வாருங்கள்!

வாருங்கள், Santharooban, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--ஜெ.மயூரேசன் 09:53, 11 ஜனவரி 2010 (UTC)

வணக்கம் ஜெ.மயூரேசன்

உங்களது அழைப்பிற்கு மிகவும் நன்றிகள்

சாந்தரூபன் --Santharooban 06:24, 12 ஜனவரி 2010 (UTC)

யோக சுவாமிகள் தொகு

வணக்கம், நீங்கள் யோக சுவாமிகள் கட்டுரையில் செய்த சில மாற்றங்களைக் கவனித்தேன். அவரது சீடர்கள் தொடர்பில் சில பகுதிகளை அழித்திருக்கிறீர்கள். இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. என்னிடம் யோக சுவாமிகள் பற்றி பல நூல்கள் உள்ளன. நீங்கள் நீக்கியவர்கள் எவரும் யோகரின் சீடர்களாக இருந்ததில்லை என்று எந்நூலிலும் நான் காணவில்லை. செல்லத்துரை சுவாமிகளின் நூலை நான் பார்க்கவில்லை. அதில் இது குறித்து ஏதேனும் எழுதியுள்ளாரா என அறியத் தாருங்கள். இங்குள்ள யோகசுவாமிகளின் சில பக்தர்களிடம் விசாரித்தும் பார்த்தேன். கட்டுரையில் உள்ள யோகசுவாமிகள் கதிரை ஒன்றில் இருக்கும் படம் எடுத்தவர் இங்கு தான் வசிக்கிறார். எவரும் எதிர்மறையான கருத்தைத் தெரிவிக்கவில்லை. நன்றி.--Kanags \பேச்சு 10:10, 12 ஜனவரி 2010 (UTC)

சாந்தரூபன், நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, சுவாமிகளின் வரலாற்றில் ஹவாய் சுவாமிகள் போன்றோரின் பெயர்கள் கட்டாயம் பதியப்படவே வேண்டும். அதனை யாரும் மறுக்க முடியாது. யோகசுவாமிகள் பற்றிய பல நூல்களில் இவர்களைப் பற்றியும் பலர் எழுதியிருக்கின்றார்கள். இவர்கள் நீங்கள் விரும்பியவாறு வாழாமல் இருந்திருக்கலாம். அது குறித்து வேறு விதத்தில் விவாதிக்க வேண்டும். குமார் மாஸ்டர் எழுதிய கடிதத்தின் நகலை முடியுமானால் எனக்கு அனுப்பி வையுங்கள் (kstharan@gmail.com). நன்றி.--Kanags \பேச்சு 10:29, 18 ஜனவரி 2010 (UTC)
வணக்கம், அந்தக் கடிதங்களை இங்கு விக்கியில் தரவேற்றியிருந்தீர்கள். அவை பதிப்புரிமை மீறப்பட்டமையால் அவற்றை நீக்கியுள்ளேன். இப்படியானவற்றை தயவு செய்து விக்கியில் பொதுவாகத் தர வேண்டாம். பொதுவாகக் காப்புரிமையற்ற படிமங்களை (படங்களை) மட்டுமே இங்கு பதிவேற்றுங்கள். அவற்றை எனது gmail முகவரிக்குத் தான் அனுப்பச் சொல்லியிருந்தேன். நன்றி.--Kanags \பேச்சு 07:35, 22 ஜனவரி 2010 (UTC)
சாந்தரூபன், பதிப்புரிமையைப் பற்றி சிறீதரன் கனகு கூறியது மிகவும் சரியே. எழுதியவரது ஒப்புதல் இல்லாமல் இங்கு பொதுவில் இடுவது விக்கியின் கொள்கைகளுக்கு முரணானது. எழுதியவரது நோக்கம் பற்றியெல்லாம் உய்த்துணர விக்கியின் கொள்கையில் இடம் இல்லை. இதனை நீங்கள் அருள்கூர்ந்து தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். --செல்வா 13:34, 25 ஜனவரி 2010 (UTC)

