பேச்சு:சைவ சித்தாந்தம்
குறிப்புகள்
தொகு"சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது? இந்த உலக இயக்கம் மூன்று சக்திகளால் ஆனது. அவை இச்சை, கிரியை மற்றும் ஞானம். இச்சை என்றால் விருப்பம் அல்லது ஆசை. கிரியை என்றால் செயல். ஞானம் என்றால் அறிவு. ஒன்றின் மீது ஆசை வைத்து அதை அடைவதற்கு வேண்டிய செயல் செய்யப்படுகிறது. அந்தச் செயலை அறிவதற்கும், பிறகு செயலாற்றுவதற்கும் அறிவு தேவைப்படுகிறது. உலகத்தில் எந்த இயக்கம் என்று பார்த்தாலும் மேற்சொன்ன மூன்று விளைவுகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. ஞானம் குறைவானால், செயலாற்றல் குறையும். ஆசை கை கூடாது. ஆசை தவறானால், அதை அடையும் அறிவும் இருந்தால் தவறான செயல் நடந்தேறும். இப்படி எல்லாமே மூன்று சக்திகளில் முடிந்து விடுகிறது." http://iniyathu.blogspot.com/
"தென்னிந்தியாவிலே சோழப் பேரரசு தோன்றிய காலம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதியாகும். கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகதிகள் யாவும் முதன் முறையாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசொன்றின் கீழ் அமைந்து சிறப்புமிக்க மாவட்டங்களாக ஒரு குடைக் கீழ் ஆளப்பட்டன. சோழப் பேரரசின் புகழ் உச்ச நிலையில் பட்டொளி வீசிய போது கங்கையும் கடாரமும் கலிங்கமும் இலங்கையும் அதன் அடிபணிந்து நின்றன. அராபியரும் சீனரும் அதன் வாணிபச் சிறப்பிற் பங்கு கொண்டிருந்தனர் இத்தகைய சிறப்புமிக்க காலப்பகுதியிலேதான் தமிழகத்திலே “சைவ சித்தாந்தம்” என்னும் பெருந்தத்துவம் சாத்திர வடிவம் பெற்றது. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் தலையாயது எனக் கொள்ளப்படும் சிவஞானபோதம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே எழுந்தது. மெய்கண்டார் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டென்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை." http://rethinavelu.tamilpayani.com/blog/
"சித்தாந்தம் என்ற சொல்லை முதன்முதலில் கையாண்டவரும் திருமூலரே!வேதம் பொதுவானது ஆகமம் சிறப்பானது. வேதம் ஆகமம் என்று இரண்டே நூல்கள்தான் உண்டு. பிற நூல்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்தவை. சிவாகமங்கள் வேதத்தின் உட்கருத்தை அதாவது சைவ சித்தாந்தத்தை எடுத்துரைக்கின்றன." http://karuppupaiyan.blogspot.com/2006/04/blog-post.html
"சைவ சித்தாந்தம் உலகியலோடு முரண்படா வண்ணம் திகழ்கிறது. பிறவியுற்று உலகியலில் வாழ்ந்து, கடந்து இறைவனை உணர்ந்து அடைதலே சைவ சித்தாந்தம். நாம் அன்றாடச் செயல்களை மாற்ற வேண்டும். அதற்கு மந்திரச் சொல் வேண்டும். அன்றாடச் செயல்கள் இன்பம், துன்பம் நிறைந்தது. ஆனால்,மந்திரச் செயல் அப்படியல்ல.மகிழ்வை மட்டுமே உணர்த்துகிறது." http://www.senthamil.com/viewarticle.asp?cid=74&catid=51
சுட்டிகள்
தொகு- http://www.geocities.com/Athens/2583/index.html; http://www.geocities.com/Athens/2583/bookgiri.html
- http://members.tripod.com/~Kanaga_Sritharan/muthucoomaraswamy.htm
- http://www.himalayanacademy.com/ssc/
- http://www.experiencefestival.com/saiva_siddhanta
- http://www.seekersway.org/seekers_guide/saiva_siddhanta_gurudeva_suvaya_subramuniyaswami_1_o.html Saiva Siddhanta - An Introduction
- http://www.intamm.com/samayam/epigraphical.htm EPIGRAPHICAL ECHOES OF SAIVA SIDDHANTA
- http://www.britannica.com/eb/article-9064981
- http://www.bhagavadgitausa.com.cnchost.com/primer_in_saiva_siddhanta.htm ***
கேள்விகள்
தொகு- சைவ சித்தாந்தம் வேதத்தை அடிப்படையாக கொண்டதா?
