பேச்சு:செம்மொழி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic தற்போது 8 மொத்தம் 31
செம்மொழி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இந்த கட்டுரையை செம்மொழி கட்டுரையுடன் இணைக்கலாம்.--Arafat 07:42, 10 டிசம்பர் 2009 (UTC)

யுனெஸ்கோ செம்மொழி பிரச்சனை

தொகு

1.யுனெஸ்கோ கேட்கும் கட்டடக்கலைகள் எத்தனை வருடங்கள் பழமையாக இருக்க வேண்டும்?

2.ஏன் கல்லணையையோ (2000 ஆண்டுகள் பழமை), தஞ்சை கோயிலையோ காட்டக்கூடாதா? மேலும் பல கோயில்கள் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறதே?தென்காசி சுப்பிரமணியன்


அப்பகுதியை நீக்கி விட்டேன். யுனெஸ்கோ செம்மொழிகளை அறிவிப்பதில்லை. இது எப்படியோ வதந்தியாகக் கிளம்பி இங்கும் புகுந்து விட்டது. பின்வரும் சான்றுகளைப் பாருங்கள்
Some Tamil scholars have given the impression in articles and speeches that the United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO) has an authorised list of classical languages and that it has specified criteria for a classical language. To my letter of December 26, 2007 to UNESCO, I received a reply on January 24, 2007 that it had not established any criteria for designation of classical languages, and that it did not have a list of languages approved as classical languages. “It is a matter which is beyond UNESCO's mandate,” the letter said. (வா. செ. குழந்தைசாமி)
Despite repeated assertions that the United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO) had clearly laid out the criteria – of antiquity, serenity, idealism, universality, humanism, etc – for identifying classical languages it became clear that no such document existed (ஆ. இரா. வேங்கடாசலபதி)
--சோடாபாட்டில்உரையாடுக 05:54, 27 சூலை 2011 (UTC)Reply

செம்மொழி பட்டத்தினை பெற்றுதந்தது யார் என்று சேர்க்கலாமா?. அரசியல் சார்புடையதாக மாறிவிடும் அபாயம் உள்ளதா?.

தேவையற்றது என்றே கருதுகிறேன். --Anton (பேச்சு) 08:47, 18 ஆகத்து 2012 (UTC)Reply

தமிழின் கீழ் 6000 என்று காலம் சுட்டப்படுள்ளது. இன்னும் 50 ஆண்டுகள் கழித்தும் அதே 6000 என்றே படிக்கப்படும். எனவே கி.மு என்று காலம் சுட்டி குறிக்கலாம்.

நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:09, 18 ஆகத்து 2012 (UTC)Reply

இக்காலத்தை மீண்டும் பரீட்சிப்பது தேவையென நினைக்கிறேன். தமிழ் இலக்கியம் 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததா? --Anton (பேச்சு) 08:47, 18 ஆகத்து 2012 (UTC)Reply

முரண்

தொகு

ஆங்கில விக்கிக்கும் en:Classical language இங்குள்ள கட்டுரையும் முரண்படுகின்றதே? இதில் எது சரி? எ.கா:

  • இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.
  • The following languages are generally taken to have a "classical" stage. (29 மொழிகள்)

--Anton (பேச்சு) 08:55, 18 ஆகத்து 2012 (UTC)Reply

இன்னும் முரண்

தொகு

ஆங்கில விக்கிக் கட்டுரையில் தமிழின் செம்மொழித் தகுதி "Classical Tamil (Sangam literature c. 2nd century BC to 3th century AD, defined by Tolkāppiyam)" என்று, அஃதாவது செந்தமிழ் (சங்க இலக்கியம், கிட்டத்தட்ட பொ.கா.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் பொ.கா. 3 ஆம் நூற்றாண்டு வரை, தொல்காப்பியத்தினால் விவரிக்கப்பட்டவாறு) என்று கூறுகிறது. எனவே, நாம் செந்தமிழைப் போற்றுவதாயின் சங்க இலக்கியத்தை மட்டுமே போற்ற வேண்டும் என்று பொருளேற்படுகிறது.

அத்துடன், செஞ்சாவகம் (Old Javanese) போன்ற மொழிகள் இறந்துவிடவில்லை. ஏராளமான இலக்கியப் படைப்புக்கள் சாவக மொழியில் காணப்படுகின்றன. இந்தோனேசியாவில் செஞ்சாவகம் தழைக்கும் இடங்களுள் ஒன்றாக சுராக்கர்த்தா குறிப்பிடப்படுகிறது. சுராக்கர்த்தாவின் இன்றைய மன்னர் பண்டைய இலக்கியங்கள் பலவற்றைச் சேர்த்து வைத்திருக்கிறார். நானே அத்தகைய சிலவற்றை சுராக்கர்த்தா அரண்மனையில் பார்த்திருக்கிறேன். எனவே, அத்தகைய மொழிகள் ஆங்கில விக்கிக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றைத் தமிழில் விட்டு விட்டது சரியா?--பாஹிம் (பேச்சு) 03:43, 10 மே 2013 (UTC)Reply

தற்போது 8 மொத்தம் 31

தொகு

ஆங்கிலக்கட்டுரையில் முன்பு பயன்பட்ட செம்மொழிகளும் தரப்பட்டுள்ளது. அவற்றில் 23 தற்போதில்லை. பழைய சாவகம் தற்போதும் உள்ளதாக தெரிவதால் அதியும் சேர்க்க வேண்டும். மற்ற அனைத்தும் பட்டியிலிடப்பட வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:30, 14 சூலை 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செம்மொழி&oldid=1456629" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செம்மொழி" page.