மீண்டும் வணக்கம், ”சிவாய சுப்ரமணியசுவாமி, கௌரிபாலா (ஜெர்மன் சுவாமி), பரிநரிக்குட்டி சுவாமி (அவுஸ்திரேலிய இளைஞர்) ஆகியோரும் சுவாமிகளின் சீடர்கள் எனப் பின்வந்தோரால் போற்றப்படுகின்றனர்” என்ற நடுநிலையான வரிகளை நான் மீண்டும் சேர்த்திருக்கிறேன். உங்களுக்கு இவர்கள் சுவாமிகளின் சீடர்களாக இல்லாமலிருக்கலாம். ஆனால் பலர் இவர்களைச் சீடர்களாகப் போற்றுகின்றனர். எனவே இவற்றை நீக்கவேண்டாம் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 09:24, 2 திசம்பர் 2010 (UTC)Reply

நன்றிகள் தொகு

எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:06, 17 சூன் 2011 (UTC)Reply

நிர்வாக அணுக்கம் - நன்றி தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:48, 28 சூன் 2011 (UTC)Reply

முத்துக்குமார் தொகு

வணக்கம், சாந்தரூபன், தீக்குளிப்பில் இறந்த முத்துக்குமாரனின் படிமத்தை வேறொரு முத்துக்குமாரின் படிமத்தினால் பிரதியிட்டிருக்கிறீர்கள். இதனாலேயே இக்குழப்பம். இவரது படிமத்தை வேறொரு பெயரில் தரவேற்றுங்கள். படிமப் பெயர் ஒன்றாக இருந்தால் தரவேற்றும் போது விக்கிப்பீடியா கேள்வி கேட்கும். இதே பெயரில் படிமம் ஒன்று உள்ளது என்று. இப்படிமத்தின் வரலாற்றைப் பாருங்கள்: [1]--Kanags \உரையாடுக 10:08, 12 சூலை 2011 (UTC)Reply

சாந்தரூபன், இது கன்கஸ் கூறியபடி ஒரே பேரில் இரு படிமங்கள் பதிவேற்றப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம். தற்போது பழைய படிமம் (தீக்குளித்து இறந்த முத்துக்குமரனின்) படத்தை மீள்வித்திருக்கிறேன். எனவே ஈழத்து எழுத்தாளர் முத்துக்குமரனின் படிமத்தை வேறொரு பெயரில் பதிவேற்றும்படி (முன்னெழுத்து சேர்த்து) கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:16, 12 சூலை 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011 தொகு

 

Hi Santharooban,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

காப்புரிமை பற்றிய குறிப்புகள் தொகு

சாந்தரூபன் வணக்கம். தங்களால் பதிவெற்றம் செய்யப்பட்ட பின்வரும் படிமத்தில் காப்புரிமை பற்றிய குறிப்புகள் இடப்படவில்லை.

படிமம்:001.jpg தொடர்பான பிரச்சினை தொகு

 
Image Copyright problem

இந்தப்படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவல் இணைக்கப்படவில்லை.படிமம் ஒன்று எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் இணைக்கப்படுவதன் மூலம் படிமத்தின் காப்புரிமை சரிபார்க்கப்படலாம்.தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான 2011 அக்டோபர் 12 முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். கால அவகாசம் வேண்டுமாயின் அதைப்பற்றி படிம பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.

  • படிமத்தை வேறு இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றீர்களானால் அவ்விணையத்தள முகவரியையும் அவர்களின் காப்புரிமை விதிகளையும் தரவும். மேலும் பொருத்தமான காப்புரிமை வார்ப்புரு ஒன்ரையும் படிம பக்கத்தில் இணைத்துவிடவும்.
    • படிமத்தை நீங்கள் ஆக்கியிருந்து GFDL பொது உரிமச்சான்று மூலம் பகிர விரும்பினால் {{GFDL-self}} என்ற வார்ப்புருவை இடலாம்.
    • படிமம் கட்டுப்பட்ட உள்ளடக்கங்களின் காரணிகளுக்கு ஒத்துப்போவதாக கருதினால் எடுத்துக்காட்டாக {{fairuse|கட்டுரைப்பெயர்}} என்ற வார்ப்புருவை இடலாம்.

நீங்கள் வேறு படிங்களையும் பதிவேற்றியிருந்தால் அவற்றை எங்கிருந்து பெற்றீர்கள் மற்றும் அவற்றில் காப்புரிமை தகவல்களையும் இட்டுள்ளீர்களா என ஒரு முறை இந்த இணைப்பின் வழிச்சென்று சரிபார்க்கவும்.சஞ்சீவி சிவகுமார் 23:11, 12 அக்டோபர் 2011 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Santharooban&oldid=3184768" இலிருந்து மீள்விக்கப்பட்டது