum கலைக்களஞ்சியம் வெற்றி பெற வில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறேன். மேலும் உங்களைப் போல விஷயமறிந்தவர்களுக்கு, ஒரு புற ஆதாரத்தை கண்டுபிடித்து இணைப்பது ஒரு விஷயமல்லவே.
- >>இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தினமும் விக்கிப்பீடியா பயிற்சி பட்டரைகளை நடாத்தி பயனரின் எண்ணிக்கைக் கூட்டிக்கொள்வதால் மட்டும் காத்திரமான படைப்புகள் வந்துவிடாது.
- முரண்படுகிறேன். இன்று 10 வருடங்களாக 200 கும் மேற்பட்ட மொழிகளின் விக்கிப்பீடியா அடைந்திருக்கும் வெற்றியே உங்கள் கருத்தினை மறுதலிக்கிறது.
- மீண்டும் சொல்கிறேன். இது உங்கள் மீதான தனி மனிதத் தாக்குதல் அல்ல. விக்கியின் விதிமுறை அவ்வளவே. இக்கட்டுரையினை உரை திருத்தி, முதற்பக்கத்தில் காட்சிபடுத்தியிருக்கும் பயனர்கள் உங்களை ஏன் “சீர்குலைக்க” விரும்புவார்கள் என்று எண்ணிப்பாருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 19:02, 2 சனவரி 2011 (UTC)
- மேலும் விக்கியின் நோக்குகளில் ஒன்று கட்டுரையாளரின் பக்க சார்பு வெளிப்படாமல் தகவல்களைக் கொண்டு மட்டும் கட்டுரை எழுத வேண்டுமென்பதே. பின்வரும் வரிகளை கவனியுங்கள்.
“ | இலங்கை, இந்தியா போன்று அல்லாமல் சட்டம் நீதி ஒழுங்காகப் பேணப்படும் நாடுகளில் ஹொங்கொங்கும் முதன்மையான நாடுகளில் ஒன்றாகும்.[சான்று தேவை] எனவே யாருக்கேனும் ஒரு ஆபத்து அல்லது உதவி தேவையெனில் 999 இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தால் சில நிமிடங்களில் ஹொங்கொங் காவல் துறையினர் வந்துவிடுவர். இலஞ்சம், ஊழல் போன்றன இந்நாட்டில் இல்லாத ஒன்றாகும் | ” |
- இவற்றுள் ஒரு தகவலும் மூன்று judgemental தொடர்களும் உள்ளன. தகவல் மறுதலிக்க முடியாதது. ஆனால் கட்டுரையாளரின் கருத்து மறுதலிக்கக் கூடியது. இது போன்ற சர்ச்சைக்குரிய தொடர்களுக்கு மட்டுமே ”சான்று தெவை” வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தையே நீங்கள் transparency index இல் இந்தியா இலங்கைக்கு மேலாக ஹாங்காங், Corruption Perceptions Index பட்டியலில் 12 வது இடத்தில் உள்ளது. ஊழல் குறைவான நாடு என்று எழுதினால், நீங்கள் சொல்ல வரும் கருத்து, editorialising என்பதிலிருந்து தகவல் என்று மாறுகிறது. மற்ற ஊடகங்களுக்கும் (வலைப்பதிவு, பத்திரிக்கை, தொலைக்காட்சி) விக்கிக்கும் உள்ள வேறுபாடு இதுவே. அங்கு தனி மனித கருத்தினை பதிவு செய்யலாம்; இங்கு பிறர் வெளிபடுத்தியுள்ள கருத்துகளை ஆவணப்படுத்தலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 19:11, 2 சனவரி 2011 (UTC)
