பேச்சு:செஞ்சேரிமலை

\\== பிரச்சனைகள் == செஞ்சேரிமலை ஆரம்ப காலத்தில் இருந்தே கோவை மாவட்டத்தில் பல்லடம் வட்டத்தில் அமைந்துள்ளது. பின் 2009 ஆம் ஆண்டு திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகினர்.காரணம் தொடக்கத்தில் பல்லடம் வட்டமாக இருந்ததால் மக்கள் தாலுகா அலுவலகம் செல்ல மிகவும் அருகாமையில் இருந்தது.ஆனால் தனி மாவட்டமாக திருப்பூர் உதயமானதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.சூலூர் செல்ல அதிக தூரம் மற்றும் பேருந்து வசதி குறைவு.இதே நிலைமைதான் மாவட்ட தலைநகருக்கும்.கோவையை விட திருப்பூர் மிக அருகாமையில் உள்ளது.மக்கள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் கோவையை நாட வேண்டியது உள்ளதால் கடும் சிரமப்படுகின்றனர்.ஆரம்பத்தில் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் அருகில் இருந்தது. பேருந்து வசதி உள்ளது. ஆனால் தற்போது நெகமம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.இப்பகுதி மக்கள் நலன் கருதி செஞ்சேரிமலையை திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இது இழுப்பறியாக நீடிக்கிறது.\\

கலைக்களஞ்சியக் கட்டுரைக்கு ஒவ்வாது எனக் கருதுவதால் இப்பகுதியை நீக்கியுள்ளேன். மறுப்பு இருப்பின் கருத்துகளைப் பதிவிடவும் கோருகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:34, 16 சனவரி 2019 (UTC)Reply

@Booradleyp1: தாங்கள் நீக்கியது சரிதான். நானே இதை நீக்கலாம் என்று இருந்தேன், நீங்கள் தொகுத்துக் கொண்டிருக்கும் போது இடையூராக இருக்கும் என்று, பிறகு துப்புரவு பணி செய்யலாம் என்று இருந்தேன். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:43, 16 சனவரி 2019 (UTC)Reply

@Gowtham Sampath: செஞ்சேரிமலை என்ற ஊர் உண்மையில் எங்குள்ளது? திருப்பூர் மாவட்டமா அல்லது கோயம்புத்தூர் மாவட்டமா?. கட்டுரையில் முன்பின் முரணாக உள்ளதே?--Booradleyp1 (பேச்சு) 16:50, 16 சனவரி 2019 (UTC)Reply

@Booradleyp1: சரியாகத் தெரியவில்லை.
  • இதில் கோவை மாவட்டத்தைச் சேர்த்தது என்று உள்ளது.[1]
  • இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்று உள்ளது. [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செஞ்சேரிமலை&oldid=2632937" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செஞ்சேரிமலை" page.