பேச்சு:சுன்னி இசுலாம்

சுன்னி இசுலாம் என்னும் கட்டுரை இசுலாம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இசுலாம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

முஸ்லிம்கள் பயன்படுத்துவது போன்று சுன்னி என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இஸ்லாம் என்று பயன்படுத்துவதே சரியானது. இங்கு விக்கிப்பீடியாவில் நான் ஏராளமான பிழைகளைக் காண்கிறேன். பிழைகளைச் சரியென்று கண்டு அதற்கு ஆதரவும் கொடுத்திருக்கும் கருத்துக்கள் மிக்க வேதனை தருகின்றன.--Fahimrazick 14:21, 24 ஜூலை 2010 (UTC)

இந்த மதப்பிரிவின் பெயர் சுணி அல்ல, சுண்ணி அல்லது சுன்னி என்றே ஒலிபெயர்க்கப்படவேண்டும். தெளிவாக ஒலிபெயர்க்கக்கூடிய சொற்களையும் தவறவிடுவானேன்? --மு.மயூரன் 21:52, 10 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஆம், நானும் இதையேதான் நினைத்தேன். தமிழ்நாட்டில் இவர்களை சுன்னி முஸ்லிம் என்றுதான் குறிப்பிடுவார்கள். அரபு மொழியில் சுன்னா என்று இருப்பதால், சுன்னா என்று குறிப்பிடலாமா? அல்லது அல்லஸ் சுன்னா என்று குறிப்பிடலாமா? இசுலாமிய நண்பர்கள் கருத்து தெரிவித்தால் நல்லது. --செல்வா 22:01, 10 செப்டெம்பர் 2007 (UTC)Reply
சுண்ணி என ஒலிக்கும் போது தமிழ் இஸ்லாமியரது மனம் புண்படலாம் என கருதியே இதைத் தவிர்த்தேன்.--டெரன்ஸ் \பேச்சு 01:45, 11 செப்டெம்பர் 2007 (UTC)Reply

"சுணி முஸ்லிம்" சரியானது. வேண்டுமானால் மற்றவற்றிலிருந்து வழிமாற்றஞ் செய்யலாம்.--Kanags 08:38, 11 செப்டெம்பர் 2007 (UTC)Reply

எந்தவகையில் மனதைப்புண்படுத்தும் செயல் என்று புரியவில்லை. அவர்களது மதத்தின் பெயரைச் சரியாக உச்சரித்தல் அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதே. தமிழில் சுன்னி என்பது ஆண்குறியை குறிக்கப்பயன்படும் அங்கீகரிக்கப்படாத சொல்லாக வழங்கிவருதல் இச்சொல்லை ஒத்து ஒலிக்கும் விஷயங்களைத் தவிர்க்கும் மனத்தடையை உண்டாக்குகிறது என்று நினைக்கிறேன். அநேகமாக பிறமொழிச்சொற்களுக்கு இப்படி நேர்வதுண்டு. அதைப்பற்றி கவலை கொள்ளத்தேவையில்லை. அநேகமாக எல்லா தமிழ் ஊடகங்களிலும் இச்சொல்லை பிழையாகவே உச்சரிக்கிறாரக்ள். விக்கிபீடியா ஒரு நம்பகமான உசாத்துணையாக இருக்க வேண்டுமானால் கூடுமானவரை மூல உச்சரிப்பையே பயனப்டுத்தவேண்டும். மனத்தடைகள் எழ எந்தக்காரணமும் இல்லை. --மு.மயூரன் 12:52, 11 செப்டெம்பர் 2007 (UTC)Reply
மற்றது, இசுலாம் அல்ல இஸ்லாம் --மு.மயூரன் 12:53, 11 செப்டெம்பர் 2007 (UTC)Reply
ஓரளவிற்கு அல்லது கூடிய மட்டிலும் மூல ஒலிப்பை ஒட்டி இருத்தல் நல்லது. இசுலாம் என்பதே போதுமானது. அதேபோல சுவீடன் சுவிட்சர்லாந்து என்றால் போதும், ஸ்வீடன், ஸ்விட்ஸர்லான்ட் என்று தேவை இல்லை. அளவுக்கு அதிகமாக கிரந்த எழுத்துக்கள் வருவதும், முதல் எழுத்தாக ஸ் ஸெ முதலியன வருவதும் பலரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தமிழை, தமிழ் மரபுகளை கூடிய மட்டிலும் போற்றுவது கடமை. ஸ்வாமிநாதன் என்று பொதுவாக எழுதுவதில்லை, சுவாமினாதன் என்றுதான் எழுதுகிறோம். எந்த மொழியில் எழுதுகிறோமோ அந்த மொழி மரபுகளை போற்றுவது இயல்பு/நல்லது. --செல்வா 14:57, 11 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இஸ்லாம் என்பதே சரியானது, அரபு மொழிப் பிரயோகங்கள் பொதுவாக உச்சரிப்பின் அடிப்படையிலேயே தமிழில் எழுதப்படுகின்றன.அரபு மொழியை அவ்வாறே பிரயோகிப்பது நல்லது. பொதுவாக சுன்ணி என்றே இஸ்லாமிய அறிஞர்கள் பயன்படுத்துவது வழக்கம்.(சுண்ணி,சுணி அல்ல).

