பேச்சு:சொழாந்தியம்


”சொழாந்தியம் என்பவை இடைக்காலச் சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும். இவற்றில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பசிபிக் தீவுகள் வரையில் சோழர்களால் பயனங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கூறுகிறார்.”

எரித்திரியக் கடல் பெரிப்ளஸ் எழுதியவர் இடைக்கால சோழர் காலத்துக்கு முந்தையவர் ஆயிற்றே (கிபி 1ம் நூற்றாண்டு). இது முரணாக இருக்கிறதே?.--சோடாபாட்டில்உரையாடுக 14:05, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Sodabottle,அதில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோளை ஒரு நூலக புத்தகத்தில் இருந்து குறிப்பெடுத்து வைத்திருந்தேன். இவை இரண்டில் ஒன்றாக இருக்கும். அதை நான் சரிபார்க்கிறேன். ஒருவேளை மேற்கோளில் தவறு இருக்கலாம். நாளை தெரிந்துவிடும்.--தென்காசி சுப்பிரமணியன் 14:41, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அந்த புத்தகத்தை கண்டாகிவிட்டது. தவறு என்னுடையதே. நான் சொழாந்தியம் கட்டுரை எழுதும் போது சோழர்களின் சீனத் தொடர்பு கட்டுரையையும் எழுதியதால் இரண்டிலுள்ள காலத்தையும் மாற்றி எழுதிவிட்டேன். மேலும் அந்த கட்டுரையில் காட்டப்பட்ட இரண்டாம் மேற்கோளும் சங்க காலம் பற்றிய புத்தகமே என்பதையும் கவனிக்கவில்லை. முக்கியமான தவறை சுட்டிக் கட்டியதற்கு நன்றி. பெரிய தவறை தடுத்துவிட்டீர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 14:41, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply

:-) உங்களுக்குத் தெரியுமா பரிந்துரையினையும் ஏற்றார் போல மாற்றிவிடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 14:48, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply

மாற்றியாகிவிட்டது. தகுந்த நேரத்தில் உங்களைப் போன்றவர்கள் வழிகாட்டுதலாலேயே விக்கித்தரம் மேம்படுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் 15:04, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply

சொழாந்தியம் பெயர் பற்றிய கருத்து

தொகு

சொழாந்தியம் என்ற பெயர் தென் அமெரிக்காவின் சோழர்கள் (ஆராய்ச்சி நூல்) இல் இருந்து எடுத்தது. அங்கு தான் இத்தகவல்களை பார்த்தேன். அவர் கொடுத்த மேற்கோளையே இங்கும் கொடுத்தது. ஆனால் நீங்கள் கொடுத்த இணைப்பு கட்டுமரம் மட்டும் கடற்படையில் பயன்படுத்தப்பட்டதாகக் காட்டுகிறது. மேலும் சொழாந்தியம் தென்னிந்தியர் அனைவரும் உபயோகித்தனர். அதனால் இதை சோழர் தான் கண்டறிந்தனரா என்பது ஐயம் தான். தனி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:13, 14 சூலை 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சொழாந்தியம்&oldid=1456528" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சொழாந்தியம்" page.