- சித்தாந்தம் வேதாந்தம் வேதம் அடிப்படை ஒற்றுமை வேற்றுமைகள் எவை?--Natkeeran 12:19, 20 ஜூலை 2006 (UTC)
குறிப்புகள்
தொகு“ | The thirteenth and the fourteenth centuries saw the appearance of the fourteen works of Saiva Siddhanta philosophy in Tamil.The basic Tamil work is civagnanapOtam. There is still a big controversy on whether this work is a translation of twelve aphorisms from an obscure or unattested portion of (Rauravagama). Saiva Siddhanta is a South Indian religion, found among the Tamils only. Besides the canonical fourteen works, there are subsidiary works and commentaries in Tamil only. Agamas are accorded a special status while the Vedas only a general status as basic works to the philosophy. The importance given to the Agamas makes South Indian Saivism, a distinctive form of Hinduism, in some respects. The Tamils try to derive the basic framework of the system from their own Twelve Sacred Books. | ” |
Religious Traditions of the Tamils Prof. A. Veluppillai http://www.geocities.com/Athens/5180/tamil.html
இட்டவர்: --Natkeeran 19:44, 11 ஆகஸ்ட் 2007 (UTC)
"சைவசித்தாந்தமும் அதன் சமூக நிலைப்பாடுகளும்" என்னும் தலைப்புப் பற்றிய கருத்து
தொகு“சைவ சித்தாந்தம் சாதியமைப்பைப் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு, அதனை வலியுறுத்துகின்றது” என்று குறிப்பிடப்பட்டு அதற்கு ஒரு நூல் உசாத்துணையாகக் காட்டப்பட்டுள்ளது. நூற்தலைப்பும் தெரியவில்லை. அந்த இணைப்பும் செயலற்று உள்ளது. சைவ சித்தாந்தம் சாதியமைப்பை ஏற்றுக்கொண்டு வலியுறுத்துகிறது என்று குறிப்பிடுவதற்குரிய மூலம் 14 சித்தாந்த சாத்திரங்களிலுள்ள ஏதேனுமொரு பாடலாக இருத்தல் வேண்டுமேயல்லாமல் இரண்டாந்தர மூலமாக இருத்தல் கூடாது. இந்து சமயத்தின் ஏனைய பிரிவுகளின் செல்வாக்கினால் வருணாச்சிரம தருமமும் அதனால் ஏற்பட்ட சாதிய அமைப்பும் சமூகத்தில் இருந்தது உண்மையே. ஆயினும் சைவசித்தாந்தம் வருணாச்சிரம தருமத்தை ஏற்கொண்டதுமில்லை, அதனை ஊக்குவித்ததுமில்லை. "மாலற நேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரனெனத் தொழுமே" என்பது சிவஞானபோதம். சைவசித்தாந்தம் ஆகமங்களையும் திருமுறைகளையும் ஆதாரமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. திருமுறைகளில் அக்கால சமூகத்தில் நிலவிய சாதிய அமைப்பினைத் தள்ளி பக்கதியை வளர்க்கும் ஆதரங்களே உள்ளனவன்றி அங்கு சாதியத்தை ஊக்குவிக்கும் கருத்துக்கள் இல்லை. உதாரணமாக மேல்வரும் அப்பர் சுவாமிகளது பாடலைக் குறிப்பிடலாம்.
சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே
பெரியபுராணத்திலும் பலவிதமான சமூகத்தைச் சேர்ந்தவர்கயும் நாயன்மார்களாக இருப்பதைக் காணலாம். ஆகவே சைவசித்தாந்தம் சாதியமைப்பை ஏற்றுக்கொண்டு ஊக்குவிக்கிறது என்பது ஆதாரமற்றது. ஆதாரமிருப்பின் அதற்குரிய சிந்தாந்த நூலில் உள்ள பாடலைக் குறிப்பிடவும். ஆதாரம் சித்தாந்த நூல்களில் பெறமுடியாவிடின் இக்கருத்தை நீக்கிவிடவும். --Santharooban (பேச்சு) 04:06, 24 சூலை 2021 (UTC)
- @Santharooban: கார்த்திகேசு சிவத்தம்பி எழுதிய
தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் என்னும் நூலில் சைவ சித்தாந்தம் சாதியமைப்பை ஏற்றுக் கொண்டது என்று எழுதியுள்ளார்.[1]--தாமோதரன் (பேச்சு) 04:33, 24 சூலை 2021 (UTC)
- ↑ கார்த்திகேசு சிவத்தம்பி (1983). தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும். தமிழ்ப்புத்தகாலயம், சென்னை. p. 124.