நண்பர்களே! bajaj நிறுவனத்தின் வண்டியொன்றின் பெயர், en:bajaj sunny என்பது. 10ஆண்டுகளுக்கு முன், அதன் விளம்பரத்தைக் கண்டு பெரும்பாலோனார் கிண்டல் செய்தனர்.இங்கு தமிழர்களின் ஒலிப்பு முறை மிகவும் தரம் தாழ்ந்தே காணப்படுகிறது. இந்நிலையில் ன, ணகர வேறுபாட்டினை சரியாக ஒலிப்பவர் மிக மிகக் குறைவு. தவறான புரிந்துணர்வை உருவாக்கும் பெயர்சொற்களைத் தவிர்த்தல் நலம். நாம் பொதுமக்களுக்காகவே கட்டுரைகளை உருவாக்குகிறோம். நம்மாலும் ஓரளவு அறியாமையை விரட்ட முடிந்தால் மகிழ்ச்சியே. எனது இலக்கு தமிழக பொது மக்களே.குறிப்பாக தமிழ் மாணவர்களுக்கே. தவறான ஒலிப்பை பலர் ஒலிப்பதை விட, சற்று குறையுள்ள ஒலிப்பை உருவாக்கும் சொற்களை அமைத்தல் நலம். இந்த அடிப்படையில் சன்னி இசுலாம்/ சன்னி முஸ்லீம் என்று அமைத்தல் நலத்தைத் தரும்.
மேலும், ஒரு வேண்டுகோள். en:Shia Islam என்பதில் history பகுதியைப்(Family Tree of 6 Islamic Nabi and Shia Islam) பாருங்கள். அது போல தொழில்நுட்பங்களே. விக்கிப்பீடியாவிற்கு வருவோரை மீண்டும் வர வைக்கும். அதனை உருவாக்க முயலவேண்டும். பெயரிடல் மரபு என்பது உலக மொழிகள் பலவற்றிலும் இருக்கும் சச்சரவு தான். அதனைத் தவிர்ப்போம். தொழில் நுட்ப வளம் கூட்டுவோம். ஒரு மொழியின் மேன்மையை உணர அம்மொழியை கற்றலே சிறப்பு. தெரிந்த மொழியில் புகுத்த இயலாது. எனக்கும் கருத்திட வாய்ப்பளித்தமைக்கு நன்றி.வணக்கம்.12:15, 6 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..

