பேச்சு:சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic தகவல் சரிபார்ப்பு
இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது. கட்டுரையாளர்: சோடாபாட்டில் கல்லூரி: {{{College}}} |
தகவல் சரிபார்ப்பு
தொகுகட்டுரையில் பொதுவுடைமைக் கட்சிகள் 'தேசிய சனநாயகத்தில்' இருந்து 'மக்கள் சனநாயகமாக' மாற்றியதாக உள்ளது. ஆங்கில விக்கியில் நேர்மாறான தகவல் உள்ளது. இங்கு உள்ளதே சரியாக இருப்பதாகத் தோன்றினாலும் உறுதிப்படுத்த வேண்டுகிறேன். அடுத்தபடியாக 'national' என்பது இந்தியாவைப் பொருத்தவரை 'தேசியமாகக்' கொள்ள முடியாது என நினைக்கிறேன். இந்தியா ஒரு பல்லின நாடாகும் ('multinational country'). ஒரு ஆட்சியின்கீழ் இருக்கும் sovereign country என்றாலும் சில கட்சிகள் 'nationalism' என்று சொல்லுவது மாநில, இனக்குழு, மொழிக்குழு அளவிலாக இருக்கிறது. பொதுவுடைமைக் கட்சிகள் வலதுசாரிகளைப்போல தேசியக் கொள்கைகளைப் பின்பற்றியிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். இதைத் தெளிவாக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 15:04, 17 சனவரி 2012 (UTC)
- சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சுந்தர். ஆங்கில விக்கியில் இருப்பதே சரியானது. இங்கு கம்யூனிஸ்டுகள் கூறும் people/national என்பது நாம் சாதாரணமாக அரசியலில் காணும் பொருளில் கொள்ளக்கூடாது. 1950 வரை இந்திய கம்யூனிஸ்டுகள் “இந்தியா” என்ற “தேசிய” கருத்துருவை ஏற்கவில்லை. ஏன் “சனநாயகம்” என்ற கருத்துருவையும் ஏற்கவில்லை. அவர்கள் கொண்டிருந்த “people's democracy" என்பது தேசிய எல்லைகள் கடந்த பொதுவுடமைச் சமூகக் கொள்கை (வர்க்கப்போராட்டத்தில் தேசியம் கூடாதென்பது). ஆனால் தெலுங்கானா, மலபார் புரட்சிகள் தோற்கடிக்கப்பட்டபின்னர், அக்கொள்கையை மாற்றி இந்திய சட்டவரையரைக்குள் செயல்பட முடிவு செயதனர். அதுவே “தேசிய சனநாயகம்” என்னும் முழக்கம் சொல்கிறது. --சோடாபாட்டில்உரையாடுக 15:20, 17 சனவரி 2012 (UTC)
- ஓ, இந்தியாவின் சட்டவரையறைக்குள் வருவதற்காக மாற்றிக் கொண்டார்களா? இப்போது புரிகிறது. தி.மு.க. தனிநாட்டுக் கொள்கையை மாற்றி மாநில சுயாட்சி எனக் குறைத்துக் கொண்டது போலிருக்கிறது. -- சுந்தர் \பேச்சு 17:05, 17 சனவரி 2012 (UTC)
- இந்தக் கட்டுரையின் பெயர் சரியா? 1952 இல் சென்னை மாகாணம் என்ற பெயரைத்தான் புழங்கினார்கள் என்று நினைவு. 1956 இல் மொழிவழி மாநில அமைப்புக்குப் பின்னர்தான் சென்னை மாநிலம் என்ற பெயர் வந்தது. இதைச் சரிபார்க்க முடியுமா? கணிஞன் (பேச்சு) 06:15, 3 நவம்பர் 2021 (UTC)
- ஓ, இந்தியாவின் சட்டவரையறைக்குள் வருவதற்காக மாற்றிக் கொண்டார்களா? இப்போது புரிகிறது. தி.மு.க. தனிநாட்டுக் கொள்கையை மாற்றி மாநில சுயாட்சி எனக் குறைத்துக் கொண்டது போலிருக்கிறது. -- சுந்தர் \பேச்சு 17:05, 17 சனவரி 2012 (UTC)
- @KaNiJan2: இதன்படி 15-08-1947 சென்னை மாகாணம், 26-01-1950 சென்னை மாநிலம், 14-01-1969 தமிழ்நாடு.--Kanags \உரையாடுக 07:58, 3 நவம்பர் 2021 (UTC)