- அருண், உங்களுடைய கட்டுரை நல்ல கட்டுரை. சான்று தொடர்பான பகுப்புக்குள் அடக்குவது அதனை இன்னும் மேம்படுத்தும் நோக்கிலேயே. எனவே இது பற்றி வருத்தப்பட வேண்டியதில்லை. எனினும், "ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டுள்ள கட்டுரை" என்னும் பகுப்புத் தலைப்பை "சான்றுகள் தரப்பட வேண்டிய கட்டுரைகள்" என்று மாற்றினால் நல்லது என்பது எனது கருத்து. -- மயூரநாதன் 19:17, 2 சனவரி 2011 (UTC)
- நன்றி மயூரநாதன், விக்கிப்பீடியாவைப் பொருத்தமட்டில் உங்கள் தொடர் முயற்சியிலும், அணுகுமுறையிலும் ஆரம்பம் முதலே ஒரு மரியாதை உண்டு. இங்கே நீங்கள் சுட்டியப் பகுப்பு நியாயமானவை. இருப்பினும் குறிப்பிட்ட அவ்வரிகளை நீக்கிவிடுகிறேன். --HK Arun 05:12, 3 சனவரி 2011 (UTC)
- சுட்டிக்காட்டியமைக்கு நன்றி மயூரநாதன். “புற சான்றுகள் தேவைப்படும் கட்டுரைகள்” என்று பகுப்பின் பெயரினை மாற்றியுள்ளேன்.--−முன்நிற்கும் கருத்து Sodabottle (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
அருண், அருமையான கட்டுரை ஒன்றைத் தந்திருக்கிறீர்கள். நன்றி. உங்கள் கடுரையில் சுங்கிங் கட்டட நிர்வாகப் பணியகம் என்ற பகுதியில் மட்டும் இரு இடங்களில் ஆதாரம் தேவை என்ற வார்ப்புரு இடப்பட்டுள்ளது. ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் இவ்வாறன வார்ப்புருக்கள் இடப்பட்டுள்ளன. நீங்கள் இதற்கு ஆதாரம் திரட்ட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. வருங்காலத்தில் யாராவது இதனைச் சேர்க்கக்கூடும். கட்டுரையின் நடுநிலை கருதியே இவ்வார்ப்புருக்கள் இடப்படுகின்றன.--Kanags \உரையாடுக 21:47, 2 சனவரி 2011 (UTC)
கருத்து
தொகு//இலங்கை, இந்தியா போன்று அல்லாமல் சட்டம் நீதி ஒழுங்காகப் பேணப்படும் நாடுகளில் ஹொங்கொங்கும் முதன்மையான நாடுகளில் ஒன்றாகும்.// இவ்வரிகளில் "இலங்கை, இந்தியா போன்று அல்லாமல்" என்ற வரிகள் நீக்கப்பட வேண்டும். கலைக்களஞ்சியம் ஒன்றில் இவ்வாறான தகவல்கள் தேவையற்றது.--Kanags \உரையாடுக 23:42, 2 சனவரி 2011 (UTC)
- நன்றி சிறீதரன், இவ்வாக்கத்தில் இருந்து அவற்றை நீக்கிவிடுதல் தான் சரியானது. அத்தகவல்கள் குறிப்பிட்ட இவாக்கத்துடன் தொடர்பில்லாதவை. ("Additional information" எனும் வகையில் தேவையற்ற மேலதிக குத்திக்காட்டும் வகையிலாக அக்கருத்துக்கள் அமைந்துவிட்டன. உலகத்தில் எத்தனை நாடுகள் இருந்தாலும், இந்த இரண்டு நாட்டின் அரசியல் உற்கட்டமைப்புகள் ஊடான நாம் பட்ட/படும் தொடர்பாதிப்புக்களே எனது பேச்சிலும், சில நேரங்களில் எழுத்திலும் வெளிப்பட்டுவிடுகின்றன.) சுட்டிக்காட்டியமைக்கு நன்றி --HK Arun 05:06, 3 சனவரி 2011 (UTC)
- திருத்தத்துக்கு நன்றி, அருண். இப்போதுதான் விக்கிப்பக்கம் வர முடிந்தது. மேலே உங்கள் கேள்விகளுக்கு சோடாவும் சிறீதரனும் மயூரநாதனும் விடையளித்துள்ளதைப் பார்த்தேன். நல்லது. -- சுந்தர் \பேச்சு 05:31, 3 சனவரி 2011 (UTC)