தலைப்பு மாற்றல்

தொகு
  • சுணி இசுலாம் என்ற பெயரிடும் போது, தற்போது உள்ளதை விட குறிப்பிட்ட ஒரு பெயர்சொல்லை மட்டுமே குறிக்கிறது. இப்பெயர் மாற்றலுக்கு எதிர்புள்ளவர்கள், தங்கள் எண்ணங்களைக் குறிப்பிடவும்.--≈ உழவன் ( கூறுக ) 12:43, 1 நவம்பர் 2013 (UTC)Reply
  1. மாற்றத்திற்கு   ஆதரவு-≈ உழவன் ( கூறுக ) 12:43, 1 நவம்பர் 2013 (UTC)Reply
    பாஹிம் கொடுத்த மூலச்சொல்லுக்கான, விளக்கத்தின் அடிப்படையில், தெளிவு பிறந்தது.--≈ உழவன் ( கூறுக ) 16:07, 6 நவம்பர் 2013 (UTC)Reply
  2. மாற்றத்திற்கு   ஆதரவு--Kanags \உரையாடுக 21:55, 1 நவம்பர் 2013 (UTC)Reply

எண்ணங்கள்

தொகு
  1. ஒலிப்புப் பிழை ஏற்படலாம். இதே பெயர் நீடிக்க வேண்டுகிறேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 14:04, 1 நவம்பர் 2013 (UTC)Reply
    ஒலிப்பு பிழை? தற்போதுள்ள பெயரில் பொருட்பிழை ஏற்படும் என்பதால், பெயர்மாற்றல் அவசியமல்லவா?--≈ உழவன் ( கூறுக ) 17:25, 1 நவம்பர் 2013 (UTC)Reply
  2. மாற்றம் தேவையில்லை என்பதே என் கருத்து. மற்ற மொழி பெயரை தமிழில் எழுதும் போது இது போன்ற சிக்கல்கள் வரும். இது தவறான மொழி பெயர்ப்பு என்றால் மட்டுமே மாற்ற விளையலாம். --குறும்பன் (பேச்சு) 22:12, 1 நவம்பர் 2013 (UTC)Reply
  3. உள்வாங்கும் மொழியில் தவறான பொருள் சுட்டும்படியோ பெருமையிழக்கும்படியோ ஒரு பெயர் அமைந்தால், திரித்து வழங்கலாம். Gundi sculpture என்று புகழ்பெற்ற கண்ணடி சிலைகள் உண்டு, இதனைத்தமிழில் சொல்லும்பொழுது கொண்டி அல்லது கெயிண்டி என்று திரித்துச் சொல்லலாம். செனரல் மோட்டார்சின் ஒரு தானுந்தின் பெயர் Nova என்பதாம், இது எசுப்பானிய மொழியில் No va = நகராத (வண்டி) என்று பொருள் தரும், ஆகவே பெயரை மாற்றினார்கள் என்பார்கள், ஆனால் இது உண்மையில்லை. என்றாலும் உள்வாங்கும் மொழியின் பண்பாட்டின் படி பொருந்தாத பொருள் இருந்தால் மாற்றி அழைக்கலாம். --செல்வா (பேச்சு) 00:53, 2 நவம்பர் 2013 (UTC)Reply
  4. இசுலாமிய நண்பர்கள் யாரிடமாவது இதைக் கேட்டு உறுதி செய்வது நல்லது. இங்குள்ளவாறுதான் இலங்கையில் அழைக்கிறார்கள். இது பற்றிப் பேசும் போது நானே தயங்கினாலும், அவர்கள் மிகவும் தெளிவாக இவ்வாறுதான் உச்சரிப்பார்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 01:43, 2 நவம்பர் 2013 (UTC)Reply
    நன்றி. இசுலாமியர் அல்லாத பெரும்பான்மையானவர்கள் தவறாகவும், கிண்டலாகவும் பயன்படுத்துவதால் மாற்ற எண்ணம். இது குறித்த இசுலாமிய நண்பர்களின் எண்ணங்களை எதிர் நோக்குகிறேன். ஒலிப்பு மிகச்சரியாக மூல ஒலி போல் வரவேண்டும் என்பதைவிட, அதன் பொருள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதே எனது எண்ணம். ஆதரவு தருக.--≈ உழவன் ( கூறுக ) 02:30, 2 நவம்பர் 2013 (UTC)Reply
  5. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை, அஃதாவது சுன்னாவைப் பின்பற்றுவோர் என்பதைக் குறிப்பதே இங்கே குறிப்பிடப்படும் சுன்னி என்ற சொல். மேலே கருதப்படும் சொல்லுக்கும் இதற்கும் ணகர னகர வேறுபாடிருப்பினும் பொருண்மயக்கம் ஏற்படுமென்று கருதுவதாயின் அஹ்லுஸ் ஸுன்னா என்றோ சுன்னா வழிமுறையினர் என்றோ குறிப்பிடுவது தகும். அதனால் சுன்னி என்று குறிப்பிடப்படும் அரபுச் சொல்லுக்குப் பகரமாக அதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் கையாளப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 15:03, 6 நவம்பர் 2013 (UTC)   விருப்பம் --செல்வா (பேச்சு) 15:38, 6 நவம்பர் 2013 (UTC)Reply

