பேச்சு:சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்
Untitled
தொகுசென்னை விமான நிலைய கண்ணாடி உடைந்தது என்ற கட்டுரை தொடர்பாக இங்கு உரையாடல் நடந்தது --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:27, 22 மார்ச் 2015 (UTC)
நீக்க வேண்டாம்
தொகுஒருமுறை வந்தால் செய்தி பலமுறை வந்தால்? கட்டுரையாக தொகுக்கப்பட வேண்டிய தலைப்புதான். தயவு செய்து நீக்க வேண்டாம். நன்றி -- மாகிர் (பேச்சு) 03:35, 22 மார்ச் 2015 (UTC)
- எதன் காரணமாக விமான நிலைய கண்ணாடி உடைந்தது. தற்போது எடுக்கப்பட்ட நடவெடிக்கைகள் என மேலும் கட்டுரையை வளர்த்தெடுக்கலாம். ஆனால் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் என்ற கட்டுரை சொற்ப அளவே இருக்கிறது. இக்கட்டுரையின் பகுதிகளை அக்கட்டுரையுடன் இணைத்து சென்னை வானூர் நிலைய கட்டுரையை மேம்படுத்தலாம். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:43, 22 மார்ச் 2015 (UTC)
- இவ்வாறு உடைவது தற்செயலானதா அல்லது சதி வேலையா அல்லது வேறு பிரச்சினையா? இது பற்றி ஏதாவது தகவல்கள் அல்லது ஆதாரங்கள் உள்ளனவா? கட்டுரையில் ஒன்று குறிப்பிடப்படவில்லை. என்னவிருந்தாலும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் கட்டுரையில் இச்செய்திகளை இணைப்பதில் தவறில்லை என்றே நானும் கருதுகிறேன். கட்டுரையை நீக்கினாலும் பரவாயில்லை:)--Kanags \உரையாடுக 06:54, 22 மார்ச் 2015 (UTC)
- போதிய ஆதாரங்களுடன் கட்டுரை துவங்கிய சில மணி நேரங்களிலேயே கட்டுரை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்குத் தெரிந்து ஆங்கில உள்ளடக்கங்களை மட்டுமே கொண்ட கட்டுரைகள், காப்புரிமை மீறிய கட்டுரைகள் போன்றவற்றைத் தான் விரைந்து நீக்க முடியும். போதிய ஆதாரங்களை உள்ளடக்கிய கட்டுரைகளை நீக்கும் போது, அதன் ஆசிரியர் அக்கட்டுரைக்காக செலவு செய்துள்ள நேரத்தை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள். நீக்குவதற்கு முன் பயனருக்கு அறியத்தந்து அவகாசம் தாருங்கள். தேவையான உள்ளடக்கங்களை, காரணங்களை சேர்க்க கோருவது நல்ல நடைமுறை. வேறு கட்டுரையுடன் இணைப்பதற்கு முன் கூட அவகாசத்துடன் பயனருக்கு அறியத்தாருங்கள். நன்றி - மாகிர் (பேச்சு) 08:01, 22 மார்ச் 2015 (UTC)
- இக்கட்டுரையை நீக்குவதற்குப் பதில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் எனும் கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கிறேன்.--இரா.பாலா (பேச்சு) 09:01, 22 மார்ச் 2015 (UTC)
- போதிய ஆதாரங்களுடன் கட்டுரை துவங்கிய சில மணி நேரங்களிலேயே கட்டுரை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்குத் தெரிந்து ஆங்கில உள்ளடக்கங்களை மட்டுமே கொண்ட கட்டுரைகள், காப்புரிமை மீறிய கட்டுரைகள் போன்றவற்றைத் தான் விரைந்து நீக்க முடியும். போதிய ஆதாரங்களை உள்ளடக்கிய கட்டுரைகளை நீக்கும் போது, அதன் ஆசிரியர் அக்கட்டுரைக்காக செலவு செய்துள்ள நேரத்தை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள். நீக்குவதற்கு முன் பயனருக்கு அறியத்தந்து அவகாசம் தாருங்கள். தேவையான உள்ளடக்கங்களை, காரணங்களை சேர்க்க கோருவது நல்ல நடைமுறை. வேறு கட்டுரையுடன் இணைப்பதற்கு முன் கூட அவகாசத்துடன் பயனருக்கு அறியத்தாருங்கள். நன்றி - மாகிர் (பேச்சு) 08:01, 22 மார்ச் 2015 (UTC)
ஐயம்...
தொகுஇந்தக் கட்டுரை குறித்து சகபயனர் எழுப்பிய கேள்விகளை ஆராய்ந்தபின்னர் நீக்கிய செயலுக்கு, 'அவசரகதி' எனப் பெயரிடப்பட்டது. செவிமடுத்து, பின்வாங்கி, வேண்டுகோளும் விடுத்தேன்; அதற்குப் பிறகு, இந்தக் கட்டுரை தொடப்படவில்லை! எதனையும் நீக்குதல் எளிது; ஆக்கம் கடினம் என்பதனை நானும் அறிவேன். எனினும் இங்கு விதிகள்/கொள்கைகள் அனைவருக்கும் பொதுவானது. இக்கட்டுரை குறித்து, உரியனவற்றை செயற்படுத்துவதற்கு காலக்கெடு என்ன? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:28, 27 மார்ச் 2015 (UTC)
- வழக்கமாக நந்தகுமார் இந்த இணைப்புகளைக் கவனமெடுத்துச் செய்வார். சில நாட்களாக அவரைக் காணவில்லை. இதனாலேயே தாமதப்பட்டிருக்கலாம். இப்போது இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:46, 27 மார்ச் 2015 (UTC)
தங்களின் உதவிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:58, 27 மார்ச் 2015 (UTC)