கூகுள் தேடலில்

தொகு

கூகுள் தேடலில்

Sun - சன் என்றுதானே உச்சரிக்கின்றோம் சன்னி இசுலாம் என்பதே சரி மீண்டும் பழைய தலைப்புக்கே நகர்த்தலாம் திருத்த வரலாறு - "சன்னி இசுலாம்" --ஸ்ரீதர் (பேச்சு) 15:25, 6 நவம்பர் 2013 (UTC)Reply
பாஃகின் கூறியது போல சுன்னா இசுலாம் அல்லது சுன்னா வழிமுறையினர் என்று கூறுவது பொருந்தும். --செல்வா (பேச்சு) 15:41, 6 நவம்பர் 2013 (UTC)Reply

சுன்னா, சுன்னி

தொகு

மேலே பாஹிம் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் இந்த உரையாடலை முடிவுக்குக் கொணர்வது மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. ஆங்கில விக்கியில் "சுன்னா" (en:Sunnah) என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் கீழ்வருமாறு உள்ளது: Sunnah is the way of life prescribed as normative for Muslims on the basis of the teachings and practices of Islamic prophet Muhammad and interpretations of the Quran. The word sunnah (سنة [ˈsunna], plural سنن sunan [ˈsunan], Arabic) is derived from the root (سن [sa-n-na] Arabic), meaning smooth and easy flow or direct flow path. The word literally means a clear and well trodden path... The sunnah is a source of Islamic law, second only to the Quran. The term "Sunni" denotes those who claim to practice these usages, as part of the Ummah.

எனவே, சுன்னா என்பது "மரபு", "மரபு வழி" என்று பொருள்படுவதும், "சுன்னி" என்பது "மரபினர்" அல்லது "மரபு சார்ந்த" என்று பொருள்படுவதும் தெரிகிறது. அதன் அடிப்படையில் "சுன்னி" என்னும் சொல் உரிச்சொல் பொருள் தருவதையும் அறியலாம்.

எனவே, தமிழ் விக்கியில் சுன்னா என்று கட்டுரைக்குத் தலைப்புக் கொடுத்துவிட்டு, வழிமாற்றாக சுன்னா வழிமுறை (இசுலாம்) எனவும் தரலாம் என்பது என் கருத்து.--பவுல்-Paul (பேச்சு) 15:46, 6 நவம்பர் 2013 (UTC)Reply


சுன்னி என்பதுதான் சரியான உச்சரிப்பு. தமிழ் பாட புத்தகங்களில் சன்னி என்றே இருக்கும். நாம் சுன்னா என அழைக்கலாம். பொருட்பிழை ஆகாது. (சுன்னா-நபிவழி; சுன்னி-நபிவழி நடப்பவர்)--அராபத் (பேச்சு) 13:10, 18 நவம்பர் 2013 (UTC)Reply

முடிவு

தொகு
  1. நேரடியாக சுன்னா என்ற சொல் வரும்படி, எப்பெயராக இருப்பினும், அதனை ஏற்க ஒப்புகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 13:08, 12 நவம்பர் 2013 (UTC)Reply
  2. மூல ஒலிப்பின் அடிப்படையில் தமிழின் மரபொட்டி சொற்களின் பயன் பெருக வேண்டும். சுன்னா என்ற சொல்/ பொருள் வரும்வகையில் ஒப்புகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 06:40, 13 நவம்பர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுன்னி_இசுலாம்&oldid=1688655" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுன்னி இசுலாம்" page.